Wednesday, 13 February 2013

நீரிழிவு நோயுள்ளவர்கள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

அற்புதம் ஜேசுராஜ், எவரெடி தொழிலகம்

      தற்போது நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆகவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
      பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உதாரணமாக உருளைக்கிழங்கு, கேரட்,
பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல. ஆகவே, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த உணவை உண்ண வேண்டுமானாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகளில், பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.
பாகற்காய்: நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம், பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
வெந்தயக்கீரை: இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்புச் சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
வெண்டைக்காய்: வெண்டைக்காயை நறுக்கும்போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
சுரைக்காய்: இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்துவர சரியாகும்.
காலிபிளவர்: இதில் இனிப்புச் சுவை இல்லாததால் நீரிழிவு நோயாளிக்கு மிகவும் ஏற்றது. ஆகவே, இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
பூசணிக்காய்: அனைவருக்கும் பூசணிக்காய் இனிப்புச் சுவை உடையது என்பது தெரியும். ஆனால் இதில் கிளைசிமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி.
பிரெஞ்சுபீன்ஸ்: இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை உண்டால் நீரிழிவைத் தடுக்கலாம்.
என்ன... நண்பர்களே... இதனைப் படிப்பதோடு அல்லாமல் பின்பற்றவும் செய்தால் நீரிழிவு நம்மை அண்டாது! நலமோடுவாழலாம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா