Wednesday 21 January 2015

நீலப்புரட்சி

T.கஜேந்திரன்
270\37233

நீல வர்ணம் பூசிய அறைகளில் பணிபுரிபவர்கள் அமைதியுடன் இருப்பார்கள். நீல நிறம் குற்றம் குறைகளை நீக்கும் என்பதால் 90% சலவை சோப்புகள் நீல நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன. மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதை நீலப்புரட்சி என்கிறோம்.

உலகிலேயே மிகப் பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலம் 120 டன் எடை கொண்டதாம். கிளிகளில் நீலநிறக் கிளிகள் அதிகபட்சமாக 64 ஆண்டுகள் வரை உயிர்வாழுமாம். மாணிக்கத்தில் ஒருவகையான நீலகாந்தி கெட்டியாக உருண்டை வடிவில் காணப்படும். துருக்கி நாட்டில் அமைந்துள்ள சுல்தான் முகமது மசூதி ``நீல மசூதி'' என்று அழைக்கப்படுகிறது.

நைல் நதியின் முக்கிய துணை நதியான நீல நைல் எத்தியோப்பாவில் உருவாகிறது. நீல நிறம் உண்மை, வெற்றி, அமைதி ஆகியவை உள்ளடங்கியது என்பதால் நீல நிறத்தையே பெரும்பாலான மக்கள் பிடித்த நிறமாகத் தேர்வு செய்கின்றனர்.

மனிதன் நிறம் மாறினாலும், வானும் கடலும், அந்த நாள் முதல் எந்த நாளும் நீல நிறம் தானே! அப்பப்பா... நீலம்... இத்தனை நீளமா..??

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா