-
ஏ.சி.சி.எல்.: 9.1.2012 அன்று ஏ.சி.சி.எல். தொழிற்சங்கம், நிர்வாகத்திற்கிடையில் நடந்த பேச்சுவார்த்தை முன்னேற்றகரமான முறையில் இருந்தது. ஏ.சி.சி.எல். சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் மற்றும் பொதுச்செயலாளர், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அசோக்லேலண்ட் இந்துஜா குழுமத்தின் இ.டி. திரு.உதயசங்கர், மற்றும் ஏ.சி.சி.எல். தொழிலகத்தின் ஹார்டுராக் நிறுவன உரிமையாளர் திரு.தரம்வீர்சிங் மற்றும் ஏ.சி.சி.எல் முன்னாள் சி.இ.ஓ. திரு.எஸ்.என்.பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உற்பத்தி நின்று போயிருந்த கம்பெனியை நடத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக வங்கிக்கடன் உதவியை நாடி இருப்பதாகவும் திரு.தரம்வீர்சிங் தெரிவித்துள்ளார். தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிச் சூழலிலும், தொடர்ச்சியாக முயன்று ஏ.சி.சி.எல்.-ல் உற்பத்தி துவங்க பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்ற தோழர் டி.என்.நம்பிராஜன் தலைமையிலான சங்கத்தைப் பாராட்டுகிறோம்.
ஓசூர் லேலண்ட் யூனிட்-1 செய்திகள்: கடந்த 2009 குசேலனின் ஒப்பந்தத்தில் 48% உற்பத்தித் திறன் உயர்வுக்கு குறைந்த ஊதிய உயர்வே தந்து நிர்வாகம் தொழிலாளர்களை வஞ்சித்தது. தற்போதைய ஒப்பந்தத்தின் போதும் குறைந்த ஊதிய உயர்வுக்கு அதிகப்படியானத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நிர்வாகம் முயற்சிக்கிறது. அதற்கு பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் விற்பனை மந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கிறது. தொழிலாளர்களை பிளவுப்படுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து குறைந்த ஊதிய உயர்வுடன் ஒப்பந்தத்தை முடிக்க நினைக்கிறது. நிர்வாகத்தின் சதிகளை முறியடித்து நல்ல ஒப்பந்தம் அமைய சங்கம் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. சங்கத்தின் முயற்சி வெற்றி பெறும். - சிஐடியு ஆதரவாளர்கள் குழு, ஓசூர் லேலண்ட் யூனிட் - 1ஓசூர் லேலண்ட் யூனிட்-2 செய்திகள்: 30.1.2013 அன்று சங்கத் தலைவர் மைக்கேல்ஆ.பெர்ணாண்டஸ் தலைமையில் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், நிர்வாகத் தரப்பிலிருந்து ரூ.1,000\- தரப்பட்டது. ஆக மொத்தம் இது வரை ரூ.2,000\- ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைத் தொடர்கிறது.கார்போரண்டம் யூனிவர்சல்: சங்கத் தேர்தலில் போட்டியிட்ட சிஐடியு தலைவர் தோழர் ஏ.ஜி.காசிநாதன் அவர்கள் தலைமையிலான அணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திரு.பூபதி அவர்கள் தலைமையிலான அணி தோல்வி! (தோழர் ஏ.ஜி.காசிநாதன் - 212 வாக்குகள், திரு.பூபதி - 59 வாக்குகள்
Thursday, 21 February 2013
அக்கம்பக்கம்
Labels:
2013 02 February,
அக்கம்பக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா