Thursday, 26 December 2013

சிவப்பின் வெள்ளை அறிக்கை

இனியவன் ஜி.ஸ்ரீதர்
256/38176

உதிக்கும் சூரியன்
வானத்தின் வெள்ளை அறிக்கை
உதட்டில் உண்மை
உள்ளத்தின் வெள்ளை அறிக்கை
வானவில் என்பது
வண்ணங்களின் வெள்ளை அறிக்கை

வாழ்க்கை என்பது - நல்ல
எண்ணங்களின் வெள்ளை அறிக்கை
கூடி உண்பது
காக்கையின் வெள்ளை அறிக்கை
காக்கா பிடிப்பது
கயவர்களின் வெள்ளை அறிக்கை
அரிய கண்டுபிடிப்புகள்
விஞ்ஞானத்தின் வெள்ளை அறிக்கை
அறிவில்லா மூடப் பழக்கங்கள்
இருட்டின் வெள்ளை அறிக்கை
ஜாதி மத வேற்றுமைகள்
விரிசல்களின் வெள்ளை அறிக்கை
ஒன்றே குலம் என்பதே
ஒற்றுமையின் வெள்ளை அறிக்கை
ஏகாதிபத்தியம் என்பது
வெள்ளை மாளிகையின் வெள்ளை அறிக்கை
கறுப்பு பணத்தை பதுக்குவதே
சுவிஸ் வங்கியின் வெள்ளை அறிக்கை
தனியார் மயம் தாராளமயம்
சுரண்டலின் வெள்ளை அறிக்கை
சுரண்டலை ஒழித்து
சுடர்விளக்காய் ஒளிர்வதே
`சிவப்பின்' வெள்ளை அறிக்கை

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா