E.கருணாகரன் 264/L460
Auto Engine
Dressing
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். தண்ணீரானது தாகத்தைத் தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியது கூட. மேலும், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல நோய்களில் இருந்து விடுபடலாம். பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகின்றன. எனவே, வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
காலையில் பற்களை துலக்கியதும் 4 டம்ளர் தண்ணீர் குடித்த பின்னர் ஒரு மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இதற்குப் பெயர் தண்ணீர் சிகிச்சை. ஜப்பானியர்கள் இதைச் செய்வதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர்.
நன்மைகள் : அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், குடல் சுத்தமாகும். மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாகவும் இது அமைகிறது. பசியைத் தூண்டும். நீர்ச்சத்து அதிகமாகி தலைவலி வராமல் தடுக்கும். இரத்தச் சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளும் நஞ்சுகளும் கரைந்து வெளியேறி உடல் எடை குறையும். குடல் சுத்தமாக இல்லாவிட்டால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அதிகாலையில் தினமும் தண்ணீர் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகி முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் வளர்சிதை மாற்றத்தின் விகிதம் (ஙங்ற்ஹக்ஷர்ப்ண்ஸ்ரீ தஹற்ண்ர்) 24% அதிகரிக்கும். இதனால் உணவு விரைவில் செரிமானம் அடையும். ஜப்பானியர்களைப் போல் நாமும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்வோம்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா