Tuesday, 25 December 2012

பழமொழி - உண்மைப் பொருள் அறியலாமே...?



K.நாகராஜ்
T.No.5399, Shop X

களவும் கற்று மற...
      களவாடுவதையும் கற்று பின் மறந்துவிட வேண்டும் என்று நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
      ஆனால் இப்பழமொழியின் நிஜ வடிவம் ``களவும் கத்தும் அற'' என்பதாகும். அதாவது தமிழ் மொழியில் களவு என்பதற்கு திருட்டு, கத்து என்பதற்கு பொய் என்பதும் பொருள். இதன் மூலம் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதே உண்மைப் பொருள்.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே...

      மண்ணால் ஆன குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினால் அக்கரை சேர முடியாது என்று ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனுள் குதிரை ஆற்றைக் கடக்க உதவும் விலங்கு என்ற பொருள் உள் நிற்கிறது. ஆனால் ஆற்றைக் கடக்கும் வலிமை குதிரைகளுக்கு மிகக் குறைவு என்பதால் பழமொழியின் நிஜ வடிவம் மண்குதிர்-ஐ நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே. மண் குதிர் என்றால் மணல் மேடு என்று பொருள். பார்ப்பதற்கு உறுதியாக இருப்பது போல தெரிந்தாலும் மண்குதிரை நம்பி இறங்கினால் புதையுண்டு போவார்கள் என்பதே உண்மைப் பொருள்.
      என்ன நண்பர்களே... உண்மைப் பொருள் உணர்ந்தோமா?

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா