Saturday 28 June 2014

அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு

சர்க்கரை வியாதிக்கு எத்தகைய உடல் வாகுடையவர்கள், எப்படிப்பட்ட எண்ணெய்க் குளியலை மேற்கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

வாத உடம்பு உடையவர்கள் நெல்லிக் காய் தைலம், கரிசாலைத் தைலம், வாத ராஜாங்கத் தைலம் போன்றவைகளைத் தேய்த்து குளிக்க வேண்டும். கப உடம்புடையவர்கள் நொச்சி தைலம், சுக்குத் தைலம், இஞ்சித் தைலம், வேறு முறைகளில் தயார் செய்யப்பட்ட கரிசாலைத் தைலம் போன்றவைகளைத் தேய்த்துக் குளிக்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும். தலையில் எண்ணெய் ஊறும் நேரம் 1\2 மணியிலிருந்து 1 மணி நேரம் வரை. சீயக்காய்த் தூள் தேய்த்து வெண்ணீரில் தான் குளிக்க வேண்டும். எண்ணெய்க் குளியலன்று பகல் உறக்கம், உடல் உறவு, குளிர்ச்சியான பொருட்கள் இவைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த எண்ணெய்க் குளியல் செய்யும் போது உள்ளுக்கும் மருந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை வியாதி பூரணமாக குணமாகும். <ஆதாரம்: உயிர்நாடி மாத இதழ்>


அதிக களைப்பு, மிகுந்த தாகம், கால் எரிச்சல், ஆறாத புண்கள், அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஏற்ற மருந்து பெரு மருந்துக் கொடி <சிவன் மூலி, உரிக்கொடி> ஆகும். பரம்பரையாக யாருக்காவது சர்க்கரை வியாதி இருப்பின், அத்தகைய கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை செங்காய்களாக உள்ள பாகற்காயில் 5 காய்கள் சமைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின் பிறக்கும் குழந்தைகளை இந்த வியாதி தாக்குவதில்லை. இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் தடுத்துக் கொள்ளலாம். மேலும் அரசமரக் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர செயலிழந்த கணையச் செல்களை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
<அடுத்து தொடர்வோம்>

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா