Showing posts with label 2014 06 June. Show all posts
Showing posts with label 2014 06 June. Show all posts
Saturday, 28 June 2014
அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்
B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822
சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு
சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு
சர்க்கரை வியாதிக்கு எத்தகைய உடல் வாகுடையவர்கள், எப்படிப்பட்ட எண்ணெய்க் குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
வாத உடம்பு உடையவர்கள் நெல்லிக் காய் தைலம், கரிசாலைத் தைலம், வாத ராஜாங்கத் தைலம் போன்றவைகளைத் தேய்த்து குளிக்க வேண்டும். கப உடம்புடையவர்கள் நொச்சி தைலம், சுக்குத் தைலம், இஞ்சித் தைலம், வேறு முறைகளில் தயார் செய்யப்பட்ட கரிசாலைத் தைலம் போன்றவைகளைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் ஊறும் நேரம் 1\2 மணியிலிருந்து 1 மணி நேரம் வரை. சீயக்காய்த் தூள் தேய்த்து வெண்ணீரில் தான் குளிக்க வேண்டும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம், உடல் உறவு, குளிர்ச்சியான பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் செய்யும் போது உள்ளுக்கும் மருந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை வியாதி பூரணமாக குணமாகும். <ஆதாரம்: உயிர்நாடி மாத இதழ்>
Labels:
2014 06 June,
B.டில்லி,
கட்டுரை
மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்
எவரெடி தொழிலகம்
இதயத்திற்கு வலிமை தரும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால், அது எப்பேர்ப்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும். டானிக்காக செயல்படும். தொற்று நோய்கள் ஏதும் தொற்றாது. இதயம், சிறுநீரகம் பலப்படும்.
நெல்லிச் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
Labels:
2014 06 June,
அற்புதம் ஜேசுராஜ்,
கட்டுரை
மனிதன் மகத்தானவன்
J.ஜேசுதாஸ்,
மாநிலச் செயற்குழு
தமுஎகச
மாநிலச் செயற்குழு
தமுஎகச
இரண்டாயிரம் ஆண்டின் உலகின் மாபெரும் தத்துவ ஆசான் காரல் மார்க்ஸ் தத்துவம் குறித்துக் கூறும்போது `ஆகப்பெரும் தத்துவஞானத் தேடலில் மதங்கள் குறித்தான ஞானம் ஒரு முன் தேவையாக இருக்கிறது' என்கிறார். நாம் புரிந்து கொள்ளும்படி சொல்ல வேண்டுமெனில் மதங்கள் பற்றிய அறிவு அதன் தோற்றம் வளர்ச்சி நவீன காலத்தில் அது எப்படி பரிணாமம் பெற்றிருக்கிறது என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் அது வரலாற்று காலத்துக்கும் முந்தையது, மிகவும் பழைமையானது. எளிதில் புரிந்து கொள்ளவும் இயலாதது.
இந்த உலகில் வாழ்ந்தாக வேண்டிய அவசியத்தில் மனிதர்கள் இயற்கையை எதிர்த்து வாழ்க்கையை நடத்திய காலத்தில் தோன்றியது மதம். இக்காரணத்தாலேயே உலகின் அனைத்து மூலைகளிலும் வாழ்ந்த மனிதக் கூட்டங்கள் தங்களுக்கான இறைவனை, அவரவர்கள் புரிந்து கொண்ட வகை வகையான கடவுளர்களை அதன் கொள்கைகளை வரையறுத்துக் கொண்டனர். ஆதி மனிதர்கள் தாய்வழி சமூக மக்கள், தன்னைப் பெற்றெடுத்த தாயைத் தான் அவர்களுக்குத் தெரியும். தனது தந்தை யார் என்பதை அறியாதவர்கள். ஒரு குலக்குழுவைச் சார்ந்த அவர்கள் இன்னோர் குலக்குழுவின் பெண்களுக்கு கணவன்மார்கள். வரைமுறையற்ற புணர்வு கலாச்சாரம் கொண்ட சமூகம் அது. எனவே, ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவன் அல்ல, அதே போல ஒரு ஆணுக்கு ஒருத்தி மட்டுமே மனைவியுமல்ல. அச்சமூகத்தின் வயது முதிர்ந்த அன்றைய வேட்டை சமூகத்தில் பெண்ணே, சமூகத்தை வழிநடத்தியவள். இது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.
Labels:
2014 06 June,
J.ஜேசுதாஸ்,
கட்டுரை
விசேஷ செய்திகள் வாசிப்பது...
அனந்த நாராயணன்
275\க192
275\க192
- தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் `ரெட் சொசைட்டி'யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
- மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து அறிய 9842062501, 9894067506 என்ற எண்களைத் தொடர்பு கொண்டால் போதும்.
- பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை வேண்டின் அதை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டிட்யூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கிறது. விபரங்கள் பெற 9916737471 எண்ணில் அழைக்கவும்.
Labels:
2014 06 June,
அனந்த நாராயணன்,
கட்டுரை
ஓசூரில்... ஒப்பந்தத் தொழிலாளியின் அவலநிலை
ஓசூர் மிகப்பெரும் தொழில்கள் நிறைந்த நகரமாக மாறியுள்ள நிலையில் அசோக்லேலண்ட், டிவிஎஸ் தொழிற்சாலைகள் மற்றும் இவை சார்ந்த சிறு, குறுந்தொழிற்சாலைகள் அனைத்திலும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரமற்ற ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வேலை பாதுகாப்பு, போதிய சம்பளம், மருத்துவ வசதிகள், டஊ, உநஐ, ஏதுமற்ற நிலையில் ரூ.5,000\_ முதல் ரூ.7,500\_ வரை சம்பளத்துடன் 10 மணி, 12 மணி நேரமெனக் கடுமையாக உழைக்கின்றனர்.
அசோக் லேலண்ட் யூனிட் ஐ, ஐஐ இரண்டிலும் நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வந்து செல்கின்றனர். குறிப்பாக, சொடக்கோ மெக்லன், எஸ்பிஎஸ், எஸ் ஐ பைப்லைன், டிவிஎஸ் லாஜிஸ்டிக் என பல கம்பெனிகளில் கான்டிராக்ட் தொழிலாளர்களும் மிக மோசமான சூழ்நிலையிலேயே பணிபுரிந்து வருகின்றனர். இந்தக் கம்பெனிகள் பல தொழிலாளர்களுக்கு டஊ, உநஐ செலுத்துவதில்லை. இந்நிலையில், சமீபத்தில் அசோக் லேலண்ட் யூனிட் ஐஐல் ஒப்பந்தத் தொழிலாளி விஜயராகவன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Labels:
2014 06 June,
ஆசிரியர்க்குழு,
கட்டுரை
ஊடகங்களின் சார்புநிலை
சு.சக்கீர்
240\J030
240\J030
சுதந்திரப் போராட்ட காலத்தில், சமூக நல இயக்கங்கள் தங்கள் எண்ணங்களைப் பரப்புவதற்கும், அரசாங்க அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவதற்கும், பத்திரிக்கைகளை நடத்தியுள்ளன. திலகர் கேசரி இதழை நடத்தினார். மகாத்மா காந்தி யங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிகைகள் வாயிலாக பல்வேறு கருத்துப் போராட்டங்களுக்கு விதை விதைத்தார். சுதேசாபிமானி என்ற பத்திரிக்கை நடத்தியதற்காக ராமகிருஷ்ணன் என்ற தேச பக்தர், அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டு செல்லுலார் சிறையிலேயே மாண்டு போனார். லாலா லஜபதி ராய் நடத்திய தி பீப்பிள், நேருவின் முன்முயற்சியால் லக்னோவிலிருந்து வெளியான தி நேஷனல் ஹெரால்டு ஆகிய ஆங்கில பத்திரிகைகள் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தைக் கூர்மை பெறச் செய்ததில் பெரும் பங்கு ஆற்றின. டாக்டர் அம்பேத்கர் மூகநாயக், பகிழ்க்ரித் பாரத், சமதா போன்ற பத்திரிகைகளின் வாயிலாக தமது சமூக சிந்தனைகளைப் பதிவு செய்தார்.
Labels:
2014 06 June,
கட்டுரை,
சு.சக்கீர்
பூவா? தலையா
உ.புஷ்பராஜ்
255\J158
255\J158
இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்திலும் கூட குறிப்பாக நமது இந்திய தேசத்தில் திருமணமான பெண்கள் சந்திக்கும் சிக்கல்களுள் தலையாய சிக்கல் மருமகள் பெண் குழந்தையாக ஈன்றெடுக்கிறாளே என்று கணவர் வீட்டார் ஏசுவதும் உண்டு. மேலும், இவளுக்கு ``ஆண் குழந்தையே பிறக்காது, நம் வம்சம் தழைக்க ஓர் ஆண் வாரிசு வேண்டுமென்றால், நம் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கட்டி வைக்க வேண்டியதுதான்'' என்று அக்கணவரின் பெற்றோரும், சுற்றமும் அப்பெண்ணை புறம்தள்ளி வைக்கிறார்கள்
Labels:
2014 06 June,
உ.புஷ்பராஜ்,
கட்டுரை
ஆரோக்கியமாக வாழ என்ன வழி
E.கருணாகரன்
264/L460
Auto Engine
Dressing
264/L460
Auto Engine
Dressing
நார்ச்சத்து அதிகமில்லாத பச்சரிசியும், கோதுமை மாவும் சாப்பிடுவதை விட நார்ச்சத்து அதிகமுள்ள வரகும், சாமையும், திணையும், குதிரைவாலியும் நம் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்று நோய், இதய நோய் தவிர்க்கலாம். பண்டைக் காலங்களில் நார்ச்சத்து, மலமிளக்கியாக மட்டுமே செயல்பட்டதாக நினைத்த ஆராய்ச்சியாளர்கள் இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும், சர்க்கரை திடீரென ரத்தத்தில் உயராமல் இருக்கவும், பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துவதோடு, நவீன உணவியல் உலகில் அளவிலா நார்ச்சத்தைச் சுமந்து இருக்கும் வரகும், சாமையும், திணையும், குதிரைவாலியும் எவ்வளவு அற்புதமான தானியங்கள்! இவற்றில் இருந்து வெறும் சோறு மட்டுமல்ல, அரிசி மாவில் செய்யும் அத்தனை தின்பண்டங்களையும் செய்ய முடியும்.
வரகுக்கு கத்தரிக்காய் காரக்குழம்பு சரியான சேர்க்கை. இதை ஔவையார், `வரகரிசியும் வழுதுணங்காயும்' என்று கூறியிருக்கிறார். வழுதுணங்காய் என்றால் கத்தரிக்காய் என்று பொருள். சாமையில் சோறாக்கி கெட்டித் தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் தயிர் சாதப் பிரியர்கள் வாழ்நாள் முழுவதும் சாமைத் தயிர் சாதம்தான் வேண்டும் எனக் கேட்பார்கள். குதிரை வாலி, பாசிப்பருப்பு, மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து வெண்பொங்கல் பொங்கி, நெய்யில் அதை மிதக்க விட்டும், மேலே கொஞ்சம் வறுத்த முந்திரி பருப்புகளை போட்டுச் சாப்பிட்டால் மீண்டும் குதிரைவாலியைத் தேடுவீர்கள்.
ஆகவே, நண்பர்களே... புரதம், இரும்புச் சத்து, உயிர்ச்சத்து மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள மேற்கூறிய சிறு தானியங்களைச் சமைத்துச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது உறுதி <ஆதாரம்: விகடன்>
Labels:
2014 06 June,
E.கருணாகரன்,
கட்டுரை
நீதானே என்தன் பொன்வசந்தம்
S.கெஜராஜ்
375\K700
Mechatronics
தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டுமென கற்பனையில் கோட்டை கட்டி வைத்திருந்தானோ அதே அழகான உருவம் அந்த பில் கவுண்டரில் தர்ம சங்கடத்தில் நெளிந்த போது ஆச்சரியத்துடன் அவளது அருகில் நெருங்கி விசாரித்தான் வினோத். ``இல்ல சார்.. பில் போட்டுட்டேன். என்னுடைய டெபிட் கார்டை எடுத்து வர மறந்துட்டேன்'' என்றாள் தயங்கியபடி ஸ்வேதா. நீங்க தப்பா நினைக்கலன்னா நான் குடுக்குறேன்'' என்றான் வினோத். மிகவும் தயங்கிய ஸ்வேதா அரைகுறை மனதுடன் வேறு வழியில்லாமல் ``நாளைக்கு இதே இடத்தில் உங்களிடம் திருப்பிக் கொடுத்துடறேன் சார். ரொம்ப தேங்க்ஸ் சார்'' என்றாள். மனதில் நிறைந்திருந்த தன் வருங்கால மனைவியை நேரில் சந்தித்ததை நினைத்து நினைத்து உறக்கமின்றி புரண்டு படுத்தான் வினோத்.
375\K700
Mechatronics
தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டுமென கற்பனையில் கோட்டை கட்டி வைத்திருந்தானோ அதே அழகான உருவம் அந்த பில் கவுண்டரில் தர்ம சங்கடத்தில் நெளிந்த போது ஆச்சரியத்துடன் அவளது அருகில் நெருங்கி விசாரித்தான் வினோத். ``இல்ல சார்.. பில் போட்டுட்டேன். என்னுடைய டெபிட் கார்டை எடுத்து வர மறந்துட்டேன்'' என்றாள் தயங்கியபடி ஸ்வேதா. நீங்க தப்பா நினைக்கலன்னா நான் குடுக்குறேன்'' என்றான் வினோத். மிகவும் தயங்கிய ஸ்வேதா அரைகுறை மனதுடன் வேறு வழியில்லாமல் ``நாளைக்கு இதே இடத்தில் உங்களிடம் திருப்பிக் கொடுத்துடறேன் சார். ரொம்ப தேங்க்ஸ் சார்'' என்றாள். மனதில் நிறைந்திருந்த தன் வருங்கால மனைவியை நேரில் சந்தித்ததை நினைத்து நினைத்து உறக்கமின்றி புரண்டு படுத்தான் வினோத்.
Labels:
2014 06 June,
S.கெஜராஜ்,
சிறுகதை
Friday, 20 June 2014
பரிசு
258/C879
சிகரெட் புகையுங்கள்..
மது அருந்துங்கள்...
பான்பராக் சாப்பிடுங்கள்...
பரிசுகளை வெல்லுங்கள்...
முதல் பரிசு
: மரணம்
இரண்டாம் பரிசு
: புற்றுநோய்
மூன்றாம் பரிசு
: காச நோய், பக்கவாதம்
ஆறுதல் பரிசு
: பண நஷ்டம்
பரிசுகள் 100%
உத்திரவாதம்
Labels:
2014 06 June,
S.ரகுபதி,
கவிதை
என்று விடியும் பொழுது
M. ஆதிகேசவன்
264\K066
தி.நகர், ரங்கநாதன் தெரு, இரவு 9 மணி. அதிக கூட்டமில்லை, நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்
அந்தப் பெண்; மெலிந்த தேகம்; மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன். எந்த
ஊர் நீங்க?... திருவண்ணாமலை பக்கம்.... திருநெல்வேலிக்காரங்க
நிறைய இருப்பாங்கல்ல... இப்போ அப்படி இல்ல, அவங்க எல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க. இங்க நாங்க திருவண்ணாமலை புள்ளைங்க நிறைய
பேரு இருக்குக்கோம். 150 பேராச்சும் இருப்போம்.
தினமும் காலையில் 9 மணிக்கு வரணும், நைட் 11 மணிக்கு முடியும். அப்படின்னா 14 மணி நேரம்வருதேங்க,
கிட்டத்தட்ட 2 ஷிப்ட்... ஷிப்டா, அதெல்லாம் தெரியாது, காலையில் போனனா நைட்
வரணும். சாப்பாடு? கேண்டீன் இருக்கு, கொஞ்சம் கொஞ்சம் பேரா சாப்பிட்டுவிட்டு வருவோம். எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க!
நைட் 12 மணி ஆயிடும். காலையில் எழுந்ததும் வந்துடுவோம். உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
ரூ.5,500\-
அடுத்தடுத்த தளங்களிலும் இதுபோன்ற உழைத்துக்
களைத்த பெண்கள்; அவர்கள் உழைப்பை உறிஞ்சி நிற்கும் பிரம்மாண்ட
கட்டிடங்கள் சவக்கிடங்குகளாய் தோன்றியது. என்று விடியும்... இவர்களின் பொழுது?
Labels:
2014 06 June,
M. ஆதிகேசவன்,
கட்டுரை
ஏழைக்கோர் கீதை
M. பழனி
செம்பிய மணலி
9952445378
ஏழையே ஏன் சோர்ந்து விட்டாய்
வறுமையில் வாடும் உனக்கு
உயர்வு இல்லையே என்று வருந்தாதே!
வறுமையின் எல்லையில் விழுந்தவர்கூட
உயர்ந்திட்ட வரலாறு உண்டு!
தெருவிளக்கின் கீழ் படித்தவர்கள்
ஒளிவிளக்காய் ஆனதுண்டு!
நான் ஒரு கீதை உரைப்பேன்
உன் உழைப்பின் கூலியை
எங்கோ ஓடி வீணாகும் நீராக்காதே
குதிரைகள் வளர கிண்டிக்குப் போகாதே!
உன் குழந்தைகள் வளர
உண்டிக்கு செலவு செய்!
கள்ளுக்கும் சாராயத்துக்கும் தராதே!
நெல்லுக்கும் ஆகாரத்துக்கும் கொடு!
உன்னைக் கெடுப்பது `மது'
அதனில் ஏன் மீண்டும் மீண்டும் விழுகிறாய்
எழுந்துவா மனிதா!
புத்தகத்தை உன் கரங்கள் தொட்டிராவிட்டாலும்
உன் பிள்ளைகள் நாளை
புத்தகம் எழுதட்டும்!
வறுமையே இல்லாத பூமி...
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்கும் சமுதாயம்...
நிச்சயம் உருவாகும்!
ஒரு கை இரு கை
ஒரு கோடிக் கை
அதற்காகப் போராடும்
நீயும் வா...! இணைத்துக் கொள்!
புதியதோர் உலகு படைப்போம்!
செம்பிய மணலி
9952445378
ஏழையே ஏன் சோர்ந்து விட்டாய்
வறுமையில் வாடும் உனக்கு
உயர்வு இல்லையே என்று வருந்தாதே!
வறுமையின் எல்லையில் விழுந்தவர்கூட
உயர்ந்திட்ட வரலாறு உண்டு!
தெருவிளக்கின் கீழ் படித்தவர்கள்
ஒளிவிளக்காய் ஆனதுண்டு!
நான் ஒரு கீதை உரைப்பேன்
உன் உழைப்பின் கூலியை
எங்கோ ஓடி வீணாகும் நீராக்காதே
குதிரைகள் வளர கிண்டிக்குப் போகாதே!
உன் குழந்தைகள் வளர
உண்டிக்கு செலவு செய்!
கள்ளுக்கும் சாராயத்துக்கும் தராதே!
நெல்லுக்கும் ஆகாரத்துக்கும் கொடு!
உன்னைக் கெடுப்பது `மது'
அதனில் ஏன் மீண்டும் மீண்டும் விழுகிறாய்
எழுந்துவா மனிதா!
புத்தகத்தை உன் கரங்கள் தொட்டிராவிட்டாலும்
உன் பிள்ளைகள் நாளை
புத்தகம் எழுதட்டும்!
வறுமையே இல்லாத பூமி...
எல்லார்க்கும் எல்லாமும்
கிடைக்கும் சமுதாயம்...
நிச்சயம் உருவாகும்!
ஒரு கை இரு கை
ஒரு கோடிக் கை
அதற்காகப் போராடும்
நீயும் வா...! இணைத்துக் கொள்!
புதியதோர் உலகு படைப்போம்!
Labels:
2014 06 June,
M. பழனி,
கவிதை
சிட்டுக் குருவிகள்
R.இளம்வழுதி
250\L754
என் வீட்டு முற்றத்தில்
மீண்டும் சிட்டுக்
குருவிகள்
படம் பிடிக்க
செல்போன் எடுத்தேன்.
பறந்து போயின
சிட்டுக் குருவிகள்!
வரகு,
கம்பு, திணை கதிர்களை
உத்திரத்தில்
கட்டி வைத்தால்
சிட்டுக்குருவி
வரும் என்றார்கள்...
ஊருக்குச் சென்றிருந்தேன்
அம்மாவிடம் திணைக்கதிர்
கிடைக்குமா என்றேன்
திணை விளைந்த
நிலம்
ரியல் எஸ்டேட்
மனைகளாகிப் போனது
என்றார்!
சிட்டுக்குருவிகள்
காணாமல் போன
காரணம் புரிந்தது!
Labels:
2014 06 June,
R.இளம்வழுதி,
கவிதை
ஒரு ஊதிய ஒப்பந்தத்தின் வர்க்க வாசிப்பு
தோழர்.கருமலையான்
சிஐடியுவின்
தமிழ் மாநில
துணைப் பொதுச்செயலாளர்
ATC டயர்ஸ் நிறுவனம்
என்பது சாலையில்லா காடுகள், கழனிகள், சுரங்கங்கள் ஆகியவற்றில் பயன்படும் கனரக வாகனங்களின் இராட்சத
டயர்கள் உற்பத்தி செய்வதில் உலகிலேயே பிரசித்தி பெற்றது. 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனம்
என்பதால் மத்திய - மாநில அரசுகள் வரிச்சலுகைகளை வாரி வழங்கின.
2009-ல் ATC டயர்ஸ் செயல்படத் துவங்கியது
ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில்
(அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்) பெரும்பாலும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். சம்பளம் நாளொன்றுக்கு ரூ.85\-
முதல் ரூ.100\- வரை 12 மணி நேரத்திற்கு
மேல் உழைப்பு; ரசாயன மூலப் பொருட்களின் நெடி; இதற்கு மத்தியில்தான் இந்த நவீன கொத்தடிமைகள் உழைக்க வேண்டும்.
மார்ச் 2010ல் ஒரு வட மாநில அதிகாரி ஒரு தொழிலாளியை
கொச்சையான வார்த்தைகளால் திட்டினார். ஆலை முழுவதும் தொழிலாளர்கள் வெதும்பிக் கொண்டிருந்த
வேளையில், 1000 பேர் தன்னெழுச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே லோக்கல் கரைவேட்டிகள் வருகின்றன;
காவல்துறை வருகிறது. ஆனால், போராட்டம் தீவிரமடைகிறது. சிஐடியுவுக்கு சில தொழிலாளர்கள் தகவல் தருகிறார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் சிஐடியு அங்கு செல்கிறது. சிஐடியு தலைவர்களை கண்டவுடன் கரைவேட்டிகள்
பின்வாங்குகின்றன. தொழிலாளர்கள் அனைவரும் அந்த பொட்டல்காட்டு பொதுக்குழுவில் சிஐடியு-வில் சேர தீர்மானித்து விட்டனர். நிலைமையைப் பார்த்த காவல்துறை
பின்வாங்கியது.
8 மணி நேர வேலை, சம்பள உயர்வு, பணி நிரந்தரம், குடிநீர், கழிப்பறை வசதி, அடையாள அட்டை, இஎஸ்ஐ, பிஎப் போன்ற கோரிக்கை பட்டியல் உருவானது. 53 நாள் வேலை நிறுத்தம் . வேலை நிறுத்தத்தை
உடைக்க உள்ளூர் கைக்கூலிகள் உதவியை நாடியது நிர்வாகம். மேலும் சிறப்பு பொருளாதார மண்டல
அதிகாரியையும் அணுகியது. ஒன்றும் பலிக்கவில்லை. நிர்வாகம் காலவரையின்றி கதவடைப்பு செய்தது.
இரண்டு மாதம் போராட்டம் நடந்தது. வீடு வீடாக சந்திப்புகள் நடத்தி தொழிலாளர்கள் ஆசுவாசப்படுத்தப்பட்டனர்.
இறுதியாகப் போராட்டம் வெற்றி பெற்றது.
தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஒன்றன்
பின் ஒன்றாக நிறைவேறியது. கான்டிராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். முதன்
முதலாக 158 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டனர். ரூ.85\- ஊதியம் ரூ.280\-, ரூ.300 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த
ஏப்ரல் 30ம் தேதி ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒவ்வொரு தொழிலாளிக்கும்
ரூ.6800\- முதல் ரூ.7000\- வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையின் பலனை தற்போது
ருசிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமையை உழைப்பிற்கும் மூலதனத்துக்கும் இடையிலான
கூலி உயர்வுப் போராட்டம் தான் உருவாக்கியுள்ளது. அதை அப்படித்தான் உருவாக்க முடியும்.
அதோடு நின்றுவிடாமல் மூலதனத்தோடு மோதித் தீர்க்க
வேண்டிய முழுப் போருக்கு இவர்களின் `உணர்வு''
நிலையை உயர்த்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்முன் உள்ளது.
Labels:
2014 06 June,
கட்டுரை,
கருமலையான்
உடலின் இயக்கம்
256\L510
``மனித உடல் உணர்வுகளுக்கு
சமமான எந்த ஒரு கருவியும் இதுவரை கிடையாது''
உடலின் வேதிமாற்றத்தை
மட்டுமே அறியும் தன்மை படைத்தவை இன்றைய விஞ்ஞான மருத்துவக் கருவிகள்
மனித உடலின்
அடிப்படை உணர்வு பசிதானே? இந்தப் பசியை கண்டுபிடிக்கும்
கருவி உண்டா?
நோய்களின் வெளிப்பாடு
வலிதானே? இந்த வலியை, அதன் அளவை, தன்மையை நிர்ணயிக்கும் கருவியை விஞ்ஞானம்
இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
நாம் சிகிச்சை
என்ற பெயரில் வகை வகையான துன்பங்களுக்கு உடலை உட்படுத்துகிறோம். அத்தனையும் தாங்குவது,
சீர் செய்வது உயிர்! இந்த மருத்துவ விஞ்ஞானத்தால் உயிரை அறியவோ,
விளங்கவோ முடியுமா? நோய்களைப் பற்றி
நாம் முழுமையாக அறிவதே அதிலிருந்து விடுபட வழிவகுக்கும். அப்படி நாம் நோய்களை அறிய
உங்கள் உடல் கூறுவதைக் கேளுங்கள்.
உடல் எந்நிலையிலும்
தவறு செய்வதில்லை, கடமை தவறுவதில்லை.
எந்தத் தீங்கான
பொருளையும் உடல் தனக்குள்ளே அனுமதிப்பதில்லை.
தன்னைத் தானே
பாதுகாத்துக் கொள்ளவும், குணப்படுத்திக் கொள்ளவுமான
கட்டமைப்பை உடல் பெற்றுள்ளது.
பசி -
தாகம் - உடலின் தேவைகள் : உணவும், நீரும் தேவைக்குத்தான் தர வேண்டும்.
தேவையில்லாமல்
உடலிற்குள் தள்ளப்படும் எந்த ஒரு பொருளையும் உடல் கழிவாக மாற்றுகிறது.
கழிவுகள் வெளியேறும்போது
ஏற்படும் தொந்தரவுகளை நாம் நோய் என்கிறோம்.
கழிவு வெளியேற்றத்தை
மருந்துகள் மூலம் தடுப்பதால். கழிவுகள் தேக்கமுற்று நோய் வீரியம் பெறுகிறது.
தேக்கமடைந்த
கழிவுகளின் பெருக்கமும், ரசாயன மருந்துகளின்
தாக்கமும் உறுப்புகளைச் சேதப்படுத்துகின்றன.
எல்லா நோய்களுக்கும்
காரணம் கழிவுகளின் தேக்கமும், இயற்கை விதிகளை மீறுவதுமே.
இதிலுள்ள ஒவ்வொன்றையும் செயல்முறையில் சிந்திப்பீர்களானால்
ஒவ்வொன்றிற்கும் தீர்வுகள் உங்களிடமே இருக்கின்றன.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 3 வெள்ளைப்
பொருட்கள் 1. பால், 2.சர்க்கரை 3. மைதா
Labels:
2014 06 June,
P.சந்திரன்,
கட்டுரை
டீக்கடை பெஞ்ச்
ஸ்டாலின் ராஜா
செயலாளர்,
சிஐடியு,
ஓசூர் யூனிட் I
அந்தக்காலத்தில் எந்த டெக்னாலஜியும் இல்லாமல் எப்படி கிணறு வெட்டுனாங்க?
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. பலர் சேர்ந்து
உழைத்து உருவாக்க வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். அதேபோல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது. இவற்றுக்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை அவர்களே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில்,
அதிக அளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும்.
சரீ நீரூற்று இருக்கும், ஆனால் நல்ல நீரூற்று
என அறிவது எப்படி?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் முதல் நாள்
இரவு தூவி விட வேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றைச் சேகரித்து ஒரே
இடத்தில் கொண்டு சென்று சேகரித்த அடையாளங்கள், தடயங்கள் இருந்தால் அந்த இடத்தில் கிணறு வெட்டினால், தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்று கண்டுபிடித்தது மட்டுமல்ல, கோடை காலத்திலும் வற்றாத நீரூற்று எந்த இடத்தில் இருக்கும் என்பதையும்
அறிந்துள்ளனர். கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்துவிட்டு,
பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர்
அந்தப் பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம்!
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால்,
அவை தொடர்ந்து ஒரே இடத்தில் படுக்குமாம்! அந்த இடத்தில் தோண்டினால்
வற்றாத நீரூற்று கிடைக்குமாம்! என்னே.. நம் முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!
Labels:
2014 06 June,
கட்டுரை,
ஸ்டாலின் ராஜா
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
S.சுகுமார்
266\C858
பங்களாக்கள் நிறைந்த பகுதியில் சிறு சிறு குடிசைகள் அமைந்த சந்து
ஒன்றில் சொகுசுக் கார் ஒன்று ரமாவின் வீட்டு வாசலில் வந்து நின்றது! வீட்டு வாசலில்
பாத்திரம் தேய்த்துக் கொண்டிவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். காரை விட்டு இறங்கி வந்த
ரமேஷ், ``எப்படிக்கா இருக்கிற? புள்ளங்க எங்கக்கா காணோம்?'' என்றான். ``அவங்க ஸ்கூலுக்குப் போயிருக்காங்க. நீ வா''
என்று குடிசைக்குள், தம்பியை அழைத்துச் சென்றாள் ரமா! ``கொஞ்சம் உக்காரு.
போய் டீ வாங்கிக்குனு வந்துடறேன்'' என்று பக்கத்தில் உள்ள
டீக்கடைக்குச் சென்றாள். ``என்னாடா கார்ல வந்திருக்கே''.
``அது வந்து முதலாளி குடும்பத்தோடு வெளியூருக்குப் போயிருக்காரு.
அடுத்த வாரம் தான் வருவாரு! அவரு வர்ற வரைக்கும் இந்தக் கார் நம்மளதுதான். அதான் காரை
எடுத்துகினு உன்னையும், குழந்தைகளையும் பார்த்துட்டு
போவலாம்னு வந்தேன்'' என்றான் ரமேஷ்.
அக்காவும் தம்பியும் சேர்ந்தவுடன் ஊரைப் பற்றியும், சொந்த பந்தங்கள் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டார்கள்.
``சரி, நீ குளிச்சிட்டு வா
டிபன் சாப்பிடலாம்'' என்று கூறி தகரத் தடுப்பு போட்ட பாத்ரூமைக்
காட்டினாள். ``தண்ணி அதோ அந்த மூலைல தவலைல இருக்கு பாரு''
என்று கூறி ஒரு துண்டைக் கொண்டு வந்து கையில் திணித்தாள். பாத்ரூமுக்குள்
போன ரமேஷ் , ``என்னக்கா, தண்ணி கொஞ்சமா இருக்கு...''. ``ஆமாடா தண்ணி இன்னிக்கு
சாயங்காலம்தான் வரும். அதுவரைக்கும் இந்த தண்ணியத்தான் ஆண்டுக்கணும். இதான் எங்க நிலைமை.
அதுலயே முடிச்சுக்கோ'' என்றாள் ரமா.
குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே அக்கா பாத்திரம் தேய்ப்பதைக்
கவனித்தான். சிறிய பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வைத்தே கையளவு தண்ணீரை எடுத்து எடுத்துத்
தேய்த்து வைத்தப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சிக்கனமாக. அக்காவைப் பார்க்க
பாவமாக இருந்தது ரமேசுக்கு. ``அவ்வளவு தண்ணி பஞ்சமாக்கா
இங்க'' என்ற ரமேஷ் ``எல்லா இடத்திலும் இப்படித்தான் ஆயிடுச்சு. நம்மவூரு கூட முன்ன மாதிரி இல்ல. அங்கேயும்
தண்ணி ரொம்ப கீழ போயிடுச்சி. பணம் உள்ளவங்க எவ்ளோ செலவு ஆனாலும் போர் போட்டுக்குறாங்க.
இல்லன்னா எவ்ளோ பணம் குடுத்தும் வாங்கிக்கிறாங்க! நம்ம மாதிரி ஜனங்க எங்க போறது! கவர்ன்மெண்ட்
குடுக்கிற தண்ணியத்தான் நம்பியிருக்க வேண்டியிருக்கு'' என்றான் ரமேஷ்.
பள்ளியை விட்டு வந்த குழந்தைகள் ரமேஷைப் பார்த்ததும் ``ஹையா மாமா வந்திருக்குது'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ``ஏய் கொத்தவரங்கா கோமதி நல்லா படிக்கிறியா? வாடா கருப்பா'' என்று குழந்தைகளைக் கொஞ்சினான். ``நாளைக்கு நாம ஜாலியா கார்ல ஊர் சுத்தப் போலாமா?''.
``நாளைக்கு எங்களுக்கு ஸ்கூல் லீவுதான் மாமா'' என்றார்கள் குழந்தைகள் குதூகலமாக.
மறுநாள் காலையில் அக்காவையும், குழந்தைகளையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் ரமேஷ். குழந்தைகள் பீச்சிலும்,
சிறுவர் பூங்காவிலும் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். செயற்கையான
நீரூற்று அமைக்கப்பட்டிருந்தது. உயரத்தில் ஏறி, சறுக்கி, தண்ணீரில் வந்து விழுவதுமாக உற்சாகத்தில்
மிதந்தார்கள். இதையெல்லாம் ரமா ரசித்தாலும் நமக்குப் பாத்திரம் கழுவ, கால் கழுவவே தண்ணி கிடைக்கல. இங்க மட்டும் இவ்ளோ தண்ணி எப்பிடி
கிடைக்குது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அனைவரும் மறுபடியும் காரில் பயணமானார்கள். ஒரு கோயில் வாசல்
அருகில் கார் நின்றது. எல்லோரும் கோயிலுக்குள் சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு
வந்த ரமா, ரமேஷின் நெற்றியில் திருநீரைப் பூசினாள்.
``என்னக்கா வேண்டிக்கிட்ட சாமிக்கிட்ட...'' ``எங்க ஏரியாவுல தண்ணி தட்டுப்பாடு தீரணும். எல்லாருக்கும் எல்லா
வசதி வாய்ப்புகளும் கிடைக்கணும். ஜனங்க எல்லாம் ஒத்துமையா, சந்தோஷமா வாழணும்னு வேண்டிக்கிட்டேன்''
``அதெல்லாம் சாமி குடுக்காது. நல்ல கவர்ன்மெண்ட் தான் அதக் குடுக்க
முடியும்.'' ``சரி... அதையெல்லாம் குடுக்குற நல்ல கவர்ன்மெண்டை குடுன்னு வேண்டிக்கிறேன்''
என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றாள்.
Labels:
2014 06 June,
S.சுகுமார்,
சிறுகதை
என்று ஒழியும்... இந்தத் தீண்டாமைக் கொடுமை?
துணைத் தலைவர்
அசோக் லேலண்ட்
தொழிற்சங்கம்
யூனிட் II,
ஓசூர்
கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால்
டீக்கடையைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. `அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே, அதுல ஒண்ணு சீனி கம்மியா
ஸ்டிராங்கா இருக்கட்டும்..'', ``ரெண்டு டீ போடு''
என்று குரல்கள் நாலாபுறமும் இருந்து வந்தன. கடைக்காரர் கூட்டம்
அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது ``அய்யா சாமி ஒரு சாயா தாங்கய்யா... என்ற குரல் கேட்டு எல்லோரும்
திரும்பிப் பார்த்தார்கள். அழுக்கு உடையில், காவி பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார்.
டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்துவிட்டு,
அந்த நபருக்கு, அலுமினிய டம்ளரில்
டீ போட்டு, தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி
டம்ளரை நீட்டினார்.
எல்லோரும் காசு கொடுக்க, அந்த நபரும் காசு கொடுக்க, கல்லாவில் போட்டார்
கடைக்காரர்.
டீயைக் குடித்துவிட்டு அந்த நபர் கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச்
சொன்னார், ``அய்யா... நான் தாழ்ந்த சாதிக்காரன்னு எனக்குத்
தனியா வேற ஒரு டம்ளரில் டீ தர்றீங்க! ஆனா நான் கொடுத்த காசையும், அவங்க கொடுத்த காசையும்,
ஒரே கல்லாவில் போடுறீங்களே...
திகைத்து நின்ற டீக்கடைக்காரருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
நீங்கள் சொல்லுங்கள்! என்று ஒழியும்... இந்தத்
தீண்டாமைக் கொடுமை!
Labels:
2014 06 June,
கட்டுரை,
மாதவன் P.K.
தனியார் மயமும் குழந்தைகளும்
K.N.சஜீவ்குமார்
217\37918
குழந்தைகளின் உலகம் ஒரு தனி உலகம்; அதில் உயிரற்ற பொம்மைகள் பேசும், நிலவு சிரிக்கும்,
மரங்கள் கதை சொல்லும். ஆனால் இன்றைய முதலாளித்துவம் அந்த அழகிய
உலகைக் களவாடி விடுகிறது. எப்படி?
சமீபத்தில் `யூ டியூப்'ல் பார்த்த ஒரு குறும்படத்தில் பெயில் ஆன ஒரு குழந்தை,
தனது ரிப்போர்ட் கார்டை பார்த்துக் கொண்டு வருத்தத்துடன் டிரெயினில்
பயணம் செய்து கொண்டிருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த இரு பள்ளி ஆசிரியர்கள் ``இப்படி மார்க் எடுப்பதற்கு பதிலாக டிரெயின்ல இருந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ளலாம்'' என்று சொன்னார்கள்.
உடனே அந்தக் குழந்தை நமது தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தின் அர்த்தத்தைக்
கேட்டது. ``இதைத் தெரியாத நீங்கள் உயிரோடு இருக்கும்போது,
நான் ஏன் சாக வேண்டும்?'' என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்டுவிட்டுச் சென்றது.
தனியார்மயம் வந்த பிறகு பள்ளிகள் நமது சேசிஸ் லைன் போல ஆகிவிட்டது.
கல்விக் கூடங்கள் தொழில் கூடங்களாகி குழந்தைகள் மதிப்பெண் பெறும் பொருட்களாகிவிட்டார்கள்.
பள்ளிக்கு பேர் வாங்கிக் கொடுக்க பிள்ளைகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். இந்தப் போட்டியில்
சிக்கி சின்னாபின்னமாகும் குழந்தைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
கண் மருத்துவர் ஒருவர் செய்த ஆய்வில் கார்ப்பரேஷன் பள்ளிகளில்
படிக்கும் குழந்தைகள் கண்ணாடி அணிவது மிகவும் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார். ஏனென்றால்
அவர்கள் வெயிலில் விளையாடுகிறார்கள். அவர்கள் புத்தகப்புழுக்களாக மாற்றப்படுவதில்லை,
மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றப்படுவதில்லை.
முதலாளித்துவ சமூகத்தில் கல்வி என்பது மனிதகுல நன்மைக்கு பயன்படாமல்,
முதலாளிகளுக்கு லாபம் கொடுக்கும் சரக்காகவே மாற்றப்பட்டுவிட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மெக்காலே கல்வி முறை, அவர்களது வர்த்தகத்திற்கு ஏற்ற குமாஸ்தா வேலைக்கு நம்மைத் தயார் செய்ய பயன்பட்டது.
1857-ன் முதல் சுதந்திரப் போரில் இந்தக் கல்வி பெற்ற நம் நாட்டவர்
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல்
அமைப்புச் சட்டம், ``கல்வி என்பது ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற,
சமத்துவ, சமதர்ம சமூகத்தைப்
படைக்கக் கூடிய குடிமக்களை உருவாக்க வேண்டும்'' என்கிறது. ஆனால் தபஐ அஸ்ரீற் 2009 அரசியல் அமைப்புச்
சட்டத்திற்கு எதிரான நவீன தாராளமயத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய, பாகுபாடுகள் உடைய பல அடுக்குக் கல்வி முறையை அமல்படுத்துகிறது.
நவீனத்துவம் வந்த பிறகு மாணவர்கள் படிக்க மட்டுமே செய்ய வேண்டும்;
சமூக அக்கரை கொள்ளக்கூடாது; படித்து முடித்து கல்விச் செலவை ஈடுகட்டும் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பதை
மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். சமீபத்தில் நடந்த தேர்தலில் ஓட்டுகூட போடாமல்
ஐடி துறை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஓட்டுரிமையை பெறுவதற்காக
நடைபெற்ற போராட்டங்கள் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை இந்தக் கல்வி நமக்கு தந்துள்ளது.
நவீன அடிமைகளாக முதலாளித்துவம் நம்மை மாற்றியிருக்கிறது.
எனவே குழந்தைகளைத் துன்புறுத்தாத, கல்வி கற்பதை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் வகையில் கல்வி அமைய வேண்டும். காசு
இருந்தால் கல்வி என்ற முறை மாறி, அரசு எஈட-ல் 6% கல்விக்காக ஒதுக்க
வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கட்டாயமாக வேண்டும். கழிப்பறைகள் இல்லாததால்
வளர்ந்த பெண் குழந்தைகள் படிப்பை கைவிடுவது இந்தியாவில் அதிகம்.
குழந்தைகளைச் சிந்திக்க வைக்கும், கருத்தைத் தடையின்றி வெளிப்படுத்தும் தாய் மொழி வழிக்கல்வியை அரசு கொண்டு வர வேண்டும்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அதுவே அறிவாகாது என்று
பெற்றோரும் உணரவேண்டும். மலர்கள் இயற்கையாக மலர்ந்தால் மணமுண்டாகும். அதை பலாத்காரமாக
திறந்தால் மொட்டிலேயே கெட்டுவிடும்.
Labels:
2014 06 June,
K.N.சஜீவ்குமார்,
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)
















