Wednesday, 13 February 2013

மார்ச் 31ல் பணிநிறைவு பெறுகிறார் தோழர் க.ராமையன் (221\36038) வாழ்த்துகிறோம்



      ஆரம்ப காலத்தில் கேண்டீன் தொழிலாளியாக பணியில் அடியெடுத்து வைத்தது. அவர்களின் உரிமைகளுக்காக தோளாடு தோள் நின்றது, சமூக அவலங்களை எதிர்த்து இளைஞர்களை அணிதிரட்டியதில் முக்கியப் பங்காற்றியது. சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றியது. இன்ஜின் வால்வ்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மறியலில் கலந்து கொண்டு 11 நாள் சிறைவாசம் இருந்தது. காண்டிராக்ட் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியது. பொதுத் தொழிலாளர் சங்கத்தில் நிர்வாகியாக பணிபுரிந்தது. 79-ல் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் 82-ல் கிளைச் செயலாளர். தொடர்ச்சியாக இன்று வரை பகுதிக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர், உழைப்போர் உரிமைக் கழகத்தின் ஆலோசகர். உரிமைக்குரலில் `சிகரம் தொட்ட போராளிகள்' என்ற சிறப்பான தொடர் கட்டுரைகளைத் தந்தது. ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்து இதழுக்கு படைப்புகளைத் தந்தது ஒரு சிறப்பம்சம். ஒரு தேர்ந்த படைப்பாளியாக உரிமைக்குரல் இதழ் தோழர் ராமையனை உருவாக்கியுள்ளது. ``எர்ணாவூர் கன்னிலால் லே-அவுட் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவது. இத்தனை சாதனைகளுக்கும் உரித்தான தோழர் க.ராமையன் 31.3.2013 அன்று பணிநிறைவு பெறுகிறார். மேலும் மேலும் அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா