Thursday 21 February 2013

இசையால் வளமாகும் கற்பனைத்திறன் - பாகம் 10


உரிமைக்குரல்: மேடைக் கச்சேரிகள்  பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?
ஜெ.எஸ்.: மேடைக் கச்சேரிகள் இரைச்சலின் கூடாரமாக மாறிவிட்டன என்பது அனைவரும் அறிந்ததுதான். சங்கீதமும், சாகித்தியமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கண்ணைப் பறிக்கும் விளக்குகளின் அர்த்தமில்லாத நடனங்களும், விரசமான நடன அமைப்புகளுமே பிரதானப் படுத்தப்பட்டு விட்டன என்பது வருத்தத்திற்குரியது. விதி விலக்குகளும் உண்டு.
இன்று எந்தத் திருமண மண்டபத்தில் நிம்மதியாகப் பேச முடிகிறது? யோசித்துப் பாருங்கள். இசை, மனித மனதை அமைதிப்படுத்த வேண்டும். வெற்றுக் கூச்சல்கள் - மூளையையும், இதயத்தையும் மழுங்கடிக்கக் கூடியவை. நம் இசைக் கச்சேரிகளின் - ஸ்பீக்கர்களின் டெசிபல்கள் இதயத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக பாதிக்கக் கூடியவை. ஆனால், சிறந்த பாடகர்கள், பாடகிகள் மேடைக் கச்சேரிகளில் இருந்து வந்தவர்கள்தான்.
      நர்ன்ய்க் ஓய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் - நர்ன்ய்க் ஈங்ள்ண்ஞ்ய் இரண்டுமே மேடைக் கச்சேரி அமைப்பாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். இவை இரண்டையும் முறைப்படுத்திவிட்டாலே, தரமான இசைக்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்.
      ஓஹழ்ர்ந்ங் - நங்வ்ன்ங்ய்ஸ்ரீங் போன்ற தொழில் நுட்பங்கள் மிக அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும். 100% ஙஹய்ன்ஹப் டங்ழ்ச்ர்ழ்ம்ஹய்ஸ்ரீங் அருகி வருவது, நல்ல சங்கீதத்திற்கு அழகல்ல!              ... (வளரும்)

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா