அ.அப்துல் வாஹிப்
752\36991
தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லாமல்
இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இந்தக் கட்டுரையில் அந்த அளவுக்கு விவரிக்க
இயலாத காரணத்தால் ஒரு சில கருத்துக்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன்.
சுயநலம் கொண்ட முரண்பாடான கருத்துக்கள் அதிகம்
இருப்பதால், எந்த ஒரு செயல் மேற்கொண்டாலும் மாறுபட்ட கருத்துக்கள் எதிரொலிக்கின்றன.
இது தொழிலாளர் ஒற்றுமைக்கு இடையூறாக உள்ளது. ஒரு செயலுக்கு இரு வேறு கருத்துக்கள் என்பது
மனித நிலை. சில நேரங்களில் பல கருத்துக்கள் தோன்றும். அதில் சுயநலம் இல்லாமல் சுயலாபம்
இல்லாமல் கருத்தை தேர்ந்தெடுத்து, அதைச் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால் ஒற்றுமை
ஏற்படும். ஆனால் அந்த கருத்து தொழிலாளர்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
உதாரணத்திற்கு நிர்வாகம் ஒரு செயலை, ஒரு நடைமுறையைத்
தொழிலாளர்கள் மத்தியில் செயல்படுத்த நினைக்கும்போது, அனைத்து மட்டத்தில் உள்ள நிர்வாக
அதிகாரிகளைக் கூட்டி, கருத்துகளைக் கேட்டு விவாதித்து ஒரு கருத்து என்ற முடிவுக்கு
வருகிறார்கள். அதை செயல்படுத்தும்போது, கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், அது தொழிலாளர்கள்
மத்தியில் தெரியாமல் நடந்து கொள்கிறார்கள். திட்டமிட்டு செயல்படுகிறார்கள். வெற்றியும்
காண்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு கருத்து சுதந்திரம் குறைவு.
மாறாக தொழிலாளர்கள் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம்
அளிக்கப்பட்டுள்ளது. எனவே, முரண்பாடுகள் அதிகம் எழுகின்றன. அவை தொழிலாளர் மத்தியில்
உள்ள சில பிளவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதால் பிளவுகள் நிரந்தரமாக்கப்படுகின்றன.
தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை நிலவ வேண்டுமென்றால், சுயநலம் மற்றும் சுயலாபம் இல்லாத
வர்க்கச் சிந்தனை கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். பிளவுச் சக்திகள்
பலம் இழக்க வேண்டும். அதுவரை தொழிலாளர்களின் ஒற்றுமை கேள்விக்குறியே.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா