Tuesday, 25 December 2012

அக்கம்பக்கம்



கான்வாய் டிரைவர்கள் (சிஐடியு) சங்கத்தின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்

      அசோக் லேலண்ட் நிறுவனம் உருவான நாளில் இருந்து, அசோக் லேலண்டில் உற்பத்தியாகும் வண்டிகளை பங்களாதேஷ், நேபாளம் வரை கொண்டு சேர்க்கும் பணியை கான்வாய் தொழிலாளர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் சங்கம் வைத்து இந்தப் பணி நிரந்தரத் தன்மை வாய்ந்தது என்று தங்களை நிரந்தரப் படுத்தக் கோரினர்.
ஆனால் அசோக்லேலண்ட் நிறுவனம் நேரடியாக தொழிலாளர்களுக்கு வண்டிகளை வழங்கும் நிலையை நிறுத்தி காண்டிராக்டில் விட முயற்சித்தது. இதை எதிர்த்து அத்தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றம், அசோக் லேலண்டில் உற்பத்தியாகும் வண்டிகளில், இப்போது தொழிற்சங்கத்தில் இருக்கும் கான்வாய் டிரைவர்களுக்கு 50% வண்டிகள் வழங்க வேண்டும். அத்தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் கான்வாய் டிரைவர்களுக்கு 50% வண்டிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனம் அத்தொழிலாளர்களுக்கு வண்டிகளை வழங்க மறுத்து டிரெய்லர்களை அனுப்ப முயற்சிக்கிறது.
      பல்லாண்டுகளாக நிறுவன வளர்ச்சிக்காக உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வரும் கான்வாய் டிரைவர்களின் வேலைக்கு நிர்வாகம் உலை வைப்பது சரியல்ல. அசோக் லேலண்ட் நிறுவனம் நீதிமன்றத் தீர்ப்பின்படி 50% வண்டிகளை கான்வாய் டிரைவர்களுக்கு வழங்கிடவம், அத்தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பும் உத்தரவாதமும் அளித்திடவும்  வேண்டும். அதுவே அசோக் லேலண்ட் நிறுவன வளர்ச்சிக்காக, உழைத்து வரும் அத்தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும்.

ஏசிசிஎல் சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது...
ஏசிசிஎல் நிறுவனத்தை அசோக் லேலண்ட் நிர்வாகமே ஏற்று நடத்திடவும், அசோக் லேலண்ட் நிர்வாகம், ஏசிசிஎல் சங்கத்திற்கு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கிடவும், ஏசிசிஎல் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 7.11.2012 முதல் 10.11.2012 வரை 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 26.11.2012 அன்று தாசில்தார் அலுவலகம் முன் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொழில் தாவா எழுப்பப்பட்டு தொழிலாளர் நல ஆணையர் முன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மிகப் பெரிய அரசியல் போராட்டமாக ஏசிசிஎல் போராட்டம் மாறுவதற்கான சூழ்நிலை உள்ளது. ஏசிசிஎல் சங்கத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் லேலண்ட் தொழிலாளர்கள் முழு உத்வேகத்துடன் ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
- ஏசிசிஎல், சிஐடியு ஆதரவாளர் குழு, கும்மிடிப்பூண்டி

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா