M. ஆதிகேசவன்
264\J066
செப்டம்பர் 4 அன்று புதுடில்லியில்
நடைபெற்ற தொழிலாளர் தேசிய மாநாட்டில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், வங்கி, காப்பீடு,
பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் பொதுத்துறை மைய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டு பிப்ரவரி 28, 2012ல் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை பரிசீலித்தது. பத்து கோடி பேர்
பங்கேற்ற அந்த வேலை நிறுத்தம். இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.
நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த முறை கூடாது. தொழிற்சாலையிலோ நிறுவனத்திலோ
பணியாற்றும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பயன்கள் ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் (சம வேலைக்கு சம ஊதியம்). காண்டிராக்ட்
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.10,000\- வழங்க வேண்டும். விலைவாசிப் புள்ளி
அதில் இணைக்கப்பட வேண்டும். போனஸ் உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். கிராஜிவிடியின் அளவு
உயர்த்தப்பட வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் உத்தரவாதப் படுத்த வேண்டும். விண்ணப்பித்த
45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளோடு
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திடவும், மக்கள் துயரைத் தீர்த்திடவும் நடைபெற்ற பிப்ரவரி
28 வேலை நிறுத்தத்தில் ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ். உட்பட அனைத்து சங்கங்களும் பங்கேற்றன.
இதே கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் 18, 19 _ சிறை நிரப்பும் போராட்டம்,
டிசம்பர் 20, நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி, பிப்ரவரி 20, 21 இரண்டு நாட்கள் பொது வேலை
நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா