S.கெஜராஜ் 375\K700
Mechatronics
``சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது'' - நிமிர்ந்து
பார்த்த நாச்சியா முகத்தில் ஆச்சர்யக் குறி. சின்ன வயசுல அப்பாவுடன் வந்தது...! அதுக்கப்புறம்
இதோ இப்போ இரு குழந்தைகளுடன் கணவன் இறந்து ஆண்டுகள் மூன்று ஓடியது. தனது உறவினர் ஒருவரின்
உதவியுடன் சென்னையில் பிழைப்பு தேட வேண்டும்.
``நாச்சியா...! இந்த ரெண்டு வீட்டுல பத்து பாத்திரம்
தேய்ச்சிக் கொடு'' என்று கூறி, பக்கத்து வீட்டுப் பெண் அறிமுகப் படுத்தி பிழைக்கும்
வழியை நாச்சியாவுக்குக் காண்பித்தார். நாச்சியாவின் நன்னடத்தையால் மேலும் இரண்டு மூன்று
வீடுகள் பிழைப்புக்கு ஆதரவாகின.
``இன்னா. நாச்சியா? எப்ப பூ வியாபாரம் பண்ண ஆரம்பிச்சே?''
அங்கலாய்த்தாள் அலமேலு. ``என்ன பண்றதுக்கா... வீட்டுக்கு வாடகையும், பசங்க படிக்கறதுக்கும்
சாப்பிடுறதுக்குமே பத்தலக்கா'' என்றாள் நாச்சியா. மாறி வரும் நாகரிகத்துக்கு ஏற்ப,
வளர்ந்த தன் மகனையும் காலைல பேப்பர் மற்றும் பால் பாக்கெட்டுகள் வீடு வீடாக சப்ளை செய்யச்
செய்தாள். ஒவ்வொரு விடியலுமே தனக்கு சவாலாகவே இருப்பதாக உணர்ந்தாள் நாச்சியா. வாழ்க்கைப்
போராட்டத்தில் கொஞ்சம், கொஞ்சமா போராடி சமன் செய்ய முடியாமல் இருந்தாலும், தன் பிள்ளைகளின்
படிப்பிற்காக முற்போக்கான சிந்தனையும், உழைப்பை மட்டுமே நம்பி, புதுமையான முறையில்
தன் வாழ்க்கைப் பயணத்தைச் செதுக்கினாள்.
``சார்... வணக்கம்'' என்றாள் நாச்சியா பேங்க்
மேனேஜரிடம் பவ்வியமாக. ``இன்னாம்மா... சொல்லுங்கோ'' என்றார் மேனேஜர். ``நான் இப்போ
சின்ன சின்ன தொழில் செஞ்சி என் குடும்பத்தை, ரெண்டு பிள்ளைகளைப் படிக்க வெச்சி, காப்பாத்திட்டு
வர்ரேன் சார்! எனக்கு வேன் வாங்க கடன் உதவி செய்தா, வேலைக்குப் போகும் பெண்களை ஸ்கூலுக்குப்
போகும் குழந்தைகளைப் பாதுகாப்பா அழைச்சிட்டு போவேன் சார்! அது இல்லாம மாசம் தவறாம கடனையும்
என்னால கட்ட முடியும் சார்!'' என்றாள் நாச்சியா கண்களில் கண்ணீர் ததும்ப. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்
போல நாச்சியாவின் முயற்சிக்குப் பலன் கிடைத்தது. லோனும் கிடைத்தது. மிகவும் நேர்த்தியான
முறையில் நாச்சியாவின் வாழ்க்கையும் செவ்வனே நடந்தது.
இதோ இன்று இந்த அரங்கமே கைத்தட்டல் ஒலியில் நாச்சியா
முதலமைச்சரிடம் இருந்து ``சிறந்த சிறு தொழில் முனைவோர்'' என்றப் பட்டத்தைப் பெறும்போது
அவளின் கண்களில் ஆனந்த கண்ணீர்! பல பெண்களுக்கு தான் ஒரு முன்னோடியாக இருப்பதையும்
உணர்ந்தாள்.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா