நம் அன்றாட அலுவல்களில் ஒரே
விதமான அசைவுகளால் உடல் பழக்கப்பட்டு, நாளடைவில் உடலில் ஒரு இயந்திரத்தனமான
இயக்கம் பெரும்பாலோருக்கு அமைந்து விடுகிறது. ஆதலால் நம் உடலின் முழுமையான ஆற்றல் படிப்படியாகக்
குறைந்து வருகிறது.
ஆகவே, நண்பர்களே!
உடல் நலனைக் காக்க நாம் சிறு சிறு அசைவுகள் மூலம், நம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்
கொள்ள முடியும். அதற்கு மூச்சுப் பயிற்சி இன்றியமையாத தேவையாக உள்ளது. மூச்சை ஏற்றி, இறக்க
உள்ளிழுப்பு,
வெளியேற்றப் பயிற்சி நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
நாம் மேற்கொள்ளும் மூச்சுப்
பயிற்சி தொடக்கத்தில் இருந்து மூன்று கட்டங்களைக் கடந்து முடியும் சுதர்சனக்ரியா எனும்
பெயர் கொண்டதாகும்.
முதல் நிலை மூன்று கட்ட பிராணாயாமம்
(இடுப்பு,
தோள், மார்பு). இரண்டாவது நிலை பஸ்க்ரிகா என்னும்
மூச்சுப் பயிற்சி. மூன்றாம் நிலை குறிப்பிட்ட கால அளவுடன் நீண்ட மூச்சு, நடுமூச்சு, குறுகிய
மூச்சு பயிற்சி.
இதைப் பயின்றால் நுரையீரலின்
ஆற்றல் மேம்படும். நச்சுக் காற்று முழுமையாக வெளியேற்றப்படும்.
சுதர்சன க்ரியா என்னும் இந்த
மூச்சுப் பயிற்சி வாழும் கலை மையங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா