Wednesday 13 February 2013

யாருக்காக இந்த அரசு? - தலையங்கம்



      மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து பெட்ரோல் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள பெரும் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியது! இதன் விளைவாக சகலவிதமான பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து மக்கள் திணறிக் கொண்டிருக்கும்போதே மேலும் ஒரு அடியாக கேஸ் சிலிண்டர் விலையையும் கடுமையாக உயர்த்தி சாதாரண மக்களை நெருக்கடியில் தள்ளியது. இதற்குப் பிறகு, டீசல் விலையையும் அரசின் பிடியில் இருந்து விலக்கி பெரும் முதலாளிகள் தங்கள் இஷ்டத்திற்கும் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்குகிறது மத்திய அரசு!

      இதே வழியில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ரேசன் பொருட்களையும் கைகழுவ அரசு துடிக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை நினைத்த போதெல்லாம் உயர்த்திக் கொள்ள பெரு முதலாளிகளுக்கு அனுமதி அளித்தது போல் சர்க்கரை விலையையும் உயர்த்திக் கொள்ள பெரும் முதலாளிகளுக்கு அனுமதி வழங்க அரசு தயாராகி வருகிறது!
      எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் என்கிற ரீதியில் கண்மூடித் தனமாகச் செயல்படும் அரசுகளுக்குப் பாடம் புகட்டுவோம்!
      ஆளும் வர்க்க ஆதரவுக் கொள்கைகளை முறியடிக்காமல் விடிவில்லை! இதே கொள்கையுடைய மாற்றுக் கட்சிகளால் பயனில்லை! மாற்றுக் கொள்கைக்காக ஒன்றிணைந்து போராடுவோம்! விடியலைக் காண்போம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா