இனியவன் ஜி.ஸ்ரீதர் 256/38176
அம்மா அப்பா அலுவலகத்தில்
தாத்தா பாட்டி முதியோர்
இல்லத்தில்
குழந்தைகள் க்ரீச்சில்
இனிய இல்லம்
தூக்கமெனும் தியேட்டரில்
கட்டணமில்லாமல் காட்டப்படும்
படம்
கனவு
வெற்றிடத்தைக் காற்று
நிரப்பும்
விற்கும் விலைவாசியில்
ஒட்டிய வயிறை
எது நிரப்பும்?
எழுவாய் பயனிலை
தமிழ் இலக்கணம்
மனிதா...
நீ மூட நம்பிக்கைகளைவிட்டு
எழாமல் பயன் இல்லை.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா