அ.பன்னீர்செல்வம்
261/36354
உறவெனும் கொடியிலே
கருவினைச் சுமந்திட
உதிரத்தைக் கொடுத்தவள்
தன்மான உணர்வினை
தாய்ப்பாலுடன் புகட்டியே
தன்னலம் கருதா அன்பினில்
தாயாகிக் காப்பவள்
சகோதரத்துவத்தை வளர்ப்பதிலே
அன்புத் தங்கையாய் உடன்பிறந்து
பாசத்தின் நிழலில் நேசத்தைப்
பொழிபவள்
போகப் பொருளாகப் பார்த்திடும்
கண்ணோட்டம் மறையவேண்டும்
ஆணாதிக்க சமுதாயத்தில்
அண்டியே பிழைத்திடும்
கொள்கைகள் மறைய வேண்டும்.
சமூகத்தின் பார்வையில்
சம உரிமை பெற்றிடவே
இட ஒதுக்கீடு கொள்கையிலே
பெண்ணுக்கு சம நீதி வர வேண்டும்
அவள் சிந்தனையின் கருத்தினிலே
புதுப் புரட்சிகள் மலர வேண்டும்
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா