Thursday 22 January 2015

வேலையில்லா பட்டதாரி

M.பழனி
99524 45378
செம்பிய மணலி



பட்டதாரி இளைஞர்கள் நாங்கள்
பரிதவிக்கிறோம் - இந்தப்
பாழ்வெளியில் வாழ்வொளியைத்
தேடி நிற்கிறோம்.

காடுவிற்றுக் கழனிவிற்று
கல்வி தேடினோம் - வெறும்
காகிதத்துப் பட்டங்களைக்
கையில் வாங்கினோம்.

வேலை கேட்டு படிவங்களைத்
தூது அனுப்பினோம் - உடன்
விண்ணப்பக் கட்டணங்கள்
திரை செலுத்தினோம்.

கப்பம் கட்டும் சிற்றரசர் நாங்கள்
கலங்கி வாழ்கிறோம் - இனி
எப்போது விடியும் என்று
ஏங்கிச் சாகிறோம்.

மனுநீதி நாட்களுக்கு
குறைவு இல்லையே - எங்கள்
மனுக்களுக்கு நீதி மட்டும்
கிடைக்கவில்லையே
வெள்ளை எழுத்து வந்த பின்பும்
நம்பிடலானோம் - தலை
வெள்ளைநரை ஆனபின்பும்
வேலையைக் காணோம்

பட்டத்துக்கு இங்கு யாரும்
மதிப்பு கொடுக்கல - அட
பழைய பேப்பர் காரன் கூட
எடைக்கு எடுக்கல
விட்டுத்தள்ளு இன்னும் என்ன
விரக்தி உனக்கு? - புது
விடியலுக்கு நம்பிக்கைதான்
பச்சை விளக்கு!

நாம ஒன்று சேர்ந்து - சமூகத்த
மாத்தணும் தம்பி - அப்போ
சுற்றுமிந்த பூமி - உந்தன்
கால்களில் தம்பி!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா