S.சுகுமார் 266/C858
``என்ன தம்பி சோதனை மேல் சோதனைன்னு சோக கீதமா
பாடிகிட்ட வர்ற என்ன ஆச்சி?'' ``நாடுபோற போக்கைப பாத்தா இப்படித்தான் பாடத்தோணுது ராமண்ணா''.
``இப்ப என்ன ஆயிடுச்சி தம்பி நம்ம நாட்டுக்கு? நம்ம நாடு வல்லரசா ஆகப் போவுதுன்னு எல்லாரும்
பேசிக்கிறாங்க, அணுவப் பிளக்கிற டெக்னிக்க கண்டுபிடிச்சுட்டோம், விண்வெளியில் 101வது
செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திட்டோம். மேம்பாலம், மெட்ரோ ரயிலுன்னு ஃபாரின் ரேஞ்சுக்குப்
போயிகிட்டு இருக்கோம். நீ என்னடானா குடியே மூழ்கிட்ட மாதிரி புலம்புறியே!''
``அதெல்லாம் சரிதான் ராமண்ணா, ஏற்கனவே வேலையில்லாதவங்க
எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது புதுசா படிச்சி வர்றவங்களுக்கு வேலை வாய்ப்புகள உருவாக்கல!
எல்லா விலைகளும் தாறுமாறா ஏறிகிட்டே போகுது! ஜனங்க வறுமை கோட்டுக்குக் கீழே தள்ளப்படறாங்க!''
``தம்பி வறுமைக்கோடுன்னு சொன்னீயே அது என்ன கோடு
அது?'' ``அதுவா, அப்படிக்கேளு, கேட்டுட்டு என்னை உதைக்காம இருந்தா சரி. நகர்ப்புறத்துல
ஒருத்தன் ஒரு நாளைக்கு 32 ரூபாய் சம்பாதிச்சான்னா அவன் வறுமைக்கோட்டுக்கு மேலேன்னு
அர்த்தம்! கிராமப்புறத்துல ஒருத்தன் ஒரு நாளைக்கு 26 ரூபாய் சம்பாதிச்சான்னா அவன் வறுமைக்கோட்டுக்கு
மேலேன்னு அர்த்தம்! இதை நான சொல்லல மத்திய அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்
சிங் அலுவாலியா என்ற அறிஞர் சொல்லியிருக்கார்!'' ``யாரு? ஆபிசுல அவருடைய கழிப்பறைய
சீர்படுத்த பல லட்ச ரூபாயைச் செலவு செய்தாரே அவரா?''
``அவரேதான் ராமண்ணா அவர்தான் அப்படிச் சொன்னார்னா
நம்மூர் சிதம்பரம் இருக்காரே சிதம்பரம் மினரல் வாட்டருக்கு 15 ரூபாயும், ஐஸ்கிரீமுக்கு
20 ரூபாயும் செலவு செய்யுற ஜனங்க அரிசி, பருப்பு விலையை ஏத்தினா மட்டும் ஒத்துக்க மாட்டேங்குறாங்கன்னு
அலுத்துக்கிட்டார்.'' ``நம்ம சிதம்பரமா அப்படி சொன்னாரு? நல்ல யோசனை பன்னி சொல்லு தம்பி,
என்னால நம்பவே முடியல!'' ``ராமண்ணா இன்னொரு மந்திரி என்ன சொன்னார்னு கேளு! விலைவாசி
ஏறிச்சின்னா விவசாயிகளுக்கு நல்லதுன்னாரு!'' ``தம்பி இவங்கெல்லாம் நம்மள இன்னான்னு
நினைச்சுகிட்டு இப்படி பேசறாங்க? காலமெல்லாம் விலைவாசி ஏறுது! காலமெல்லாம் விவசாயி
அல்லல் படறான்! இந்த மந்திரி சொல்ற மாதிரி விவசாயிங்க வாழ்க்கை அப்படி ஒன்னும் நல்லா
ஆகலையே? ஒன்னுமே புரியல தம்பி''
``புரியலையா? அப்ப இதக்கேளு டீசல், பெட்ரோல்,
கேஸ் விலையெல்லாம் ஏத்துனாத்தான் நம்ம பொருளாதாரம் நல்லா வளரும்னு ஒரே போடா போட்டாரு.
நம்ம பிரதமர் மன்மோகன்சிங்!'' ``கொஞ்சம் இரு தம்பி நம்ம பிரதமர் ரொம்ப நல்லவரு, ரொம்ப
படிச்சவரு, அவரு சொல்ற மாதிரி செய்தா ஒரு வேளை நாம் எங்கேயோ போயிடுவோமோன்னு நினைக்கிறேன்.
படிச்சவரு பொய் சொல்ல மாட்டாரு!'' ``ரொம்ப அப்பாவியா இருக்கியேண்ணா நீ, ஒட்டுமொத்தமா
நம்ம ஜனங்களுக்கு மானியமா ஒதுக்குனது 5 ஆயிரம் கோடின்னு வை, வெளிநாட்டு, உள்நாட்டு
முதலாளிகளுக்கு மானியமா நம்ம அரசு வாரி வழங்கியது 5 லட்சம் கோடி! பாத்தியா? படிச்சவரு,
நல்லவரு யாரு பக்கம் இருக்கார்னு''
``தம்பி சமீப காலமா நம்ம நாட்டுல பெரிய, பெரிய
ஊழல் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துகிட்டிருக்கே பாத்தியா தம்பி?'' ``ராமண்ணா... இந்த
ஊழல் குற்றச்சாட்டு எல்லாம் ஏதோ எதிர்கட்சிக்காரங்க சொல்றதா நினைக்காத மத்தியக் கணக்குத்
தணிக்கை குழுவோட அறிக்கைதான் இவ்வளவு ஊழலையும் சொல்லி இருக்குது! அதையே இந்த மலைமுழுங்கி
மகாதேவனுங்க இல்லைன்னு சாதிக்கப்பார்க்குறாங்க''
``தம்பி பிரதான எதிர்க்கட்சியா இருக்கிற பிஜேபி,
பிரதமர் ராஜினமா செய்யணும்னு சொல்லி பாராளுமன்றத்தையே நடக்க விடல பாத்தியா! ரொம்ப கிரேட்
தம்பி!'' ``ராமண்ணா இந்த ஊழலுக்கு மூல கர்த்தாவே பிஜேபிதானும் அவங்க காலத்துல என்ன
நடைமுறையோ அதையேதான் நாங்க பின்பற்றினோம்... பாராளுமன்றம் நடந்துச்சுனா பிஜேபியினுடைய
குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதாலேயே பாராளுமன்றத்தை முடக்குறாங்கன்னு காங்கிரஸ் சொல்லுது!
ஆக மொத்தம் பார்லிமெண்ட் முடங்கிப் போனதாலே விவாதம் பண்ண முடியாம உண்மை நிலவரம் ஜனங்களுக்குத்
தெரியாமல் போனது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் சந்துல சிந்து பாடற மாதிரி காங்கிரஸ் அரசு
நைசா இதுதான் சாக்குன்னு நம்மள பாதிக்கிற சட்டங்களையெல்லாம் கட கடன்னு சட்டமாக்கிடறான்
பார்த்தியா? இதுதான் முதலாளித்துவ கட்சிகளின் தந்திரம்!''
``தம்பி எல்லாம் நல்லா சொன்ன நம்ம ஜனங்களுக்குத்
தீர்வுதான் என்ன அதச் சொல்லு!''
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா