Showing posts with label ஸ்டாலின் ராஜா. Show all posts
Showing posts with label ஸ்டாலின் ராஜா. Show all posts

Thursday, 22 January 2015

ஆரோக்கியத்திற்கான பழமொழிகள் பத்து

ஸ்டாலின் ராஜா
இணைச்செயலாளர்
யூனிட் I, ஓசூர்
அசோக் லேலண்ட்
தொழிற்சங்கம்



1. நொறுங்க சாப்பிட்டா நூறு வயசு!

2. அள்ளி அமுக்குனா அற்ப வயசு!

3. குறைச்சு சாப்பிட்டா கூட வயசு!

4. வயிறு முட்ட சாப்பிட்டா வயித்தாலதான் போகும்!

5. பசித்துப் புசி!

6. நொறுக்குத் தீனி ஆயுள் குறுக்கி!

7. வாயைக் கட்டி நோயைக் கட்டு!

8. பசியறியா வயிறு பாழ்!

9. ருசி வயிற்றுக்கு சதி!

10. வாயில் செரிக்காதது வயிற்றில் செரிக்காது!

Friday, 20 June 2014

டீக்கடை பெஞ்ச்

ஸ்டாலின் ராஜா
செயலாளர், சிஐடியு,
ஓசூர் யூனிட் I

            அந்தக்காலத்தில் எந்த டெக்னாலஜியும் இல்லாமல் எப்படி கிணறு வெட்டுனாங்க?
            கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்க வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். அதேபோல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது. இவற்றுக்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை அவர்களே கண்டுபிடித்திருக்கிறார்கள்.     மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில், அதிக அளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும். சரீ நீரூற்று இருக்கும், ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

            நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் முதல் நாள் இரவு தூவி விட வேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றைச் சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேகரித்த அடையாளங்கள், தடயங்கள் இருந்தால் அந்த இடத்தில் கிணறு வெட்டினால், தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்று கண்டுபிடித்தது மட்டுமல்ல, கோடை காலத்திலும் வற்றாத நீரூற்று எந்த இடத்தில் இருக்கும் என்பதையும் அறிந்துள்ளனர். கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்துவிட்டு, பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்தில் மேய விட வேண்டும். பின்னர் அந்தப் பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம்! அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால், அவை தொடர்ந்து ஒரே இடத்தில் படுக்குமாம்! அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்று கிடைக்குமாம்! என்னே.. நம் முன்னோர்களின் விஞ்ஞான அறிவு!