Showing posts with label 2012 12 December. Show all posts
Showing posts with label 2012 12 December. Show all posts

Monday, 31 December 2012

முழு இதழ் மின்புத்தகமாக


Urimai Kural December Final 1

Tuesday, 25 December 2012

வேகம்



சிறுகதை

S.கெஜராஜ் 375\K700 Mechatronics

      அந்த அரசியல் பிரமுகர் வீட்டின் முன் காலையிலேயே கட்சித் தொண்டர்கள் மற்றும் சக தோழர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. ``தலைவரே... வணக்கம்! தலைவர் வாழ்க!'' கூட்டத்தில் இருந்த சிலர் அவர் வருவதைப் பார்த்துக் கூக்குரலிட்டனர். கூட்டத்தைப பார்த்து தலைவர் ``யோவ்! உங்களுடைய கூட்டத்துக்கும் ஆரவாரத்துக்கும் ஒண்ணும் குறைச்சலில்ல... ஆனா... ஓட்டுதான் வர மாட்டேங்குது!''

அசோக் லேலண்ட் - ஓசூர் யூனிட் 1 செய்திகள்



      கடந்த எந்த ஆண்டுகளை ஒப்பிட்டாலும், மிகச் சிறப்பாக இருக்கும் வகையில் போனஸ் பேச்சுவார்த்தையை நோ இம்ப்ரூவ்மெண்டே இல்லாமல் பேசி முடித்து ரூ.40 ஆயிரம் பெற்றுத் தந்து சாதனை படைத்த சங்கத் தலைவர்கள் திரு.மைக்கேல் பி.பெர்ணாண்டஸ், தோழர் டி.என்.நம்பிராஜன் மற்றும் அனைத்து யூனிட் சங்க நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.

ஹைக்கூ பூங்கா



இனியவன் ஜி.ஸ்ரீதர் 256/38176

வரிகளுக்கு
வேகத்தடை
கமா!

மனித வாய் குகையில்
பளிங்கு கற்கள்
பற்கள்!

கனவுகளும் கற்பனைகளும்



V.கோவிந்தசாமி 352/K302 Mechanical Maintenance

      பொதுவாக இந்தத் தலைப்பைப் படிக்கிற ஒருவருக்கு ஏதோ ஒரு சினிமா ரசிகன், நடிகையைப் பற்றி காணும் கனவுகள், கற்பனைகள் பற்றி சொல்லப்படும் சமாச்சாரமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும்! அல்லது 10 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் ஒருவன் தான் எப்படியும் ஒரு நாளைக்கு கோடீஸ்வரனாக ஆகிவிடலாம் என கனவு கண்டு வாழும் ஒரு அப்பாவி பற்றிய விஷயமாக இருக்கலாம் என்று கூடத் தோன்றும்.

டிராம் நினைவுகள்



சு.சக்கீர் 240/J030


மெட்ரோ ரயில், மோனோ ரயில் என சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைத்திட, ஏதாவது ஒரு வழி கிடைத்தால் போதும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நேரமிது. ஆனால் பேருந்து போக்குவரத்து பிரபலமாகவதற்கு முன்பாகவே, சென்னைவாசிகளுக்குப் பரிச்சயமானது டிராம் எனும் மின்சார வண்டிகள். டிராம்களை காணவிரும்பும் இந்தியர்கள், இனி கொல்கத்தாவிற்குத்தான் செல்ல வேண்டும். இல்லையெனில் 1942-ஆம் ஆண்டு வெளியான என் மனைவி போன்ற பழங்கால தமிழ்த் திரைப்படங்களைத் தேடிப்பிடித்து பார்க்கலாம்.

மனிதப் பேரவலம்



B.H.அனந்த கிருஷ்ணமோகன்
250\37837

      வாழ்க்கையை நரகமென நினைத்து நொந்து கொண்டு நம்மில் பலபேர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையான நரக உலகம் என்பது எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயாளிகளின் இறுதி காலக்கட்டத்தைக் கூறலாம். அதிலும் வாய்ப்புற்று நோயாளிகளின் நிலையை நேரில் காண மன தைரியம் நிச்சயம் வேண்டும்.

இசையால் வளமாகும் ஆளுமைத் திறன் - பாகம் 9



உரிமைக்குரல்: ஒரு இசை வடிவம் உருவாக்கப்பட்ட காலத்தின் நினைவு தொடர்ச்சியாகவே என்றும் இருக்கும். அந்தக் காலத்தை வேறு ஒரு புதிய இடத்தில் புதிய காலகட்டத்தில் மீண்டும் உருவாக்கி காட்டுவது அல்லது அந்தக் காலத்திற்குள் நாம் நுழைந்து வெளிவருவது என்கிற நிலை ஏற்படுகிறது என்று நீங்கள் கூறுவீர்களா?

டீலக்ஸ் கொள்ளை



அ.அப்துல் வாஹித்
752\36991

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் டீலக்ஸ் பஸ்கள்அடிக்கும் கட்டணக் கொள்ளை சொல்லி மாளாது. உதாரணத்திற்கு சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்வதற்கு 6டி என்ற சொகுசு மற்றும் விரைவுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதற்குக் கட்டணம் ரூ.13\-, ரூ.9\- இடைப்பட்ட தூரம் 3 அல்லது 4 கி.மீ. மட்டுமே.

காளான்... பேல்பூரி... பானிபூரி... உஷார்



அற்புதம் ஜேசுராஜ்
எவரெடி தொழிலகம்

      சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல்பூரி, பானிபூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ.10\- என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கின்றன. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

நவீன அறிவியலின் சிற்பி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



C.தவமணி 268\36971

      நவீன அறிவியலின் சிற்பியான ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு தடவை நிருபர்களிடம் காலம் சம்பந்தமான உங்களின் கோட்பாடு புரியவில்லை என்றார்களாம். அதற்கு அவர் நகைச்சுவையோடு, நீங்கள் ஒரு அழகான பெண்ணிடம் ஒரு நாள் முழுக்கப் பேசினாலும், நேரம் போவதே தெரியாமல் ஒரு மணி நேரமே கழிந்தது போல் தெரியுமல்லவா? அதே போல் கனகனக்கும் அடுப்பின் மேல் ஒரு நிமிடமே இருந்தாலும் ஒரு நாள் போல் தோன்றுமல்லவா! அது போலத்தான் காலமும் என்றாராம்.

குற்றம் - சட்டம் என்ன சொல்கிறது?



கிரைம் ஸ்டோரி

பிரேம் N.பிரேமராசன் B.Sc., B.L., 450/F159, QC-Lab

      சட்டப்படி குற்றம் என்றால் என்ன? என்ன வகைகள்? உட்பிரிவுகள் என்ன? குற்றத்தில் எவை முக்கியமானது? இந்தியன் பீனல் கோட் (ஐபிசி) படி அதன் வகைகள் என்ன என்பதை இங்கு காண்போம்.
      கிரைம் என்றால் சட்ட நூல்படி அது பொது தவறு (பப்ளிக் ராங்) ஆகும். கொலைக்குற்றம் என்று எடுத்துக் கொண்டால், (1) கத்தியால் கொல்வது, அல்லது விஷம் கொடுத்துக் கொல்வது (2) உணவு கொடுக்காமல் கொல்வது என இரு வகை.

நீதிதேவன் மயக்கம்



சிறுகதை

S.சுகுமார் 266/C858

      ``அய்யப்புதூர் ஆலமரக் கோயிலின் வினாயகர் சிலையைத் திருடியதாகவும், அதே கோயிலில் இருந்து உண்டியலையும் கொள்ளையடித்ததாகவும் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?'' குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ரங்கனைப் பார்த்து கேட்டார் நீதிபதி.

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

`அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்பார்கள். தற்போது நவீன மருத்துவ உலகில் இலட்சங்களைச் செலவு செய்து விட்டு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த முதுமொழியில் தீர்வு இருக்கிறது என்பதே சித்தர்களின் கூற்று. அரச மரத்தின் மகத்துவம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தற்போது குழந்தைகள் இல்லாத தம்பதிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் காண்போம்.

அக்கம்பக்கம்



கான்வாய் டிரைவர்கள் (சிஐடியு) சங்கத்தின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்

      அசோக் லேலண்ட் நிறுவனம் உருவான நாளில் இருந்து, அசோக் லேலண்டில் உற்பத்தியாகும் வண்டிகளை பங்களாதேஷ், நேபாளம் வரை கொண்டு சேர்க்கும் பணியை கான்வாய் தொழிலாளர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் சங்கம் வைத்து இந்தப் பணி நிரந்தரத் தன்மை வாய்ந்தது என்று தங்களை நிரந்தரப் படுத்தக் கோரினர்.

மனமிருந்தால் நல்ல மாற்றத்தை உருவாக்கலாம்



K.சுப்பிரமணி,
250\L191
செயலாளர், நுகர்வோர்பாதுகாப்பு மையம், திருவொற்றியூர்

      ஓவ்வொரு தனி மனிதனுக்கும், நிறுவனத்திற்கும் சமுதாயத்தை மேம்படுத்தும் கடமை உள்ளது. அதிலும் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், காற்று இவற்றை மாசுப்படுத்தி பொருள் உற்பத்தி செய்து அபரிமிதமான லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேம்படுத்தும் கடமை மிக அதிகமாக உண்டு. ஆனால் நமது பகுதியில் உள்ள நிறுவனங்கள் சமுதாயத்தை மேம்படுத்தும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்கின்றனவா? என்றால் இல்லை என்பதே அனைவரின் பதிலாக இருக்கும்.

பப்பாளிப் பழம்





S.ரகுபதி
221\C879

      பப்பாளிப் பழம் இனிமையான சத்து மிகுதியான பழமாக இருப்பதோடு. மிக மலிவாக கிடைப்பதாக இருந்தும், பெரும்பான்மை மக்கள் இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவதில்லை. இந்தப் பழத்தை பற்றிய சில தவறான கருத்துகளே அதற்கு காரணம்.

மின்னியல் (எலக்ட்ரிக்கல்ஸ்)



ஜி.கிருஷ்ணகுமார்
353 \ 36962

மின் சிக்கன வழிமுறைகள்
சிக்கனமும் சேமிப்பும் எப்போதும் தேவை. மின்சாரத்தையும் நாம் சேமிக்க முடியும். எப்படி? இதோ... சில டிப்ஸ்!
மின்சாரம் சார்ந்த உபகரணங்களைத் தேவையில்லாத பொழுது சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் (உ-ம்: பல்பு, மின்விசிறி). நம் வீடுகளில் உபயோகப்படுத்தும் டியூப் லைட், குண்டு பல்பு இவற்றுக்குப் பதிலாக 11 வாட்ஸ், 18 வாட்ஸ்களில் கிடைக்கும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்கலாம். குண்டு பல்புகளைத் தவிர்ப்பதால் குளோபல் வார்மிங்கையும் குறைக்கலாம். நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, வாட்டர் ஹீட்டர் முதலிவற்றில் டெம்பரேச்சர் கட் ஆப் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

தொழிற்சங்க அரங்கில் நமது கடமைகள் - 2



கி.சுரேஷ்
261\38313, சேசிஸ் அசெம்பிளி

அரசியல் பொருளாதாரம்
      இது கடினமான, புரிந்து கொள்ள முடியாத வார்த்தையாகத் தோன்றலாம். ஆனால் சமுதாயத்தில் இதைச் சாராமல் ஒரு மனிதனால் இருக்கவே முடியாது. எனக்கு அரசியல் வேண்டாம்பா! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்! அரசியல் ஒரு சாக்கடை அதைப் பத்தி பேசாதப்பா! என்று சிலர் தொடர்ந்து கூறி வருவதை கேட்காத நாளில்லை. அப்படி கூறும் அனைவரும் ஓட்டுப்போடுவது, பிரச்சாரம் செய்வது, ஒரு கட்சியைச் சார்ந்து நிற்பது மட்டும்தான் அரசியல் என்று நினைக்கின்றனர்.

சென்னை - பர்மா பஜாரின் வரலாறு...



அ.ஜோசப் பிரேம்நாத்
M.A.(His), M.A.(Eco),B.G.L. D.L.L., A.L.
250/L988

ஷாப்பிங் என்றாலே இன்றைய சென்னை வாசிகளுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் பாண்டி பஜார். காரணம் தலைக்கு கிளிப் முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்தையும் இங்கு வாங்கிவிட முடியும். இப்படி அந்த கால சென்னை வாசிகளுக்கு ஷாப்பிங் இடம் இருந்ததா? - இதற்கான விடையைத் தேடிய போதுதான் மெட்ராசின் ஒரு சுவாரஸ்யமான பஜார் பற்றி தெரிய வந்தது.