பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L.
450/F159, QC-Lab
கைது என்ற நிலை சில நேரங்களில் அப்பாவிகள், குற்றம் புரியாதவர்களுக்கு
கூட ஏற்படலாம். அதனால்தான் சட்டம் சொல்கிறது, குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி
தண்டிக்கப்படக் கூடாது. சட்டத்தின் இந்த கூற்றுக்கு ஏற்ப, ஒரு நிரபராதி
கைது செய்யப்படும் போது அவருக்கு சட்டம் என்ன சொல்கிறது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
உரிமைகள்
1. கைது செய்யப்பட்டவர் மேல்முறையீடு (appeal) செய்யலாம். இதை ஜெயில் அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்த வேண்டும்.
2. சட்ட உதவிகள் (Legal aids) அவருக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டியது சிறைத் துறை
உரிமை மற்றும் கடமையும் கூட.
3. சட்ட விழிப்புணர்வு முகாம்கள் சிறையில் நடத்தப்பட வேண்டும்.
4. 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும். 24 மணி
நேரத்திற்குப் பிறகு போலீஸ் கஸ்டடியில் இருக்கக்கூடாது.
5. கைது செய்யப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர்
நியமிக்கப்பட வேண்டும்.
6. பெண் என்றால் பெண் போலீஸ் தான் அவரை அணுக வேண்டும்.
7. உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவ உதவி செய்ய வேண்டும்.
8. கைது வாரண்டை காண்பிக்க வேண்டும்.
9. ஐடஇ எந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை கைது செய்யப்பட்டவருக்குத்
தெரிவிக்க வேண்டும்.
10. பெயில் கிடைக்கும் என்றால் தெரிவிக்க வேண்டும்.
11. பெயில் இல்லை என்றால் சர்ச் (Search) பண்ணுவதை தெரிவிக்க வேண்டும்.
12. கைது செய்த இடத்திற்கும், கோர்ட்டுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 24 மணி
நேரத்திற்கு மேல் ஆகக்கூடாது.
13. கைது செய்யப்பட்டவர் பெயர், விலாசம், வாரண்டில் இருக்க வேண்டும்.
14. வழக்கறிஞர் வைக்க வசதியில்லை என்றால், Article 39A இந்திய
அரசியல் அமைப்பு சட்டப்படி இலவசமாகச் செய்ய வேண்டும்.
இவையெல்லாம் கைது செய்யப்பட்டவருக்கு உள்ள உரிமைகளாகும். இறுதியாக ஒன்று... துவங்கிய
நாளில் இருந்து,
இத்தனை ஆண்டுகள், இந்த நாள் வரை, தொடர்ந்து பயனுள்ள பல தலைப்புகளில்
பகிர்ந்து கொள்ள, எழுத வாய்ப்பு அளித்த உரிமைக்குரலுக்கும், அதன்
குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து வரும் 31.12.13 அன்றுடன் என் அசோக் லேலண்ட் பணியை நிறைவு செய்கிறேன்.
வணக்கம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா