அனந்த நாராயணன் - 275/L192
ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும் ஆறு கால்களைக்
கொண்ட ஒரே உயிரினம் - கரப்பான்பூச்சி மட்டுமே! ஒரு வேளை அது மனிதன்
அளவுக்கு உருவம் கொண்டிருந்தால், ஒரு மணி நேரத்தில் 300
மைல்களைக் கடக்கும். கரப்பான் பூச்சியின் தலை வெட்டப்பட்டாலும், பல
வாரங்கள் உயிர் வாழும் ஆற்றல் பெற்றது.
முதலைகள் கற்களையே விழுங்கும் திறன் பெற்றவை. அத்திறன்
அதனை ஆழத்தில் நீந்த உதவுகின்றது. முதலையின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமானால்,
அதன் கண் விழிகளில் கட்டை விரலை விட்டால் உடனே தப்பிக்கலாம்.
பூனைகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குரல் ஒலிகளை எழுப்ப
முடியும். ஆனால் நாய்களால் பத்து வித குரல் ஒலிகளை மட்டுமே எழுப்ப முடியும்.
பறவை இனத்தில் பென்குவினால் மட்டுமே நீந்த முடியும்.
ஆனால் பறக்க முடியாது. ஒரு பெண் கானாங்கெளுத்தி மீன் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை
இடுகிறது. உலகில் மனிதர்களை விட கோழிகள் அதிகமாக இருக்கின்றன. பாலூட்டிகளில் யானைகளால்
மட்டுமே குதிக்க முடியாது. உடலின் அளவை விட விகிதாச்சாரத்தில் மூளையின் அளவு பெரிதாகக்
கொண்ட உயிரினம் எறும்பு.
எந்த மனிதனாலும் தும்மும்போது கண்களைத் திறந்து வைத்திருக்க
முடியாது. ஒரு சராசரி மனிதனுக்குப் பிறக்கும்போது 300 எலும்புகள்
இருக்கும். வயதாகும் போது அது 206ஆக குறைந்துவிடும். மனிதப் பற்கள்
பாறை போல கடினமானவை. மின்சார நாற்காலியை ஒரு பல் மருத்துவர் கண்டுபிடித்தார்.
கண்ணாடி உடையும்போது சிதறும் துகள்கள் எந்தத் திசையில்
இருந்து விசை வந்ததோ, அதன் எதிர் திசையிலேயே சிதறும்.
நண்பர்களே... இப்படி நம்மை வியக்க வைக்கும் சுவாரஸ்யமான
தகவல்கள் பல உள்ளன. அவற்றை அறிந்து கொள்வோம்!
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா