Wednesday, 20 August 2014

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர் V.A.சிவா அய்யாதுரை

அனந்த நாராயணன்
 275\L192

புறாவைப் பயன்படுத்தித் தூது அனுப்புவது முதல் அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனால், கணினி என்ற கண்டுபிடிப்பு வந்தபின், தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியவில்லை. கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும், அதனுடைய வளர்ச்சி வேகம் இரு மடங்காகியது என்றால், அது மிகையாகாது. அதுவும் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தக் கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருட்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டன. அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று.


இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன. தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகில் முக்கியமான அலுவலகக் கோப்பு பரிமாற்றங்கள் முதல் தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலைக் கண்டுபிடித்து தகவல் தொடர்பு உலகிற்கு அர்ப்பணித்தவர் ஒரு தமிழர் என்பதை நினைக்கும் போது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. ஆம்! V.A.சிவா அய்யாத்துரை தனது 14வது வயதிலேயே மின்னஞ்சலைக் கண்டுபிடித்தார். மிக இளம் வயதிலேயே இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

மாணவப் பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்குக் காப்புரிமை பெற நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டார். பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை தந்தது. இதைப் போன்ற சிரமம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகையும் அறிவித்திருக்கிறார்.

இன்றைய நிலையில், பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான சிவா அய்யாத்துரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான MIT (Massachusetts Institute of Technology)யில் விரிவுரையாளரும் கூட. அமெரிக்கத் தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்துப் பாராட்டியிருக்கிறது. நாமும் அவரை வாழ்த்தி மகிழ்வோம்!

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா