Monday, 24 December 2012

நமது குரல்

வங்கிக் கடன்.
    தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது, 1984ல் சங்கத் தலைவராக இருந்த தோழர் வி.பி.சிந்தன் நிர்வாகத்திடம் வலியுறுத்தி முதன்முதலில் வங்கிக் கடன் குறைந்த வட்டிக்கு பெற்றுத் தந்தார். 12.4.1984ல் தொழிலாளர்களுக்கு வங்கிக் கடனாக ரூ.3,000\_ வழங்கப்பட்டது. இதுதான் வங்கிக் கடன் துவங்கிய வரலாறு.
    தற்போது தொழிலாளர்கள் விருப்பத்திற்கேற்ப, எப்போதும் இல்லாத அளவிற்கு 1ணீ  இலட்ச ரூபாய் வங்கிக் கடன் சங்கத் தலைவர் டி.என்.நம்பிராஜன் பொதுச்செயலாளர் ஆர்.சற்குணன் மற்றும் சங்க நிர்வாகிகள் முயற்சியால் பல தடைகளைக் கடந்து வெற்றிகரமாக பெற்றுத் தரப்பட்டது. சுமார் 2,000 தொழிலாளர்கள் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

சங்கம் சாதிக்கும்:
    லே_ஆப் பணம் மீட்டதில் 21\2 கோடி, கிராஜிவிடியில் சி.எல். காலம் முழுவதையும் இணைத்ததால் பெற்ற பணப்பலன் 9 கோடி, ஃபர்ஸ்ட் ஷிப்ட் வேஜ் கட் சுமார் 25 இலட்சம், செட்டர்களுக்கு டிபிஏ பெற்றுத் தந்த பணப் பலன்களையும் சேர்த்தால் தோழர் டி.என்.நம்பிராஜன் தலைமையிலான நமது சங்கம் பெற்றுத் தந்த பணப் பலன்கள் சுமார் 11 3\4 கோடிக்கும் அதிகம். இது மட்டுமா? 2008 முதல் எடுக்காமல் இருந்த இறந்தோர் வாரிசு வேலை அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்திலேயே செய்யாமல் விடுபட்டவைகளை ஒப்பந்தம் இல்லாத இத்தருணத்தில் செய்தது மிகப் பெரிய சாதனையாகும். முதன் முதலாக பி.இ., டிப்ளமோ கேம்பஸ் நடத்தி வேலை பெறப்பட்டுள்ளது லேலண்ட் வரலாற்றில் ஒரு மைல் கல்.
போனஸ்:
    தோழர் டி.என்.நம்பிராஜன் + திரு.மைக்கேல் பி.பெர்ணாண்டஸ் இரு தலைவர்களும் இணைந்து, மாற்று அணி சங்க நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட ரூ.40,000\_ போனஸ் 1 1\2 லட்சம் வங்கிக்கடன், நிறைவான போனஸ் மட்டுமல்ல, வரும் காலங்களில் போனஸ் பேச்சுவார்த்தையில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இனி நாம் செய்ய வேண்டியது:
    வாரிசு வேலையை அறிவிக்க நிர்வாகத்தை நிர்பந்திக்க வேண்டும். நமது தலைவர் டி.என்.என். அவர்களும் சங்க நிர்வாகிகளும் 50 பைசா இன்சென்டிவ் தொகையை வழங்க வேண்டும் என்று நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் நிர்வாகம் இன்னமும் அதற்கு செவிசாய்க்காதது கண்டிக்கத்தக்கது. 50 பைசா இன்சென்டிவ் தொகையை சங்கம் போராடி பெற வேண்டியுள்ளது.
    11 3\4 கோடி பணப்பலன், 40,000 ரூபாய் போனஸ், 1ணீ வங்கிக் கடன் என்று பணப்பலன்களைப் பெற்றுத் தந்த சங்கம் வரும் காலங்களிலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துகிறோம்.
ஆதனூர்... சங்கம் தலையிட வேண்டுகிறோம்!
எளிய முறையில் அசோக் லேலண்ட் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை கிடைக்க வேண்டும் என்ற அக்கறையோடு அன்றைய தலைவர் தோழர் வி.பி.சி., பொதுச்செயலாளர் வி.அய்யப்பன்பிள்ளை மற்றும் நிர்வாக அதிகாரி திரு.ஜே.ஜோசப் அவர்களின் ஒத்துழைப்போடு, அசோக் லேலண்ட் பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டுமான சங்க இடம் எண்ணூர் அருகில் <மர்மத்தீவு> பெறப்பட்டது.
    அப்படி பெறப்பட்ட இடத்தை தமிழக அரசு 1990ல் அனல் மின் திட்டப் பணிக்காக எடுத்துக் கொண்டு, ஆதனூரில் மாற்று இடம் வழங்கியது. அப்போதிலிருந்தே அந்த இடத்தின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றித் தரக்கோரி, உழைப்போர் உரிமைக்கழகத் தோழர்கள் எஸ்.சுகுமார், கே.ராஜேந்திர குப்பன் மற்றும் அவர்களது குழுவினர், அரசு அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்து கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
    இதுகுறித்து உழைப்போர் உரிமைக்கழகத்தின் ஆலோசகர் தோழர் எஸ்.உமாகாந்தன், முதலமைச்சர் சிறப்பு தனிப்பிரிவுக்கு வெப்சைட் மூலம் புகார் அனுப்பினார். அதனடிப்படையில் 19.11.2012, அன்று காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம், வருவாய்த் துறை அலுவர் அவர்களிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
    அன்றைய சங்கம் தொழிலாளர்களுக்கு அக்கறையோடு வீட்டுமனை பெற்றுத் தந்ததைப் போல் இன்றைய சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன், பொதுச்செயலாளர் சற்குணன், நிர்வாகத்தை இணைத்து அரசிடமிருந்து ஆக்கிரமிப்பை அகற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா