Saturday, 13 October 2012

முகநூலில் இருந்து...



S.உமாகாந்தன் 221\l210

தோல்வியின் அடையாளம் தயக்கம்
வெற்றியின் அடையாளம் துணிச்சல்

இன்று தலையில் கை வைத்து
உட்கார்ந்தவனைக் கேள்...
நேற்று கையில் தலைவைத்து
படுத்திருந்தேன் என்பான்...!


எங்கே விழுந்தாய் எனப் பார்க்காதே!
எங்கே வழுக்கினாய் என்று பார்!

அவசரம் ஆளை மட்டும் அல்ல
அலுவலையும் கெடுக்கிறது.

தேவையில்லாததை நீ வாங்கினால்...
விரைவில் தேவையானதை விற்றுவிடுவாய்!

முடங்கி இருந்தால்
சிலந்தியும் சிறை பிடிக்கும்
எழுந்து நட!
எரிமலையும் வழிகொடுக்கும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா