E.கருணாகரன்
264/L460
Auto Engine
Dressing
264/L460
Auto Engine
Dressing
நார்ச்சத்து அதிகமில்லாத பச்சரிசியும், கோதுமை மாவும் சாப்பிடுவதை விட நார்ச்சத்து அதிகமுள்ள வரகும், சாமையும், திணையும், குதிரைவாலியும் நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்று நோய், இதய நோய் தவிர்க்கலாம். பண்டைக் காலங்களில் நார்ச்சத்து, மலமிளக்கியாக மட்டுமே செயல்பட்டதாக நினைத்த ஆராய்ச்சியாளர்கள் இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும், சர்க்கரை திடீரென ரத்தத்தில் உயராமல் இருக்கவும், பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துவதோடு, நவீன உணவியல் உலகில் அளவிலா நார்ச்சத்தைச் சுமந்து இருக்கும் வரகும், சாமையும், திணையும், குதிரைவாலியும் எவ்வளவு அற்புதமான தானியங்கள்! இவற்றில் இருந்து வெறும் சோறு மட்டுமல்ல, அரிசி மாவில் செய்யும் அத்தனை தின்பண்டங்களையும் செய்ய முடியும்.
வரகுக்கு கத்தரிக்காய் காரக்குழம்பு சரியான சேர்க்கை. இதை ஔவையார், `வரகரிசியும் வழுதுணங்காயும்' என்று கூறியிருக்கிறார். வழுதுணங்காய் என்றால் கத்தரிக்காய் என்று பொருள். சாமையில் சோறாக்கி கெட்டித் தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் தயிர் சாதப் பிரியர்கள் வாழ்நாள் முழுவதும் சாமைத் தயிர் சாதம்தான் வேண்டும் எனக் கேட்பார்கள். குதிரை வாலி, பாசிப்பருப்பு, மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வெண்பொங்கல் பொங்கி, நெய்யில் அதை மிதக்க விட்டும், மேலே கொஞ்சம் வறுத்த முந்திரி பருப்புகளை போட்டுச் சாப்பிட்டால் மீண்டும் குதிரைவாலியைத் தேடுவீர்கள்.
ஆகவே, நண்பர்களே... புரதம், இரும்புச் சத்து, உயிர்ச்சத்து மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள மேற்கூறிய சிறு தானியங்களைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது உறுதி <ஆதாரம்: விகடன்>
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா