Wednesday, 20 August 2014

எலுமிச்சை நார்ச்சத்து நிறைந்துள்ள உயர்ந்த கனி...

ஆ.டில்லி
சித்த வைத்தியர்
99401 66297

நாம் சாதாரணமானவை என நினைக்கும் பொருட்கள் கூட பல சமயங்களில் உயிர் காக்கும் சஞ்சீவினியாய் பயன்படுகின்றன. இந்த வகையில் விஷச் சாராயம் அருந்தி, கண்பார்வை மங்கி, உயிர் போகும் நிலையில் உள்ள ஒருவரை சாதாரணம் என்று நினைத்த எலுமிச்சைப் பழம் கொண்டு பிழைக்க வைத்து, கண் பார்வையை மீட்டுக் கொடுத்த அதிசயத்தை எப்படிப் பாராட்டுவது?

விஷச்சாராயம் அருந்திய பலர் கண் மங்குதல் ஏற்பட்டு, படிப்படியாக இறந்து கொண்டிருந்த நிலையில், ஒருவர் மட்டும் சில எலுமிச்சைப் பழங்களைத் தோலுடன் மென்று சாப்பிட்டார்; கண்பார்வைத் தெளிவடைய, மேலும் சில பழங்களைச் சாப்பிட்டார்; அரை மணி நேரத்தில் மயக்கம் தெளிந்து, கண்பார்வையும் பெற்று குணமடைந்தார். ஆனால் இவருடன் விஷச் சாராயம் சாப்பிட்ட அனைவரும் இறந்து போனது பெரிய சோகம். இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எலுமிச்சையின் பயன்பாட்டை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.



இந்தியா, சீனா எலுமிச்சையின் பிறப்பிடமாகும். மெல்லிய நறுமணத்துடன், எளிதில் ஆவியாகும் எண்ணெயுடன், இளமஞ்சள் நிறத்துடன் இருக்கும் கனி எலுமிச்சை. சிட்ரிக் அமிலம் எனப்படும் இயற்கை அமிலம் இதில் உள்ளது. 17_ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் போர்க்கப்பல் மாலுமிகளுக்கு ஏற்பட்ட `ஸ்கர்வி' நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றிய பெருமை எலுமிச்சையில் உள்ள அஸ்கோர்பிக் அமிலம் எனப்படும உயிர்ச்சத்தாகிய வைட்டமின் `சி'யையே சாரும்.

வைட்டமின் `சி' சத்துள்ள வேறு பழங்கள் கிச்சிலி, நாரத்தை, சாத்துக்குடி. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் உயிர் வெளியேற்ற எதிரி எனப்படும் ஆண்டி ஆக்சிடெண்ட் குணங்களை இந்த அமிலம் மூலம் பெறலாம். எலுமிச்சையில் கஸ்தூரி எலுமிச்சை, காட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை போன்ற வகைகள் இருப்பதாக வைத்திய மூலிகை அகராதி கூறுகிறது.

எலுமிச்சைப் பழத்தில் 5% சிட்ரிக் அமிலம் உள்ளது. நமது உடலில் ஆக்சிகரணம் <ஞஷ்ண்க்ஹற்ண்ர்ய்> நடைபெற்று, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் ஆகிய சத்துகள் சிதைக்கப்பட்டு சக்தியாக மாற்றமடைகின்றன. இந்தச் சக்தி மாற்றம் நடைபெறுவதற்கு சிட்ரிக் அமிலம் ஒரு காரணியாக செயல்படுகிறது. மேற்கூறிய இரசாயன நிகழ்வின் போது உணவின் பாதிப் பொருட்கள் கரியமில வாயுவாகவும், தண்ணீராகவும் மாற்றமடைகின்றன. எலுமிச்சை எந்தெந்த நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா