Wednesday 21 January 2015

கார் மோகம்

S.உதயக்குமார்
629\F290
செல்: 98401 99207

சமீபத்தில் நம்முடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர் தன் மகனுக்காக கார் வாங்க என்னை அழைத்துச் சென்றார். அது பழைய கார்கள் விற்கும் ஒரு கடை. என்ன ஆச்சர்யம் என்றால், நான் வந்துள்ளது பழைய கார்கள் விற்கும் ஒரு கடைக்கா அல்லது கார்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கேவா என்று! அங்கு அத்தனை கார்கள்.... அதுவும் விதம் விதமாக!

அந்தக் கடையின் முதலாளியைக் கேட்டேன். ஏன் இவ்வளவு கார்கள். அதுவும் ஒரு சில வருடங்களே உபயோகித்த கார்கள் விற்பனைக்கு வருகின்றன என்று? அதற்கு அவர் சொன்னார், ``பெரும்பான்மை இளைஞர்கள் வேலையில் சேர்ந்தவுடனேயே கார்கள் வாங்குகிறார்கள், வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றாலோ, வேலை இழந்து விடும் சூழல் வந்தாலோ, விரக்தியடைந்து, வாங்கிய அதே வேகத்தில் கார்களை விற்க முடிவெடுக்கிறார்கள். வாங்கும்போது சரியாக முடிவெடுக்காததே, அவசரமாக விற்பதற்கும் அடிப்படையாகிறது. இதற்குக் காரணம் இளைஞர்களின் கார்மோகம் தான் என்பது வெட்ட வெளிச்சம்.

இளைஞர்களின் இந்தக் கார் மோகம் அவர்கள் அறியாமலேயே 10 வயது முதல் 18 வயதிலேயே விதைக்கப்படுகிறது. கார் உற்பத்தி செய்யும் கம்பெனிகள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், முக்கியமாக விளையாட்டுப் பந்தயங்கள் மூலமாக இந்த விஷ விதை இளைஞர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. அது பல வருடங்கள் கொழுந்துவிட்டெரிந்து வேலைக்குச் சேர்ந்த உடனேயே வெடித்து விடுகிறது. பல இளைஞர்கள் தங்கள் குடும்பச் சூழ்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் கார் வாங்க முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு வருடம் அல்லது இரண்டே வருடம் காருடனான தேனிலவு முடிந்தவுடன்தான் கார் வாங்கியதன் அழுத்தத்தை அல்லது நெருக்கடியை உணர்கின்றனர். வாங்கிய காரை பெரும் நஷ்டத்திற்கு விற்கின்றனர்.

எனது வாழ்நாள் கனவு, சொந்த பந்தங்களிடம் கிடைக்கும் மரியாதை, வசதியான போக்குவரத்து, உறவினரோ, பக்கத்து வீட்டுக்காரரோ, சக ஊழியரோ, நண்பரோ கார் வாங்கிவிட்டனர் என்பதற்காக இப்படி பல காரணங்களுக்காக கார் வாங்கும் இளைஞர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இவை அனைத்துமே நிஜ வாழ்க்கையில் போலித்தனமானவை, முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லாதவை, வாழ்க்கையைப் பின்னோக்கி, அதாவது தங்ஸ்ங்ழ்ள்ங் எங்ஹழ்_ல் கொண்டு செல்லும் அபாயமானவை. அப்படி என்றால் கார் வாங்குவது தவறா? தவறே கிடையாது. ஆனால், அதை எப்போது வாங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், விழிப்புடன் இருந்தால், கார் ஒரு சுமையாக இல்லாமல் சுகமானதாக அமையும். 
தினமும் காரில் குறைந்தபட்சம் 30 கி.மீ. பயணம் செய்ய வேண்டிய கட்டாயமோ, வயதான பெற்றோரை மருத்துவமனைக்கோ, வழிபாட்டுத் தலங்களுக்கோ, விசேஷங்களுக்கோ அடிக்கடி அழைத்துச் சென்று வர வேண்டிய அவசியமோ, வியாபாரம் மேலும் விருத்தியடையும் என்ற நம்பிக்கையோ, பொது போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு அடிக்கடி பயணப்பட வேண்டிய நிர்பந்தமோ இருக்கும்போதுதான் கார் வாங்குவது அவசியமாகிறது. அப்படி வாங்கும் கார், பந்தாவின் அடிப்படையில் அல்லாமல், தனது பொருளாதார நிலையின் அடிப்படையில் அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதலில் உஙஐ மூலமாக கார் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தான் வாங்கும் காரின் விலை தனது ஒரு வருட மொத்த வருமானத்துக்கு மிகைப்படாமல் இருக்க வேண்டும். காருக்காக ஒரு சேமிப்புக் கணக்கை உருவாக்கி, முழுத்தொகையும் சேரும் வரை காத்திருந்து, காலதாமதமானாலும் பொறுத்திருந்து கார் வாங்குவதே சாலச் சிறந்தது. அதை விடுத்து நாளுக்கு நாள் மதிப்பு குறையும் ஒரு பொருளை கடனுக்கு வாங்கி அதற்கு வட்டியும் கட்டுவது புத்திசாலித்தனம் அல்ல. மிகச் சிறப்பான நிரந்தர மற்றும் பெருமையான ஒரே வழி, உழைப்பால் முன்னேறி, பதவி உயர்வு பெற்று, அந்தப் பதவிக்கான காரை அனுபவிப்பதுதான்.

மது, மாது, சிகரெட் போன்ற இளைஞர்களைப் பாதிக்கும் கலாச்சார சீரழிவு போல் இந்தக் கார் மோகம் என்பதும் ஒரு வகை சந்தை கலாச்சார சீரழிவே. ஒவ்வொரு இந்தியனிடமும் உள்ள சேமிப்பைப் பிடுங்கி, தங்களுடைய லாபத்தைப் பெருக்கி, அந்த லாபத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய பொருளாதார சூழ்ச்சி வலையில், ஒவ்வொரு இந்திய இளைஞனும், அந்த இளைஞனைப் பெற்ற பெற்றோரும் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே இப்படைப்பின் நோக்கம். ஆம்! கார் நமக்கு அள்ள்ங்ற் <சொத்து> ஆக இருக்க வேண்டுமா, அல்லது கண்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் <வட்டியுடன் கூடிய கடன்> ஆக இருக்க வேண்டுமா என்பதே நம் இளைஞர்கள் முன் உள்ள கேள்வி!

Always Don't Bite More Than You Could Chew....

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா