Thursday 22 January 2015

எலுமிச்சை

B.டில்லி 
சித்த வைத்தியர்
99401 66297



குற்றமற்ற எலுமிச்சங்காய் வாதம், பித்தம், கபம், பித்த உஷ்ணம் போன்ற நோய்களைத் தீர்க்கும். உடல் உஷ்ணத்தையும் தாகத்தையும் தணிக்கும். வயிற்றில் வெப்பத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும். எலுமிச்சம் பழத்தைவிட காய்களை உப்பில் ஊற வைத்து ஊறுகாய்களாக பயன்படுத்துவதே சிறந்தது. இந்த ஊறுகாயைச் சிறிது அன்னத்துடன் சுவைத்து சாப்பிட சீரண சக்தியைக் கொடுத்து வாந்தியை நிறுத்தும்.

எலுமிச்சையின் சாறு 40 மி.லி. அளவுடன் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட, உடல் களைப்பு, தாகம், உடல் உஷ்ணம் நீங்கும். அம்மை நோயினால் வரும் சுரம், கொப்புளங்கள் மற்றும் அம்மை நோயின் பாதிப்பு குறையும். எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து குடித்து வர சுரக்கட்டிகள் குணமாகும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் எலுமிச்சையை விஷ முறிவு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். துணி மற்றும் சில பொருட்களின் மீது படிந்த சில குறிப்பிட்ட கறைகளை எலுமிச்சை சாறு கொண்டு போக்கலாம். தலைமுடியை மென்மையாக வைக்க எலுமிச்சை பழச்சாறு பயன்படுகிறது. முகம் மற்றும் உடலில் உள்ள அழுக்கு, வேர்வை இவைகளை நீக்கப் பயன்படுகிறது.

உடல் உஷ்ணம் அதிகமுள்ளவர்கள் குழம்பில் புளிக்கு பதிலாக எலுமிச்சை சாற்றினை உபயோகித்து குணமடைகின்றனர். சில சித்த மருந்துகள் எலுமிச்சை சாறு கொண்டு சுத்தி செய்யப்படுகின்றன.

என்ன.. தொழிலாளர்களே... இரண்டு இதழ்களில் எலுமிச்சையின் பயனைக் கூறிவிட்டேன். இதைப் பயன்படுத்துவது உங்கள் கையில்!






No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா