Tuesday 11 March 2014

தேர்வு பயத்திலிருந்து மீள்வது எப்படி?

Mrs. V.கமலா M.A., B.Ed., M.Phil
S.D.A.V. பள்ளி
ஆதம்பாக்கம், சென்னை-88

மாணவர்களே...
      இது தேர்வுகள் நேரம். தேர்வு பயம் உங்கள் மனதை ஆட்கொள்ளும் நேரம். அதிலிருந்து மீண்டு வெற்றிக் கனியைப் பறிக்க இதோ சில டிப்ஸ்...
தெளிவான லட்சியத்தை முன்னிறுத்து!
தன்னம்பிக்கை கொள்!
கால அட்டவணை போட்டு, அதைத் தவறாமல் கடைப்பிடி!
தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவை கண்டிப்பாக மன அழுத்தத்தைப் போக்கும்.
அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கவும்.
பிடித்தமான இசை, விளையாட்டு மூலம் ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்.
பழவகைகள், புரதச்சத்துள்ள உணவுகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். காரம் மற்றும் எண்ணெய் உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்க வேண்டும்.

படித்ததை ஒரு முறைக்குப் பல முறை ரிவிஷன் செய்வது அவசியம். படிக்கும்போது இடைவெளி விட்டு படிப்பது நல்லது.
ஒவ்வொரு சிறிய தேர்வைக் கூட அலட்சியப்படுத்தாமல் முக்கியத்துவம் கொடுக்கவும்.
புத்தகத்தை முழுமையாகப் படிக்கவும். அதன்மூலம் அனைத்து ஒரு வரி மதிப்பெண் வினாவிற்கு சரியாக விடை எழுதலாம்.
அதிகாலையில் கடினமான பாடங்களையும், கணித சூத்திரங்களையும் படித்து மனதில் ஏற்றலாம். சூத்திரத்தைத் தனியாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை தினந்தோறும் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.
கடினமான பாடங்களுக்கு அதிக நேரமும், எளிதான பாடங்களுக்கு சிறிது நேரமும் ஒதுக்கவும்.
நினைவுக்குறிப்பு எடுத்து அதைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு விடையை நினைவுகூர, விடையின் ஒவ்வொரு வரியில் இருந்து, முதல் எழுத்தை எடுத்து, அதை வைத்து ஒரு வார்த்தை உருவாக்கி ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். ஙண்ய்க் ஙஹல்ல்ண்ய்ஞ் என்பது மாணவர்களுக்குச் சிறந்த கற்கும் வழிமுறை ஆகும். இந்த வழிமுறை படிக்கவும், உள் வாங்கிக் கொள்ளவும், ஆராயவும், உண்மைச் செய்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவும் உதவும்.
எந்த கேள்வியையும் விடாமல், அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க முயற்சிக்கவும்.
தேர்வை 10 நிமிடம் முன்பாக முடியுங்கள். அப்போதுதான் விடைகளைச் சரி பார்க்க முடியும்.
அழகான கையெழுத்து மூலம், விடைத்தாள் மதிப்பீட்டாளரைக் கவரலாம்.
தேர்வு மையத்திற்கு அரை மணி நேரம் முன்கூட்டியே செல்லவும்.
தேர்வு ஆரம்பிக்கும் கடைசி நிமிடம் வரை பாடத்தைப் பற்றிப் பேசாமல், உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்.

பிறகென்ன தேர்வு பயம் அண்டாது!  வெற்றி நிச்சயம்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா