Friday 7 March 2014

தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்

A.T.உத்தமன் 255/J264

      மூலதனமாக பணத்தைப் போட்டவன் முதலாளி, உடல் உழைப்பைக் கொடுப்பவன் தொழிலாளி, தொழில் செய்து கிடைக்கும் லாபத்தில் தொழிலாளிக்கு அதிக பங்கும், முதலாளிக்கு குறைந்த அளவு பங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நிலைமை நேர்மாறாக உள்ளது. நமக்குக் கொஞ்சம்; முதலாளிக்குப் பல மடங்கு.


      தற்காலத்தில் முதலாளி என்பவன் தன் சொந்தப் பணத்தில் முதலீடு செய்வதில்லை. அவனுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மக்கள் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும், <_ம். விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர்>, தொழிலாளி உழைத்து சேர்த்த வருங்கால வைப்பு நிதி <ட.ஊ> பணத்தையும் பயன்படுத்துகிறான். இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கிறது. அப்படி உருவாகும் முதலாளி நாளடைவில் நிறுவனம் நஷ்டம் என பணத்தைக் கொள்ளையடிக்கிறான்.

      நம் நாட்டில் உள்ள மக்கள் தொகை பெருக்கத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குறைந்த கூலியில் வேலை வாங்குகிறான். ங.ச.இ. கம்பெனிகளில் 10 மணி நேரம், 12 மணி நேரம் என வேலை நேரம் அமைகின்றன.

      உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் ஆரம்பிக்கும் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைப்பதே சவால்களாக உள்ளன. அப்படியே பல பிரச்சனைகளைச் சந்தித்து தொழிற்சங்கம் அமைத்தாலும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட முதலாளிகள் முன் வருவதில்லை. ஒப்பந்த காலத்தை 5 வருடத்திற்கு நீட்டிக்கிறார்கள். ஆனால், விலைவாசியோ நாளுக்கு நாள் வேகமாக ஏறுகிறது. அதற்கு ஏற்ப ஊதிய உயர்வு அமைவதில்லை.

      குறைவான கூலியில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்குகிறார்கள். அவர்களுக்கு எந்த ஊதிய பாதுகாப்பும் இல்லை. உயிர் இழந்தால்  நஷ்ட ஈடு <ஐய்ள்ன்ழ்ஹய்ஸ்ரீங்> உத்திரவாதம் இல்லை.
தொழிற்சங்கத்திற்கு உள்ள சவால்கள் :

      தொழிலாளியின் வேலைப் பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், மருத்துவக் காப்பீடு, லாபத்தில் பங்கு, 8 மணி நேர வேலை, ஒப்பந்த முறையை ஒழிக்க, குறிப்பாக நமக்கு பாதுகாப்பான சட்டங்கள் இயற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க, நமக்குக் குரல் கொடுக்க, இடதுசாரி எண்ணம் கொண்ட கட்சிகளின் உறுப்பினர்களை சட்டசபை மற்றும் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

      நம்மை ஆளும் அரசியல் கட்சிகள் இதற்கு முன் தொழிலாளர்களின் ஓட்டுக்காக தொழிலாளர் நலச்சட்டங்களை இயற்றினார்கள். ஆனால் தற்பொழுது அவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை பாமர மக்களிடம் ஓட்டுக்காகக் கொடுத்தும் மற்றும் இலவசங்கள் கொடுக்கப்படும் <மக்கள் வரிப்பணத்தில்> என்று அறிவித்தும் வாக்குகளைப் பெறுகிறார்கள். தொழிற்சங்கம் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றாத முதலாளிக்கு சாதகமாக உள்ள  அரசுகளைத் தொழிற்சங்கங்களால் மாற்ற முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

      பாமர மக்களின் வங்கிப் பணத்தைப் பாதுகாக்க, நம் வருங்கால வைப்பு நிதியைப் பாதுகாக்க, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதைத் தடுக்க என எண்ணற்ற சவால்கள் உள்ளன.

      பல தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இங்கு உள்ளனர். எனவே, முதலில் ஒரே தொழில் செய்யும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து நம் கோரிக்கைகளை அரசாங்கத்திடமும், முதலாளிகளிடமும் வென்றெடுக்க வேண்டும். இவையே தொழிற்சங்கம் முன் உள்ள சவால்களாகும்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா