Monday 24 December 2012

படித்ததில் பிடித்தது!



R.பத்மநாபன் 261\L054
தலைவர், உழைப்போர் உரிமைக் கழகம்

      இளைஞன் ஒருவன் தத்துவஞானி சாக்ரடீசை சந்தித்தான். எனக்குப் பரந்த அறிவும், வெற்றியும் வேண்டும். அதற்கான வழிகளைச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

      சாக்ரடீஸ் அவனைப் படகில் கடலுக்குள் அழைத்துச் சென்று தண்ணீரில் தூக்கிப் போட்டார். நீச்சல் தெரியாத அவன் மூச்சுத்திணறி மேலே வந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறினான்.


      அவனைக் காப்பாற்றிய சாக்ரடீஸ் ``நீ நீரில் மூழ்கி இறந்து விடுவோமா இறந்து விடுவோமா என்று பயத்தில் காற்றை சுவாசிக்க எப்படிப் போராடினாய்? அந்த வேகத்தை அறிவைப் பெறவும், வெற்றிக்காக உழைப்பதிலும் காட்டு. வெற்றி தானாய் உன்னை வந்தடையும்'' என்றார்.

      ஆம்! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா