T.ஓம்பிரகாஷ் 264/37094
ரெண்டு பணக்கார நண்பர்கள் பேசிக் கிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ``என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்''னு.
மறுத்த அடுத்தவர், ``வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப்
பத்தி தெரியாம சொல்றீங்க'' ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி,
மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ``கடைக்கு போய், நல்லா
பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா''ன்னாரு.
``சரிங்க
அய்யா'' ன்னு
பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
``பாத்திங்களா,
என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க'' ன்னாரு.
