Thursday 22 January 2015

இரவு வேலை

.பன்னீர்செல்வம்
261\36354



உழைப்பின் திறன் அனைத்தும்
            கண் உறங்கும் வேளைதனில்
நிறுவனத்தின் உற்பத்தி
            வளர்ச்சிக்குக் கொடுத்துவிட்டு

தலை தட்டும் படிக்கணக்கால்
            அபரிமித லாபத்துடன்
உழைத்தவன் கணக்கிலே
            ஒரு படியும் மிகாமலே

ஞபயின் பண பலனெலாம்
            நிர்வாகத்திடம் குவிய
களைத்துக் கசங்கி திரும்பிய
            வர்க்கத் தோழர்கள் அனைவரும்

விடியலை எண்ணி மனம்
            அசை போட்ட படி
எண்ண அலைகள் பின்னோக்கி
            சென்றிடும்... கண்ணயர்ந்த வேளையிலே...

அவரவர் வீடு நோக்கி சுமந்து கொண்டு
            பின்புற சிவப்பு விளக்கு எரியவிட்டு
சாலையை விழுங்கியபடியே
            முன்னோக்கி மின்னெலென பறந்தது
ஓர் நீல நிறப் பறவை!
மாறும் நிலை வந்தால் மாற்றம் வந்தே தீரும்!


No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா