Thursday 22 January 2015

தேக உஷ்ணக் கட்டுப்பாடு!

Healer P.சந்திரன் D.Acu.
256\L510
98843 16619



உடலில் ஏற்படும் எல்லாவித உஷ்ணங்களையும் சமப்படுத்த இந்தத் தேக உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பை வலுவூட்டுதல் அவசியமாகிறது.

உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது அறையானது நுரையீரலும், இதயமும் சேர்ந்தது. இரண்டாவது அறை வயிறும், மண்ணீரலும் சேர்ந்தது. மூன்றாவது அறை ஜனன உறுப்புகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கல்லீரல் சேர்ந்தது.

முதல் அறையில் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக சளியினால் ஏற்படக்கூடிய சாதாரணக் காய்ச்சல், நிமோனியா, ஷயரோக (ப.ஆ.) காய்ச்சல், இதய பாதிப்பால் ஏற்படக்கூடிய காய்ச்சல் போன்ற நோய்களை நீக்கிவிடலாம். 

இரண்டாவது அறையோடு சம்பந்தப்பட்ட உறுப்புகள் வயிறும், மண்ணீரலும் ஆகும். வயிற்றில் அஜீரணத்தால் ஏற்படும் உஷ்ணம், சாப்பிடாமல் இருக்கும்போது ஏற்படும் உஷ்ணம் மற்றும் வாயுத் தொந்தரவுகள், வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்கள் உண்டாகலாம். அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணம், வயிறு உப்புசம், புளித்த ஏப்பம், வயிற்றில் வெப்பம் உண்டாகுதல் போன்றவை ஏற்படலாம்.

இரத்த உற்பத்திக்கு காரணமான மண்ணீரல் செயலிழக்கும் பொழுது இரத்த சோகை (அய்ஹங்ம்ண்ஹ) இரத்தப்புற்று நோய்கள் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட மலேரியா, பைலேரியா போன்ற நோய்கள், அஜீரணக் கோளாறுகள் யாவும் இந்த இரண்டாவது அறை உஷ்ணக்கட்டுப்பாட்டைச் சரி செய்வதன் மூலம் எளிதாக நிவர்த்தி செய்யலாம்.

மூன்றாவது அறையில் உள்ள தேக உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் கல்லீரல் பலவீனத்தால் ஏற்படக்கூடிய குளிர் ஜுரம் வராமலும், கை, கால்கள் வீங்காதவாறும் ``டைபாய்டு'' ஜுரத்தை ஆரம்பித்த அன்றே மேலும் பரவாமல் தடுக்கக் கூடிய வேலையையும் செய்யலாம். சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தட்ங்ன்ம்ஹற்ண்ஸ்ரீ ஊங்ஸ்ங்ழ் எனும் ஜுரம் இதயத்தின் வால்வுகளைப் பழுதடையச் செய்து பெரியவனானதும் இதய நோயாளியாக்கிவிடும். 

ஜுரம் ஆரம்பிக்கும்பொழுது மோதிர விரலின் நகத்தின் அருகேயுள்ள அக்குபங்சர் புள்ளிகளைத் தூண்டிவிடுவதன் மூலம் எளிதாக நிவர்த்தி செய்துவிடலாம். மோதிர விரலில் உள்ள நகத்தின் மாறுபாடுகள், நகச்சுத்தி, விரல்களை மடக்கி நீட்ட முடியாத நிலை, விரல்வலி போன்றவைகள் தேக உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு சரியான நிலையில் இயங்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.


No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா