Showing posts with label 2014 02 பிப்ரவரி. Show all posts
Showing posts with label 2014 02 பிப்ரவரி. Show all posts

Tuesday, 11 March 2014

பிப்ரவரி 2014 இதழ் மின்புத்தகமாக

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - 16

ஜோ.சுரேந்திரன்

உரிமைக்குரல்: இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், ங்ஹழ் ல்ட்ர்ய்ங் மற்றும் அலைபேசி, அதிக டெசிபல்கள் ஒலிக்கச் செய்யும் ஒலி பெருக்கிகளை உபயோகிப்பது பற்றி?
ஒந: கண்டிப்பாக அது விபத்தில் வந்து முடியும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எவ்வளவு உயரிய ஏங்ஹக்-டட்ர்ய்ங் களுமே செவிகளுக்கு கெடுதியை விளைவிக்கக் கூடியனவே. பெருகி வரும் வாகன நெரிசலுக்கிடையே மிகுந்த முன் ஜாக்கிரதையோடு வாகனங்கள் ஓட்ட வேண்டியுள்ளது.   பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டிக் கொண்டே பாட்டுக் கேட்பதை அறவே தவிர்க்க வேண்டும். கார்களில் செல்பவர்கள் மற்றவர்களைப் பாதிக்காவண்ணம் ஒலிபெருக்கிகளை அமைத்துக் கொள்வது நல்லது. அதிக டெசிபல்கள் நம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவை.

பசி

சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை

S.கெஜராஜ் - 375/K700 - Mechatronics

      ``யோவ்...! நீயெல்லாம் ஒரு மனுஷனாயா...? கைக்குழந்தையோட இருக்கிற அந்த பொம்பள மேல ஏன்யா சுடுதண்ணிய வீசுற...?'' என்று டீக்கடைக்காரரைப் பார்த்துப் பொரிந்து தள்ளினார் பெரியவர்.
      ``ஏம்மா...? நீ இன்னா கேட்ட...?'' என்றார் பெரியவர். ``பசின்னு கேட்டேன். அதுக்கு இவ்வளவு ஆவேசமா தண்ணீ குவளையை வீசிட்டார். நல்ல வேளை மேல படல ஐயா'' என்றாள் அலமு.
      பசி என்றதும் தன்னிடமிருந்த இருபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்த பெரியவர், ``ஏம்மா? ஏதாவது வாங்கி நீயும், குழந்தையும் சாப்பிடுங்க...!'' என்றார். பசியின் கொடுமை அனைவரும் அறிந்த ஒன்றாயிற்றே.

பூமி என்ற பூலோக சொர்க்கம்

V.கோவிந்தசாமி - 352/K302 Mechanical Maintenance

      பூமியின் மேற்பரப்பில் ஐந்து கிலோமீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வெண்மேகங்களும், கரு மேகங்களும் சஞ்சரிக்கின்றன. பதினோரு கிலோ மீட்டர் உயரத்திற்கு அப்பால் எந்த மேகமும் இல்லை. பதினெட்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு மேல் எவ்வித சலனமும் இன்றி அமைதி குடி கொண்டிருக்கிறது என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். பவன மண்டலத்தில் உயரே போகப் போக வெப்பம் குறைந்து கொண்டே போகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 16 கிலோமீட்டர் உயரம் வரை நைட்ரஜன், ஆக்சிஜன் ஜடவாயுக்களும், அதற்கு மேலே ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோனும் உள்ளன. ஓசோன் என்பது ஆக்சிஜனின் மற்றொரு வகை. சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தினால் ஆக்சிஜன் ஓசோனாக மாறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் உட்புறத்தை குடைந்தால் மண்ணாங்கட்டி, சரளைக் கல், கூழாங்கல் பாறைகள் உள்ளன. 40 அடி தோண்டிய பின் நீர் ஊறுகிறது. ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழே போனால் செடிமென்டரி பாறைகள் உள்ளன. பூமியைக் குடைந்து கொண்டு கீழே செல்லச் செல்ல வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு 35 மீட்டருக்கும் ஒரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உயர்கிறது. 100 கி.மீ. ஆழத்தில் 3000 டிகிரி வெப்பம் இருக்கும். எனவே, பூமியின் தரைப்பரப்பு 100 கி.மீ. ஆழத்துக்கு அதிகமாக இருக்க முடியாது என்று மதிப்பீடு. எனவே, நமது பூமியின் மேலோட்டப்பகுதி என்பது ஒரு ஆப்பிள் பழத்தின் தோலைப் போன்றது. பூமியின் மையத்தில் உள்ள எரி குழம்பு, ஒட்டுக் குழம்பு பகுதியில் ஏற்படும் .துவாரங்களின் வழியே வெளியேறுகிறது. அதையே எரிமலை என்கிறோம்.

சர்க்கரை (நீரிழிவு) வியாதிக்கு அனுபவ மருந்துகளும், உணவில் மருந்துகளும்

B.டில்லி - சித்த வைத்தியர் - 99401 66297

      முருங்கைக் கீரைக்குத் தேவையான அளவு ஒரு ஸ்பூன் நல்ல சீரகத் தூள், 2 ஸ்பூன் தோலுடன் சேர்ந்த உளுந்துத் தூள் சேர்த்து, வேக வைத்து, மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். தினமும் இது போல் சாப்பிட சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும், இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். காமாலை நோய், கல்லீரல் நோய் ஆகியவை தீரும். நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி (பலவீனத்தால் வருவது) தீரும்.
      வெள்ளை முள்ளங்கியைத் தேவையான அளவு வாங்கி சீரகம், உளுந்து, வெங்காயம், பூண்டு, துவரம்பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட, சர்க்கரை வியாதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சரியான அளவு வரும். மேலும் சிறுநீரகம் பாதிப்பு, கல்லடைப்பு, சிறுநீர் எரிச்சல் இவைகளும் தீரும்.

வண்ணங்களை விரிவாக்கு!

M.பழனி - 9952445378 - செம்பிய மணலி

உட்கார் நண்பா நலந்தானா - நீ
ஒதுங்கி வாழ்வது சரிதானா?
சுட்டுவிரல் நீ சுருங்குவதா - உன்
சுய பலம் உனக்குள் ஒடுங்குவதா
புல்லாய் பிறந்தேன் நானென்று - நீ
புலம்ப வேண்டாம் - நெல் கூட
புல்லின் இனத்தை சேர்ந்தது தான் - அது
பூமியின் பசியைப் போக்கிடுதே!
கடலில் நான் ஒரு துளியென்று - நீ
கரைந்து வாழ்வதில் பயனென்ன?
கடலில் நான் ஒரு முத்தென்று - நீ
காட்டு உந்தன் தலைதூக்கு!
மனைவி மக்கள் உறவென்று - உன்
மனத்தின் எல்லையைச் சுருக்காதே
திண்ணை தானா உன் தேசம்?
தெரு ஒன்றேவா உன்னுலகம்?
திண்ணையை இடித்து தெருவாக்கு! - உன்
தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை - அதில்
இன்னொரு சிகரம் உனது தலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை?
பூமிப் பந்து என்ன விலை - உன்
புகழைத் தந்து வாங்கும் விலை!
நாமிப் பொழுதே புறப்படுவோம்! - வா

நல்லதை எண்ணி செயல்படுவோம்!

சமூக வலைத்தளங்களும் சிக்கல்களும்

சு.சக்கீர் - 240/J030

      ``கழிவறைகளில் கிறுக்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதை கவனித்தீர்களா?'' கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் இந்த சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார்.
      ``அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?'' என்றார் அவர். ``என்னவாக இருக்கும்'' என்றேன். ``அவர்கள் எல்லாம் இப்போது ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றார் நண்பர்.

காசு… பணம்… துட்டு… மணி… Money…

R.ஜெயராமன், மாநிலப் பொருளாளர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி

      அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தியை, தங்கள் நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப் போதுமான சந்தை இல்லாத நிலை உருவானது. ஆனாலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடி வந்தது. மூலதனம் இத்தகைய நெருக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அதற்குச் சந்தை விரிவாக்கம் தேவைப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் பெரிய சந்தையும், குறைந்த கூலிக்கு கூடுதல் தொழிலாளர்களும் கிடைத்தனர். விளைவு உலகமயம் என்கிற பெயரில் வளரும் நாடுகளின் உழைப்பு சுரண்டப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியை போக்கிக் கொள்ள அந்நாடுகளில் முதலாளிகள் திட்டமிட்டு செயல்பட்டனர்.

வீழ்வோமாயினும் வெல்வோம்!

அ.பன்னீர்செல்வம் 261/36354

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
பாட்டுடை கவி பாரதி கூற்று
தனியார் மயமாக்க கொள்கையிலே
தனி நபர் வளர்ச்சியை நோக்கியே
முதலாளித்துவ வர்க்கத்தின் மூலதனமெல்லாம்
விழுதுகளின் வேர்விட்டு வளர்ந்திடவே
உழைக்கும் தொழிலாள வர்க்கத்தின்
வியர்வைதனை உறிஞ்சியே குடித்து
தன் கிளைகள் தனை பரப்புதடா
பூவாகி காயாகி பழுக்கின்ற பலன்களெலாம்
தனியொருவன் செல்வாக்கில் சொந்தமாகி போனதாலே
வேலையில்லாத் திண்டாட்டமும்
சமூகத்தில் தலைவிரித்தாடிவர
விலைவாசி உயர்வெல்லாம்
விண்ணை முட்ட செய்கையிலே
கலாச்சார சீர்கேட்டில்
மனம் தறிக்கெட்டுப் போகுதடா
பொது உடமை தத்துவத்தின் சித்தாந்த தந்தையாம்
காரல் மார்க்சின் கொள்கையிலே
சமுதாய வளர்ச்சியின் தாக்கம்
சகலருக்கும் சென்றடைய
சந்தர்ப்பம் வாய்க்கின்ற நாட்களெலாம்
வெகு தூரத்தில் இல்லையடா
வர்க்க உணர்வினில் போராடும்
எழுச்சிமிகு தொழிலாள போராட்டம்
வாழ்வுரிமை விழிப்புணர்வோடு மலர்ந்திட

வீழ்வதும் நாளை வெல்வதற்கே!

அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவம் - 9

Healer R.மாதவன் D.E.C.E. M.Acu.
353/37026  செல்: 9840732871

சிறுநீரகக் கற்கள் :
      ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு நோய் ஏற்படும்போது, நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்துகள் நோய்க்கழிவுகள் வெளியேறுவதைத் தடை செய்கின்றன. இரசாயனங்களின் நச்சுகளை கல்லீரல் நீக்குகிறது. அளவுக்கு மீறிய நச்சுகளினால் கல்லீரல் சோர்வடைந்து, நச்சுகள் இரத்தத்திலேயே தங்கி விடுகின்றன. இரத்தச் சுற்றோட்டம் மூலம் சிறுநீரகம் வந்தடையும் நச்சுகள் திட உருவில் கற்களாக மாறுகின்றன. இவைதான் சிறுநீரக, சிறுநீர்ப்பை கற்கள்.
கட்டிகள் : நம் உடலில் தோன்றும் கட்டிகள் யாவும் உடலில் தேங்கும் கழிவுகளின் திட வடிவம்தான். நீர்க்கட்டி, கொழுப்புக்கட்டி போன்ற கட்டிகளாக, உடல் தற்காலிகமாக சேர்த்து வைக்கிறது. போதிய எதிர்ப்புச் சக்தி கிடைத்தவுடன் இந்தக் கட்டிகளைக் கொழ கொழப்பாக மாற்றி உடலே வெளியேற்றிவிடுகிறது.

இனி அழுதால் வராது நீதி!

S.சுகுமார், 266/C858

      களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான் வேலு. அவன் போகும் வேலைக்கு சரியான கூலியோ வேறு எந்த சலுகைகளோ கிடையாது எனினும், ஏதாவது செய்து வாழ்க்கையை ஓட்டித்தானே ஆக வேண்டியிருக்கிறது! எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவன் இன்று சோர்வுடன் வந்திருப்பதைப் பார்த்து, ``இன்னாயா ஆச்சி உனக்கு'' என்று கணவனின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் ராசாத்தி. ``இன்னாயா இப்பிடி கொதிக்குது; போய் ஒரு டீ வாங்கிக்கினு வரட்டா'' என்றாள். பசி என்றாலும், உடம்புக்கு ஏதாவது என்றாலும் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு டீ தான்!

தேர்வு பயத்திலிருந்து மீள்வது எப்படி?

Mrs. V.கமலா M.A., B.Ed., M.Phil
S.D.A.V. பள்ளி
ஆதம்பாக்கம், சென்னை-88

மாணவர்களே...
      இது தேர்வுகள் நேரம். தேர்வு பயம் உங்கள் மனதை ஆட்கொள்ளும் நேரம். அதிலிருந்து மீண்டு வெற்றிக் கனியைப் பறிக்க இதோ சில டிப்ஸ்...
தெளிவான லட்சியத்தை முன்னிறுத்து!
தன்னம்பிக்கை கொள்!
கால அட்டவணை போட்டு, அதைத் தவறாமல் கடைப்பிடி!
தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவை கண்டிப்பாக மன அழுத்தத்தைப் போக்கும்.
அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கவும்.
பிடித்தமான இசை, விளையாட்டு மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்.
பழவகைகள், புரதச்சத்துள்ள உணவுகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். காரம் மற்றும் எண்ணெய் உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்க வேண்டும்.

சுவாரஸ்யமான தகவல்கள்!

அனந்த நாராயணன் - 275/L192

      ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களைக் கொண்ட ஒரே உயிரினம் - கரப்பான்பூச்சி மட்டுமே! ஒரு வேளை அது மனிதன் அளவுக்கு உருவம் கொண்டிருந்தால், ஒரு மணி நேரத்தில் 300
மைல்களைக் கடக்கும். கரப்பான் பூச்சியின்  தலை வெட்டப்பட்டாலும், பல வாரங்கள் உயிர் வாழும் ஆற்றல் பெற்றது.
      முதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை. அத்திறன் அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றது. முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், அதன் கண் விழிகளில் கட்டை விரலை விட்டால் உடனே தப்பிக்கலாம்.
      பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை எழுப்ப முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே எழுப்ப முடியும்.

Friday, 7 March 2014

மானநஷ்ட வழக்கு

Defamation


பிரேம் N..பிரேமராசன் B.Sc., B.L.

      ஒரு தனி மனிதனின் பெயருக்கும், புகழுக்கும், இழுக்கு வரும்போது போடும் வழக்குதான் `மானநஷ்ட வழக்கு'. இதன் பிரிவு `செக்ஷன்-499; செக்ஷன்-500' தண்டனையாகும். ஒருவர் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதை பிரிவு 499 குறிப்பிடுகிறது.

இ-மெயில்கள் பாதுகாப்பானவையா?

M.ஆதிகேசவன் - 264/J066

            நாம் அனுப்பும் இ-மெயில்கள் பாதுகாப்பானவை என்று நினைத்து இ-மெயில்களை அனுப்புகிறோம். நாம் அனுப்பும்
-மெயில்கள் வேறொருவரால் படிக்கப்பட்டு தனிக்கோப்புகளாக நமக்குத் தெரியாமல் சேமித்து வைக்கப்படுகின்றன. அது நமது கணினியில் அல்ல; அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பிரதான சர்வரில் சேமிக்கப்பட்டு வருகிறது. இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உண்மையும் அதுதான்!

சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே அறிவது எப்படி?

T.விநாயகம் - 262/L657 Unit Assy.

            நுரையீரலின் காற்றுச் சக்தி சரிவர இயங்காமல் போனால், நம்  உடலில் எப்படிப்பட்ட நோய்கள் உருவாகும் என்பதைப் பார்ப்போம். வெளிக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியாது. மூக்கடைப்பு ஏற்படும். காற்றில் தூசிகள், வாசனைப் பொருட்கள் கலந்திருக்குமானால் அது தும்மலை ஏற்படுத்தும். இது எதனை அறிவிக்கிறது என்றால், காற்றில் இருந்து நீர்ச்சத்து உருவாகி அது சிறு நீரகங்களை அடைய வேண்டும். அப்படி அடையாமல் தடை ஏற்பட்டதன் காரணமாக நுரையீரலிலேயே நீர்ச்சத்து தங்கிவிடுகிறது. இப்படி நுரையீரலில் நீர் தங்கி விடுவதால் சளி, தும்மல், மூக்கடைப்பு, கை, கால் உணர்வு இழந்த நிலை, சோர்வு ஏற்படும். கை விரல்களின் உறுதி குலைந்து நடுக்கம் ஏற்படும். முழங்கை, தோள்பட்டையை அசைக்க முடியாது. அப்படி அசைத்தால் மூட்டுகளில் சத்தம் வரும். முகத்தில், நெஞ்சில், கைகளில் வெண் திட்டுகள் தோன்றும். நுரையீரலில் காற்றுச் சக்தி இல்லாமல் போவதால் இந்த நோய்கள் உருவாகின்றன.

மனிதன்! மனிதம்!! சமூகம்!!! - எளிய குறிப்புகள் - 4

R.பத்மநாபன் - 760/L054

            சந்தைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையில் உலகச் சமூகம், மனிதம் மற்றும் மனிதன் பற்றி இன்னும் விரிவாக அறிவோம். மனிதனுக்கும், மூலதனத்துக்கும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள இடைவெளியைக் கணக்கிட முடியாது. மூலதனம் இயங்கி பெரும் லாபம் ஈட்டினால் மட்டுமே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்க முடியும். இதனால் உலகம் முழுதும் ஒரே மாதிரியான கலாச்சாரமும், பண்பாடும் இருந்தால்தான் தற்போதைய நுகர்வோர் கலாச்சார சந்தையைப் பாதுகாக்க முடியும் என்ற புதிய அணுகுமுறை கையாளப்படுகிறது.

பொக்கிஷம்: அறிவுத் தேடலின் பயணம்

அ.பிரபாகரன், எவரெடி தொழிலகம்

      பெருங்காடொன்றினை அங்குலப் புழு அளப்பது போன்று இந்தியாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மணம் தேடியபடியே பயணம் செய்தவர் அவர். கன்ஃபூசிய சிந்தனை மரபில் வளர்ந்து, பௌத்தத்தை தழுவி துறவியானது முதல் தன்னை ஒப்படைத்துக் கொண்ட பௌத்தத்தின் ஆழ, அகலங்களை அறிய பேரார்வம் ஏற்பட்டது. அதனால் பௌத்தம் முளைத்த இந்தியா நோக்கிப் புறப்பட்டார். ஆம்! அவர்தான் யுவான்சுவாங்.

சிலிர்ப்பூட்டும் சிறுகவிதை

தனசம்பத் 255/J144

சுடர்விடும் சூரியனை
            கார்மேகம் சூழ்ந்திருக்க
வானத்தின் வர்ணத்தை - தன்
            வசமாக்கி வைத்திருக்கும்
வானவில் பொலிவு கூட
            அழகான ஒரு கவிதை

பசி என்று வந்தார்க்கு
            பரிவுடன் உணவளித்து
ருசி கூடப் பாராது - அவர்
            புசிக்கின்ற அழகைப் பார்
அவர் மகிழ்வினிலே மலர்ந்திடுமே
            அழகான ஒரு கவிதை

பொன்மொழிகள்

K.பழனியப்பன் 760/K835

1.         ஒரு துளி பேனா மை கோடி மனிதர்களைச் சிந்திக்க வைக்கிறது.
2.         கல்வியின் சிறந்த நோக்கம் மக்களைச் சிந்திக்கத் தூண்டுவது.
3.         உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் தனித்தவராகார்.
4.       பிறர் செய்த உதவிகளை மறக்காதே, ஆனால் தவறுகளை மறந்துவிடு.

5.         வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையும், திறமையும் தான் தேவை.