Wednesday, 20 August 2014

மதச்சார்பின்மை... வகுப்புவாதம்... தெரிந்து கொள்வோம்...

M. ஆதிகேசவன்
264\J066

இந்தியாவை ஒரு மதச் சார்பற்ற சமூகமாக மாற்ற நாம் ஒரு சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தியாவில் மதச் சார்பின்மையை நாத்திகம் என்று புரிந்து கொள்கிறார்கள். இது சரியல்ல. மதச் சார்பின்மை என்பதன் பொருள், அரசியலில் மதம் கலக்கக்கூடாது என்பதே.

மதம் என்பது அதில் நம்பிக்கையுள்ளவரின் முற்றிலும் தனிப்பட்ட நடவடிக்கை என்ற பொருளாகும். இந்திய குடிமக்கள் எவரும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, சீக்கிய மதங்கள் போன்ற இதர மதங்கள் எதையும் பின்பற்றாமை என்பதும், அவர்கள் விரும்புகிற மதத்தை நம்புவதற்கும், பின்பற்றுவதற்கும் உரிமை இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஒவ்வொரு குடிமகனும் அவர் விரும்புகிற மதத்தில் நம்பிகை வைத்து அதைப் பின்பற்றுகிற அடிப்படை உரிமைகளில் அரசு தலையிடவோ, அல்லது இடையூறு விளைவிக்கவோ கூடாது. அதைப் போலவே மத நம்பிக்கையற்ற, கடவுள் மீது நம்பிக்கையில்லாத தனிநபர்களும், குழுக்களும் எந்தவித மதத்திலும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும், பின்பற்றாமல் இருப்பதற்கும் உரிமை பெற்றவர்கள்.


வகுப்புவாதத்தைப் பொறுத்தவரை மதத்தினை அரசியலுடன் கலப்பது. ஏதாவது ஒரு பிரிவினரின் அல்லது இதர பிரிவினரின் மதக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் கல்வி, நிர்வாகம், அரசியல் போன்ற விஷயங்களில் நுழைப்பது என்பதே.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் செயல்படும் அரசியல் கட்சியான பிஜேபி ஒரு வகுப்புவாத அமைப்பாகும். காங்கிரஸ் கட்சி ஒரு வகுப்புவாத கட்சி அல்ல எனினும் வகுப்பவாத கட்சிகளுடன் அது தீவிரமாக சமரசம் செய்து கொள்கிறது. இடதுசாரிகள் மட்டும் தான் எந்தவித சமரசமும் இன்றி வகுப்புவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். உழைக்கும் மக்களின் வர்க்க மற்றும் அரசியல் போராட்டங்களை வளர்த்தெடுப்பதன் மூலமே வகுப்புவாத மோதல்களை வென்றெடுக்க முடியும் என்பதை உழைப்பாளி மக்கள் உணர்ந்து, வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே வகுப்புவாத அபாயத்தை முறியடிக்க முடியும்!!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா