Showing posts with label 2014 08 August. Show all posts
Showing posts with label 2014 08 August. Show all posts

Wednesday, 20 August 2014

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடு... யார் பொறுப்பு?

பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L.
Mobile: 97104 76927

மவுலிவாக்கம் கதை... ஏன் மௌனமான கதையானது?

அலமாதி _ ஏன் சமாதி ஆனது?

Vicarious Liability <பிறர் பொருட்டு பொறுப்பேற்கும்> சட்டம் என்ன சொல்கிறது?

மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியானதும், திருவள்ளூர் அலமாதியில் சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் பலியானதும் மிகப் பெரிய சோகம்; இந்தக் கோர மரணத்துக்கு, கோர விபத்துக்கு யார் பொறுப்பு?

1984ல் போபால் விஷவாயு வழக்கில் முதலாளிகள் தப்பிக்கக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்ட சட்டம்தான்Vicarious Liability . இந்த வழக்கில் அந்த ஆலை நிர்வாகம் தான் முழுப் பொறுப்பு என்று தீர்ப்பு கூறப்பட்டது. மக்களைக் காப்பாற்ற, தவறு செய்பவர்கள் தப்பிக்காமல் இருக்க  The environmental Act 1986, The Bhopal Disaster Act  ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

இப்போது மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்து 61 பேரைக் காவு கொண்டது. இதுவரை சரியான நடவடிக்கை இல்லை. இதற்கு முழுப் பொறுப்பு கட்டிட உரிமையாளரும், கட்டிடம் கட்ட அனுமதி தந்த அதிகாரிகளும்தான்.

ஆகவே தார்மீகப் பொறுப்பை அரசே ஏற்று, இனிமேல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். Vicarious Liability  சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். 

மனிதன் மனிதனாக வாழ பத்து அம்சங்கள்

S.ரகுபதி
258/C879

மிகவும் மதிக்கப்பட
வேண்டியவர்கள் _ தாய், தந்தை
மிக மிக நல்ல நாள் _ இன்று
மிகப் பெரிய வெகுமதி _ மன்னிப்பு
மிகப் பெரிய தேவை _ நம்பிக்கை
மிகக் கொடிய நோய் _ பேராசை
கீழ்த்தரமான விசயம் _ பொறாமை
நம்பக் கூடாதது _ வதந்தி
செய்யக் கூடாதது _ நம்பிக்கைத் துரோகம்
விலக்க வேண்டியது _ சோம்பேறித் தனம்
உயர்வுக்கு வழி _ உழைப்பு

போதை இட்டுச் செல்லும் பாதை...

S.கெஜராஜ்
375/K700
Mechatronics

``அக்கா....! அக்கா...!'' என்று அலறியவாறு உள்ளே நுழைந்த மணி, ``நம்ம மெயின் ரோடு ஓரம் மாமா, குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறாருக்கா'' என்றான். ``ஐயோ...! வீட்டுக்கு மட்டும் தெரிஞ்ச இந்தக் குடிப்பழக்கம் இப்போ ஊரு முழுக்க தெரிஞ்சு போச்சே!'' என்று பதறிக் கொண்டே தன் கணவனைத் தேடி ஓடினாள் சாந்தி!. கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு தன் கணவனின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். ஈக்கள் மொய்த்து முகத்தையே மூடியிருந்தது.

எலுமிச்சை நார்ச்சத்து நிறைந்துள்ள உயர்ந்த கனி...

ஆ.டில்லி
சித்த வைத்தியர்
99401 66297

நாம் சாதாரணமானவை என நினைக்கும் பொருட்கள் கூட பல சமயங்களில் உயிர் காக்கும் சஞ்சீவினியாய் பயன்படுகின்றன. இந்த வகையில் விஷச் சாராயம் அருந்தி, கண்பார்வை மங்கி, உயிர் போகும் நிலையில் உள்ள ஒருவரை சாதாரணம் என்று நினைத்த எலுமிச்சைப் பழம் கொண்டு பிழைக்க வைத்து, கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அதிசயத்தை எப்படிப் பாராட்டுவது?

விஷச்சாராயம் அருந்திய பலர் கண் மங்குதல் ஏற்பட்டு, படிப்படியாக இறந்து கொண்டிருந்த நிலையில், ஒருவர் மட்டும் சில எலுமிச்சைப் பழங்களைத் தோலுடன் மென்று சாப்பிட்டார்; கண்பார்வைத் தெளிவடைய, மேலும் சில பழங்களைச் சாப்பிட்டார்; அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து, கண்பார்வையும் பெற்று குணமடைந்தார். ஆனால் இவருடன் விஷச் சாராயம் சாப்பிட்ட அனைவரும் இறந்து போனது பெரிய சோகம். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எலுமிச்சையின் பயன்பாட்டை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கடல் பேசினால்...

மகி.பாலன்,
உரிமையாளர், டைம் அழைப்பிதழ்
போன்: 2599 1838

என்னுள் இருக்கும் பிரபஞ்ச ரகசியத்தை நான் ஒரு பொழுதும் மானிடனுக்குச் சொல்ல நினைத்தது இல்லை. என்னைப் பற்றி பல அறிவுஜீவிகள், தத்துவ ஞானிகள் விளக்கம் தந்து கொண்டே இருக்கின்றனர். இப்பிரபஞ்சம் உருவானது, பூமியில் ஜீவராசிகள் உருவானது, இவற்றின் முழு இரகசியம் எனக்குத்தான் தெரியும். ஏனென்றால் முதல் ஜீவராசியே என்னுள்தானே உருவானது. மேலும் உலகிலேயே மிகச் சிறிய, மிகப் பெரிய ஜீவராசிகள் என்னுள்தான் வாழ்கின்றன.

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர் V.A.சிவா அய்யாதுரை

அனந்த நாராயணன்
 275\L192

புறாவைப் பயன்படுத்தித் தூது அனுப்புவது முதல் அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனால், கணினி என்ற கண்டுபிடிப்பு வந்தபின், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியவில்லை. கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும், அதனுடைய வளர்ச்சி வேகம் இரு மடங்காகியது என்றால், அது மிகையாகாது. அதுவும் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக் கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருட்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டன. அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று.

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்

அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணு <இது தவறு>
ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு <இதுவே சரி>.
2. படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் <இது தவறு>
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்; எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான்  <இதுவே சரி>
3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் <இது தவறு>
ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் <இதுவே சரி>
4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! <இது தவறு>
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு! <இதுவே சரி>
<மாட்டை வாங்கும்போது, அது பதிக்கும் தடமே `சுவடு' ஆகும். அழுத்தமான சுவட்டைப் பதிக்கும் மாடே பலம் வாய்ந்தது ஆகும்>

படித்ததில் பிடித்தது


அம்மா இங்கே வா.. வா..
ஆசை முத்தம் தா.. தா...
பாடம் படித்தன
அனாதை இல்ல குழந்தைகள்.!

சமத்துவ சிந்தனையை வளர்ப்போம்!

சு.சக்கீர்
240\J030

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த முதல் பத்து ஆண்டுகளில் நம் நாடு எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதில் நமது முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு சோசலிச ஆதரவு கருத்தைக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் யூனியன் அடைந்த மாபெரும் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த சோசலிசப் பாதையே நமக்குத் தேவை என்பதில் அவர் அக்கறை காட்டினார். இந்தியாவின் முன்னேற்றத்தில் அதீதமான அக்கறை கொண்டிருந்த சோவியத் யூனியன் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்க பல்வேறு உதவிகளைச் செய்ய முன் வந்தது.

மதச்சார்பின்மை... வகுப்புவாதம்... தெரிந்து கொள்வோம்...

M. ஆதிகேசவன்
264\J066

இந்தியாவை ஒரு மதச் சார்பற்ற சமூகமாக மாற்ற நாம் ஒரு சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தியாவில் மதச் சார்பின்மையை நாத்திகம் என்று புரிந்து கொள்கிறார்கள். இது சரியல்ல. மதச் சார்பின்மை என்பதன் பொருள், அரசியலில் மதம் கலக்கக்கூடாது என்பதே.

மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்ற பொருளாகும். இந்திய குடிமக்கள் எவரும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, சீக்கிய மதங்கள் போன்ற இதர மதங்கள் எதையும் பின்பற்றாமை என்பதும், அவர்கள் விரும்புகிற மதத்தை நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும் உரிமை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஒவ்வொரு குடிமகனும் அவர் விரும்புகிற மதத்தில் நம்பிகை வைத்து அதைப் பின்பற்றுகிற அடிப்படை உரிமைகளில் அரசு தலையிடவோ, அல்லது இடையூறு விளைவிக்கவோ கூடாது. அதைப் போலவே மத நம்பிக்கையற்ற, கடவுள் மீது நம்பிக்கையில்லாத தனிநபர்களும், குழுக்களும் எந்தவித மதத்திலும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும், பின்பற்றாமல் இருப்பதற்கும் உரிமை பெற்றவர்கள்.

வாழ்க்கைக் கணிதம்

அ.ஜோசப் பிரேம்நாத்
M.A.(His), M.A.(Eco),
B.G.L. D.L.L., A.L.
250/L988

வாழ்க்கை + அன்பு  = இன்பம்
வாழ்க்கை _ அன்பு  = துன்பம்
2 வாழ்க்கை               = இன்பம் + துன்பம்
ஃ வாழ்க்கை               = இன்பம் + துன்பம்
                                                           2

i.e.,  வாழ்க்கை = 1 \2 இன்பம் + 1\2 துன்பம்
இன்பமும், துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
வாழ்க்கையை அனுபவிப்போம்
வாருங்கள் நண்பர்களே!

கோடையைச் சமாளிக்க ஏற்ற குளிர்பானம்

E.கருணாகரன்
264/L460
Auto Engine
Dressing

கோலா போன்ற குளிர் பானம் அருந்துவதால், நமது உடலுக்கு பல கேடுகள் விளைகின்றன. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தது 6 _ 7 ஸ்பூன் சர்க்கரை சேர்ப்பதால் மிக விரைவாக சர்க்கரை நோய் தாக்கும். புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாகும். சரும பாதிப்பு, எலும்புகளை அரிக்கும். பெண்களின் மாத விடாய் சுழற்சி சிதையும். இவை அனைத்திற்கும் மேலாக கோலா பானங்களை அருந்துவோர்க்கு 61% இதய நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

மனிதன் மகத்தானவன்

J.ஜேசுதாஸ்,
மாநிலச் செயற்குழு
தமுஎகச

தாயிற்சிறந்ததொரு கோவிலுமில்லை. ஆம்! பெண் எப்படித் தெய்வமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் மிக எளிமையானது. பிறப்பின் ரகசியத்தை விளங்கிக் கொள்ள முடியாத ஆதி சமூகம் பெண்ணையே தன் சமூக விருத்திக்கான துவக்கமாகக் கண்டது. அவளில் இருந்தே ஒட்டுமொத்த சமூகமும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மை அவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்தது. தாய்வழிச் சமூகத்தில் வாழ்ந்தவர்களுக்கு தன் தந்தை யாரென்று தெரியாது. ஆனால் தன் தாயை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இன்றைய நவீன சமூகத்திற்கு இதைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவே!

கொடிய மிருகங்களால் அழியும் சக மனிதர்கள், கட்டுப்படுத்த இயலாத இயற்கையின் பேரழிவுகளில் மாண்டு போகும் தனது சமூக உறுப்பினர்கள், மிருக வாழ்வில் இருந்து இன்னும் விலகாத மனிதர்களாக இருந்த அவர்களுக்கு, தான் ஒரு சமூகமாக இருந்தால் ஒழிய வாழவே இயலாது எனப் புரிந்து கொண்ட அவர்களுக்கு, சமூகத்தின் மறு உற்பத்திக்கு பெண் மிகவும் தேவைப்பட்டாள். விளைவு அவளையே தங்களின் தலைவியாகவும், சமூகத்தை வழி நடத்துபவளாகவும், உயர்ந்த இடத்தில் வைத்தனர். மரணம் குறித்தான பயம் சதா தன்னைத் துரத்திக் கொண்டிருந்த அக்காலக் கடின வாழ்வில் தாயே தனக்கு ஆறுதலாக இருக்க முடியும்.

விஞ்ஞானிகளின் விஞ்ஞானி மைக்கேல் பாரடே!

B.சதீஷ்குமார்
240\36927

சர் ஐசக் நியூட்டனின் குழப்பத்தை, மர்மத்தைக் கட்டவிழ்த்து தெளிவாக்கியவர் மைக்கேல் பாரடே. புவி ஈர்ப்பு விசையால் சூரியன் மற்ற கிரகத்தைத் தொடாமல் சுற்றி வருவது எப்படி? என்ற கேள்விக்கு புவி ஈர்ப்பு விசையால் சூரியன் ஒன்றோடொன்று தொடுவது மட்டுமல்ல, சரியான தனது சுற்றுப் பயணத்தில் சுற்றுகிறது என்பதை பாரடே விளக்கினார். அதே போல பழம் மரத்தில் இருந்து எப்படி கீழே விழ வேண்டும் என்பதை மைக்கேல் பாரடே தனது எலக்டிரிக் மேக்னடிக் ஃபோர்ஸ் மூலம் விளக்குகிறார். எலக்ட்ரிகல் கரண்டை மெக்கானிகல் மோஷனாக மாற்றியவர் பாரடே. இன்று உலகம் இவ்வளவு பெரிய வளர்ச்சியை  அடைந்ததற்கு காரணமே பாரடேவின் சுழற்சி கண்டு பிடிப்பே! முதல் தொடர் ஓட்ட மின் மோட்டாரை நமக்களித்தவர் பாரடே. அணுவில் நேர் மின்னோட்டம், எதிர் மின்னோட்டம் அறிந்து, டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே. ஜெனரேட்டர். காலிங் பெல் மின்காந்த வேதியியல் என பற்பல கண்டுபிடிப்புகள் பாரடே உடையவையே! அதனால்தான் மைக்கேல் பாரடேவை விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று வரலாறு அழைக்கிறது.

ஈரம் தொடர்கிறது

தன.சம்பத்
255\J144

ஈரைந்து மாதங்கள்
இருட்டறையில் சுமந்தவளை
தொடர்ந்து வந்த காலத்தில்
தோளிலே சுமந்தவரை

காத்திட மனமிருந்தும்
தலையணை மந்திரத்திற்கு
தட்டாமல் தலைவணங்கி
காப்பகத்தில் சேர்த்து விட்டு

தானீன்ற தவப் புதல்வனை
தாலாட்டி வளர்த்திட்டான்!
கண்ணான தன் மகனை
கல்லூரியில் சேர்த்துவிட
விண்ணப்பம் வாங்கிவர
பெற்றோரை நாடி வந்தான் _ மறுக்காமல்
கால்கடுத்தாலும் _ கண் கலங்காது
கருணையுடன் காத்திருந்தனர்!

கல்லீரல்

Healer P.சந்திரன் D.Acu.
256/L510

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் நல்லவிதமாக ஜீரணிக்கப்பட்டு, அதிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்பட்டு, கொழுப்பு இரத்தக்குழாயில் தங்காமல், உடலெங்கும் நல்ல இரத்தத்தைச் செலுத்தும் பணி கல்லீரலைச் சார்ந்ததாகும். இது ஒழுங்காக இயங்கும் வரை ``கொலஸ்ட்ரால்'' என்ற பேச்சுக்கே இடமில்லை. உடம்பினுள் தசை நார்களையும், இரத்தக் குழாயிலுள்ள தசை நார்களையும் தேவைக்கேற்ப சுருங்கி விரிவடையச் செய்யும் திறன் கொண்டது கல்லீரலாகும்.

கல்லீரல் பாதிப்புக்குள்ளாகும்போது இரத்தக் குழாய்கள் தேவைக் கேற்ப சுருங்கி விரியாததால் இரத்த அழுத்தம் <ஆட> எனும் நோய் உண்டாகிறது. கண்களில் ஏற்பட்டால் எப்ஹன்ஸ்ரீர்ம்ஹ என்னும் நோய் கண்களைத் தாக்குகிறது. மூளையில் உள்ள இரத்தக்குழாய் பாதிக்கப்படும் போது பக்கவாத நோய் உண்டாகிறது. மூளையினுள் அய்ங்ன்ழ்ண்ள்ம் எனும் இரத்தக் குழாய் வெடித்துப் போகும் அளவுக்குப் பெருத்து வீங்கும் நோய் ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் தோல் சம்பந்தப்பட்ட நோய்களாகவும் உருவெடுக்கிறது.

சட்டம் ஒரு இருட்டறை

S.சுகுமார்
266\C858


குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று வீடு திரும்பிய தயாளன் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்தது! உள்ளே நுழைந்த பிள்ளைகள் இருவரும் ``பீரோ கூட உடைஞ்சிருக்குப்பா'' என்றவாறே பீரோவின் அருகில் சென்றனர். பீரோவில் இருந்த துணிமணிகள் அறையெல்லாம் சிதறிக் கிடந்தன. ``இதெல்லாம் அப்படியே இருக்கட்டும்; எதையும் எடுக்காதீங்க. நான் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் கம்ப்ளெய்ன்ட் குடுத்துட்டு வந்திடுறேன்'' என்று சைக்கிளை எடுக்கப் போன தயாளன் `சைக்கிளையும் காணவில்லை' என்றதும் பாவம் பதறித்தான் போனான். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நட நடவென நடந்தே சென்றான்.

நண்பர்களே... உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சவால்!

D.வெங்கடேசலு
255\J159
98406 70016

இந்தப் பெட்டி தெரியுமா, அந்தப் பெட்டி தெரியுமா?
முத்து செய்த பெட்டியும் இதுதான், இதுதான்!

இந்த ரொட்டி தெரியுமா, அந்த ரொட்டி தெரியுமா?
முத்து செய்த பெட்டியில் வைத்த நல்ல ரொட்டியும்
இதுதான், இதுதான்!

இந்த எலி தெரியுமா, அந்த எலி தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தினம் தின்ற எலியும் இதுதான், இதுதான்!

இந்தப் பூனை தெரியுமா, அந்தப் பூனை தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தின்ற எலியை, கொன்று தின்ற பூனையும் இதுதான், இதுதான்!

இந்த நாய் தெரியுமா, அந்த நாய் தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தின்ற எலியை, கொன்று தின்ற பூனையை
குரைத்திட்ட நாயும் இதுதான், இதுதான்!

இந்தப் பசு தெரியுமா, அந்தப் பசு தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தின்ற எலியை, கொன்று தின்ற பூனையை
குரைத்திட்ட நாயை உதைத்திட்ட பசுவும் இதுதான், இதுதான்!

இந்தக் கோபால் தெரியுமா, அந்தக் கோபால் தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தின்ற எலியை, கொன்று தின்ற பூனையை
குரைத்திட்ட நாயை உதைத்திட்ட பசுவை
கறந்திட்ட கோபால் இவர்தான், இவர்தான்!

நாங்கள் யார் தெரியுமா, நாங்கள் யார் தெரியுமா?
முத்து செய்த பெட்டியில், வைத்த நல்ல ரொட்டியை
தினம் தின்ற எலியை, கொன்று தின்ற பூனையை
குரைத்திட்ட நாயை உதைத்திட்ட பசுவை
கோபால் கறந்திட்ட பாலை குடித்த மாணவர்கள்
நாங்கள்தான்... நாங்கள்தான்...!

குறிப்பு : இதைப் படித்து முடித்ததும், மூடி வைத்துவிட்டு, சொல்லப்பட்ட நிகழ்வுகளை வரிசைப்படுத்துங்கள். முழுமையாக உங்களால் நினைவுப்படுத்திக் கொள்ள முடிந்தால், நிச்சயம் நீங்கள் ஜீனியஸ்தான் சார்! அப்படி முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்! மீண்டும் ஒரு முறை படித்து, பின் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்! உங்கள் நினைவாற்றல் வளரும்!

தாய்மொழியின் அருமை புரியும்!

தாய்மொழியின் அருமை புரியும்!

P.K.மாதவன்
துணைத்தலைவர்
அசோக் லேலண்ட்
தொழிற்சங்கம்
யூனிட் II, ஓசூர்

அடுத்தவர் கையில் சாப்பிடும்போது
தாயின் அருமை புரியும்!
அயல் நாட்டில் அனாதையாக நிற்கும்போது
தாய்நாட்டின் அருமை புரியும்!
சொல்ல வந்ததைப் புரியும்படி
தெளிவாகச் சொல்ல
       முடியாமல் தவிக்கையில்
தாய்மொழியின் அருமை புரியும்!

`பளிச்' கவிதைகள்

B.பத்மநாபன்
217\38465

விருட்சம்
சிறு விதைகளாய் இருப்பதால்
சிறுமை கொள்ளாதே
என்றாவது ஒருநாள்
பெரும் விருட்சமாக மாறுவோம்
கவலை கொள்ளாதே
அந்த நாளை நீ தள்ளிவிடாதே

மின்னல்
வானுக்கும்
மண்ணுக்கும்
இடையே நடக்கும்
மின்னஞ்சல்

நீர்வீழ்ச்சி
காண்பவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சி
பிறர் வீழ்வதை ரசிக்கும் மனிதன்
நதியையும் விட்டு வைக்கவிலை!

பொய் முகங்கள்
பாலாடையில் பால்குடித்தது முதல்
பாடையில் நாம் போகும் வரை
ஆடை மாற்றுவது போல் மாற்றுகிறோம்
வேஷங்கள் மாற்றுகிறோம்
மாறும் மனதிற்கேற்ப
மாறும் முகமூடிகள்...
முகமூடிகள் நிஜமானால்
நம்முகத்தை நாமே மறந்திடுவோம்!

மறுக்கப்படும் நீதி! ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்

கி.சுரேஷ்
270\38313
சேசிஸ் அசெம்பிளி

மவுலிவாக்கம் கட்டிட விபத்து என்றாலும், மழைக்கு திருவள்ளூர் சுற்றுச் சுவர் இடிந்து வீழ்வது என்றாலும், பன்னாட்டு கம்பெனிகளின் ஆலை மூடல் என்றாலும் முதலில் பாதிக்கப்படுவது தொழிலாளர்களே!

இந்தியாவில் இருக்கும் அநேக துறைகளில் அதிக சட்டங்கள் கொண்ட துறையாக விளங்குவது தொழிலாளர்துறையாகும். ஆனால் நடைமுறையில் தொழிலாளர் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதும் இல்லை, பின்பற்றுங்கள் என்று ஆள்பவர்கள் சொல்வதும் இல்லை. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அரசே தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுகிறது. பின் எப்படி முதலாளிகள் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிப்பார்கள்? தற்போது பொறுப்பேற்றிருக்கும் மத்திய அரசை சில ஊடகங்களும், முதலாளிகளும் ஆபத்பாந்தவனாக சித்தரித்தார்கள். விளைவு, காங்கிரஸ்  செய்த அதே தவறைத்தான் இந்த அரசும் செய்து கொண்டிருக்கிறது. அது விவசாயம் என்றாலும், தொழில்துறை என்றாலும் இதே கதிதான். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOU) எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து உள்ளன என்பதற்கு சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனம்.