Friday 7 March 2014

இ-மெயில்கள் பாதுகாப்பானவையா?

M.ஆதிகேசவன் - 264/J066

            நாம் அனுப்பும் இ-மெயில்கள் பாதுகாப்பானவை என்று நினைத்து இ-மெயில்களை அனுப்புகிறோம். நாம் அனுப்பும்
-மெயில்கள் வேறொருவரால் படிக்கப்பட்டு தனிக்கோப்புகளாக நமக்குத் தெரியாமல் சேமித்து வைக்கப்படுகின்றன. அது நமது கணினியில் அல்ல; அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பிரதான சர்வரில் சேமிக்கப்பட்டு வருகிறது. இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உண்மையும் அதுதான்!


            உதாரணமாக வீடு வாங்க தனது நண்பருக்கு ஒருவர் இந்த விலையில், உனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் தெரிவிக்கவும் என்று
-மெயில் அனுப்புகிறார். அடுத்த வினாடியே உங்களது மெயில் பக்கங்களில் எங்கே வீடு விற்பனைக்கு உள்ளது, எவ்வளவு விலைக்கு கிடைக்கும், எந்த பிரமோட்டர்கள் வீடு கட்டித் தருகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் இடம்பெற்றிருக்கும். நீங்கள் எந்தப் பொருட்கள் குறித்து விவாதிக்கிறீர்களோ, நீங்கள் அனுப்பும் கோப்புகளில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் இடம் பெறுவதைக் காண முடியும். கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நாம் வைத்திருக்கும் கணக்குகளில் இவ்வாறு இடம் பெறுவதைக் காண முடியும்.

            இனி இவை எப்படி நடக்கின்றன என்பதை நாம் பார்க்கலாம். நாம் அனுப்பும் இ-மெயில்கள் மற்றும் இணையதளம் மூலம் நாம் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும் முதலில் அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த பிரதான சர்வருக்குச் சென்று ஒரு நகல் எடுக்கப்பட்டு, அந்த வினாடியே நண்பருக்கும் அது செல்லும். இணையதளத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது மெயிலுக்கு பொருள் சார்ந்த விபரங்களும் அனுப்பப்படுகின்றன. இதற்கென்று ஒரு புரோகிராம் உருவாக்கி, வார்த்தைகளை சல்லடை போட்டு அலசி ஒரு சில வினாடிகளுக்கும் குறைவான நேரத்திலேயே முடிவைத் தெரிவித்துவிடும். இப்போது சொல்லுங்கள் - உங்கள் மெயில் பாதுகாப்பானதா?

            நாள் தோறும் 20 கோடி எஸ்.எம்.எஸ் தகவல்களைத் திருடிய அமெரிக்கா, திரட்டிய தகவல்களை டிஷ்பயர் என்ற பெயரில் சேமித்து வைத்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. தற்போது மத்திய அரசால் அமெரிக்காவில் உள்ள ஒரு கம்பெனிக்கு ஆதார் அட்டை எடுப்பது சம்பந்தமான ஆர்டர் கொடுக்கப்பட்டு, நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும், மேலே குறிப்பிட்ட அட்டையில் கண்காணிக்கப்பட்டு வருவதை இடதுசாரிகள் கண்டித்ததோடு, இந்திய நாட்டு மக்களின் விபரங்கள் அனைத்தும் இப்படி அமெரிக்காவிடம் சிக்குவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்?


            ஆகவே, விழிப்புடன் இருப்போம்! இ-மெயில் விவரங்களில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா