Wednesday, 20 August 2014

கோடையைச் சமாளிக்க ஏற்ற குளிர்பானம்

E.கருணாகரன்
264/L460
Auto Engine
Dressing

கோலா போன்ற குளிர் பானம் அருந்துவதால், நமது உடலுக்கு பல கேடுகள் விளைகின்றன. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தது 6 _ 7 ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பதால் மிக விரைவாக சர்க்கரை நோய் தாக்கும். புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாகும். சரும பாதிப்பு, எலும்புகளை அரிக்கும். பெண்களின் மாத விடாய் சுழற்சி சிதையும். இவை அனைத்திற்கும் மேலாக கோலா பானங்களை அருந்துவோர்க்கு 61% இதய நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.


விஷயம் தெரிந்த பலர் கோலா பானத்தை விலக்கி பழச்சாறுக்கு மாறுவதை உணர்ந்த கோலா நிறுவனங்கள் பழச் சாறையே விதவிதமாகச் சந்தைப் படுத்துகின்றன. பழச்சாறின் கான்சென்ட்ரேட்டை வாங்கி நீரையும் அமில சீராக்கிகளையும் சேர்த்து டெட்ரோ பேக்கில் அடைத்து இயற்கை பானம் என்ற அடைமொழியுடன் விற்பனை செய்கின்றன.

சமீபத்திய ஆராய்ச்சியில் இளநீரில் உள்ள ``சைட்டோ கைனின்'' முதுமைத் தோற்றத்தையும், புற்று வளர்ச்சியையும் தடுக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். பதநீர் நரம்பை வலுப்படுத்தும் வைட்டமின் சத்து நிறைந்துள்ள அற்புதமான பானம்.

எனவே, பாரம்பரிய கரிசனத்துடன் பரிமாறப்படும் எந்தப் பிரச்சனையும் இல்லாத மோர், பதநீர், இளநீர் போன்ற குளிர்பானங்களைப் பருகி ஆரோக்கியமாக வாழ்வோம். இவை கோடையைச் சமாளிக்க ஏற்ற பானங்களாகும்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா