வாகன் K.தன்ராஜ்,
பெரிய ஓபுளாபுரம், விநாயகா இன்ஜினியரிங்
தள்ளுவண்டி கடைக்காரன்
எல்லாப் பொருட்களையும்
விற்று விடுகிறான்.
வறுமையைத் தவிர!
விடிந்ததும்
கொல்லப்படுவோம்
என்று தெரியாமல்
அதிகாலையில் கொக்கரிக்கிறது
சேவல்!
கூன் விழுந்த
தாத்தாவைத்
தாங்கிப் பிடிக்கிறது
முதுகு வளைந்த
``கைத்தடி''!
காட்டுக்கு
வேலி போட்டனர்
காட்டு மரங்களை வெட்டி!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா