M. ஆதிகேசவன் 264\K066
CERN எனப்படும் எனும்
ஐரோப்பிய அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனம் ஹிக்ஸ் போஸான் என்ற பிரபஞ்சத்தின் அடிப்படையான
துகளின் இருப்பை இந்த ஆண்டு ஜூலை 4 அன்று விஞ்ஞானிகள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்த வெற்றி 45 ஆண்டுகளின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இந்த ஆய்வில் 100 இந்திய விஞ்ஞானிகள்
பங்கேற்றது நமது நாட்டிற்கு பெருமையாகும்.
இந்த வெற்றி நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக்
கண்டுபிடித்ததற்கு சமமான முக்கியத்துவம் உள்ள நிகழ்வு ஆகும். காரணம் துகள்களுக்கு (டஹழ்ற்ண்ஸ்ரீப்ங்ள்)
பொருண்மை(நிறை) (ஙஹள்ள்) கிடையாது. பொருண்மையோடு ஈர்ப்பு விசையும் சேரும்போது அப்பொருள்களுக்கு
எடை கிடைக்கிறது என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் அடிப்படை அம்சமாகும். இந்தக் கண்டுபிடிப்புகள்
அண்டம் முழுவதும் பரவி நிற்கும் அணுவைவிட சிறிய துகள்களை (டஹழ்ற்ண்ஸ்ரீப்ங்ள்) தெரிந்து
கொள்ள வழிவகுக்கும். அண்டம் தோன்றியது குறித்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
தொடக்கமாகவே ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பைக் கருத முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விஞ்ஞானப் பார்வை மக்களிடம் வளரவும், விஞ்ஞானத்தின்
மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்த கண்டுபிடிப்பு உதவும். பாட்டாளி வர்க்கத்தின்
ஒப்பற்றத் தலைவன் மாமேதை காரல் மார்க்ஸ் ``சுரண்டும் வர்க்கத்தின் கருவி மதம். அது
மக்களுக்கு அபின் போல காட்சியளிக்கிறது'' என்று குறிப்பிட்டார். மக்களிடம் மண்டிக்
கிடக்கும் பழமைவாத கருத்துகள் மறைந்து போக, ஒரு திருப்புமுனையை, இந்த விஞ்ஞான வரலாற்றில்
ஹிக்ஸ் போஸான் அணுத்துகள் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மக்களிடம் ஏற்படுத்தும் என்பதில்
சந்தேகமில்லை.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா