Healer R.மாதவன் D.E.C.E., M.Acu.
அக்குபங்சர் வாழ்வியல் மருத்துவ
ஆலோசகர், செல்: 9840732871
353\37026
மூட்டுவலி
உடலில் தேங்கும் கழிவுகள்
வெப்ப வடிவமாகவோ அல்லது நீர், காற்று
மற்றும் திட வடிவத்திலோ தான் இருக்கும். உடலின் நீர் சமநிலை பாதிக்கப்படும் போது மூட்டுக்களில்
நீர் கழிவுகள் தேக்கமடைகின்றன. நீர் தேங்கிய எலும்பு இணைப்புகளில் வலியை ஏற்படுத்தும்.
இதே நீரானது தலையில் தேங்கும் போது சைனஸ் எனவும், மூட்டில் தேங்கும்போது ரூமாட்டிக் எனவும் பெயர் சூட்டப்படுகிறது. இப்படி மூட்டுகளில்
தேங்கும் கழிவுகளை, சிறுநீரகம்
கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் மூலமாக கழிவுகளாக வெளியேற்றும். அப்படி வெளியேற்றுவதற்காக
ஒன்று சேர்ந்து தேக்கி வைக்கும் ஒரு செயல்தான் மூட்டுவலி,
சிறுநீரகங்களுக்கு சிகிச்சை அளித்து இதனை குணப்படுத்தலாம். கண்டிப்பாக
மூட்டுகள் தேய்வது இல்லை.
பித்தப்பை கற்கள்:
கல்லீரலில் கிரகிக்கப்படும்
இரசாயன நச்சுப் பொருட்கள் பித்தப்பையில் அடைக்கப்பட்டு,
அவை உடலில் கலந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. முடிந்த வரை
நச்சுக்களை தன் வயப்படுத்தி கல்லீரலின் துணையோடு அவற்றை அழித்து வருகிறது. அதிலும்
மோசமான நச்சுப் பொருட்களை கற்களாக மாற்றி பித்தப்பை உள்ளேயே வைக்கிறது. போதிய எதிர்ப்பு
சக்தியின் வளர்ச்சிக்குப் பிறகு இந்த பித்தப்பை கற்கள் கரைக்கப்பட்டு கழிவுகளாக வெளியேறிவிடும்.
மனிதனின் மன இயல்பு கெடும்போது,
உடலின் இயல்பு கெட்டு கழிவுகள் தேங்க ஆரம்பிக்கின்றன. உடலின்
இயல்பையும், மனிதனின்
இயல்பையும், இயற்கையின்
துணையோடு பாதுகாத்துக் கொள்வதே அக்குபங்சர் அறிவுறுத்தும் வாழ்க்கை முறையாகும்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா