Friday 7 March 2014

சிறுநீரக பாதிப்பை முன்கூட்டியே அறிவது எப்படி?

T.விநாயகம் - 262/L657 Unit Assy.

            நுரையீரலின் காற்றுச் சக்தி சரிவர இயங்காமல் போனால், நம்  உடலில் எப்படிப்பட்ட நோய்கள் உருவாகும் என்பதைப் பார்ப்போம். வெளிக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியாது. மூக்கடைப்பு ஏற்படும். காற்றில் தூசிகள், வாசனைப் பொருட்கள் கலந்திருக்குமானால் அது தும்மலை ஏற்படுத்தும். இது எதனை அறிவிக்கிறது என்றால், காற்றில் இருந்து நீர்ச்சத்து உருவாகி அது சிறு நீரகங்களை அடைய வேண்டும். அப்படி அடையாமல் தடை ஏற்பட்டதன் காரணமாக நுரையீரலிலேயே நீர்ச்சத்து தங்கிவிடுகிறது. இப்படி நுரையீரலில் நீர் தங்கி விடுவதால் சளி, தும்மல், மூக்கடைப்பு, கை, கால் உணர்வு இழந்த நிலை, சோர்வு ஏற்படும். கை விரல்களின் உறுதி குலைந்து நடுக்கம் ஏற்படும். முழங்கை, தோள்பட்டையை அசைக்க முடியாது. அப்படி அசைத்தால் மூட்டுகளில் சத்தம் வரும். முகத்தில், நெஞ்சில், கைகளில் வெண் திட்டுகள் தோன்றும். நுரையீரலில் காற்றுச் சக்தி இல்லாமல் போவதால் இந்த நோய்கள் உருவாகின்றன.

            நுரையீரலில் நீர்ச் சக்தி அதிகமாகத் தேங்கி இருப்பதால் தோலில் கருப்பு நிறம் படரும். இந்தக் கருப்பு நிறம் தோன்றும் இடங்களில் நீர் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அந்தக் கருப்பான இடத்தில் அரிப்புகள், நீர் வடிதல் ஏற்படும். டான்சில் வீக்கம், முழங்கை வலி, தோள்பட்டை வலி, தாடை வலி, பல்வலி இவைகள் உருவாகும். இவை அனைத்தும் சிறுநீரகங்கள் தங்களின் உறுதியான இயக்க சக்தியை இழந்து வருகின்றன என்பதை சந்தேகமில்லாமல் நமக்கு உணர்த்துகின்றன.
நாம் செய்ய வேண்டியது:
            அக்குபிரஷரில் நாமே மருத்துவராகலாம். நான் சொல்லும் புள்ளியில் 10 நிமிடம் ஆட்காட்டி விரலால் மசாஜ் செய்யுங்கள். நமது கையை மடக்கினால் மடக்குமிடத்தில் பெரிய நரம்பு தென்படும். அந்த நரம்பு பக்கத்தில் கட்டைவிரல் பக்கமாக ஒரு குழி விழும். அந்த இடத்தில் `கம5'' (கமசஎந) புள்ளி உள்ளது. அந்த இடத்தில் மசாஜ் செய்தால் நோய் பறந்து போகும்.
படம் : அக்குபிரஷர் கம-5 புள்ளி

குறிப்பு : பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். இதற்கு நடுவில் மசாஜ் செய்தால் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா