Tuesday 25 December 2012

மருந்தில்லா மருத்துவம்



B.டில்லி 264/L602 சித்த வைத்தியர் - 8122309822

`அரச மரத்தைச் சுற்றி அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்பார்கள். தற்போது நவீன மருத்துவ உலகில் இலட்சங்களைச் செலவு செய்து விட்டு குழந்தைக்காக ஏங்கி நிற்கும் தம்பதிகளுக்கு இந்த முதுமொழியில் தீர்வு இருக்கிறது என்பதே சித்தர்களின் கூற்று. அரச மரத்தின் மகத்துவம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். தற்போது குழந்தைகள் இல்லாத தம்பதிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் காண்போம்.

      குழந்தை இல்லாத தம்பதிகள் இருவரும், அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் (பிரம்ம முகூர்த்த நேரம்) 30 நிமிடத்திலிருந்து 60 நிமிடம் வரை (நேரத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்) கணவனும் மனைவியும் போட்டிருக்கும் உடையுடன் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு ஈர உடையுடன் அரச மரத்தைச் சுற்றி வர வேண்டும். ஈரத்துணி காயும் வரை சுற்றி வர வேண்டும். அப்போதுதான் உடலில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்சைடு (கரியமில் வாயு) வெளியேறி ஆக்சிஜன் (பிராண வாயு) இரத்தத்தில் கலந்து உறுப்புகளின் செயல்பாடுகள் சரியாகும். அதே நேரத்தில் கணவனும் மனைவியும் அரசமரத்தை எதிரெதிர் திசையில் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் கணவனும் மனைவியும் நேருக்கு நேர் சந்திப்பது போல் இருக்க வேண்டும். இந்த நடைமுறையை 48 நாட்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு இல்லற சுகத்தில் ஈடுபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும். இது மட்டுமா? அரச மரம் சர்க்கரை நோயுக்கும் அருமருந்து.
      நம் தொழிலக நண்பர் ஒருவருக்கு இதை நான் சொல்லி, அவர் வேலை செய்யும் நேரத்திற்கு ஏற்றபடி நேரத்தை மாற்றி, மரத்தடியில் உட்கார்ந்தே ஒரு சில வாரங்களில் தன்னுடைய உடலில் இருந்த சர்க்கரை வியாதியை (20 வருடமாக இருந்த நோய்) குறைத்துக் கொண்டதாகக் கூறினார்.
      அரச மரத்தடியில் உட்கார்ந்து இருக்கலாம், யோகாசனம் செய்யலாம், நடக்கலாம், தியானம் செய்யலாம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம். நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். ஏன் என்றால் காலை நேரம் தவிர மற்ற நேரங்களில் காற்றில் மற்ற கழிவுகள் கலந்துவிடும்.
      நாட்டு மக்களுக்கு அரசன் எப்படி நன்மையைச் செய்வானோ அதுபோல நாட்டு மக்களுக்கு நன்மையைச் செய்யும் அரசன்தான் அரசமரம்.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா