Showing posts with label அக்கம்பக்கம். Show all posts
Showing posts with label அக்கம்பக்கம். Show all posts

Sunday, 21 April 2013

அக்கம்பக்கம்


ஓசூர் லேலண்ட் செய்திகள்

ஓசூர் 1ல் நிர்வாகத்துடன் நடைபெற்ற ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ரூ.6000\-மும், ஓசூர்-2ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ரூ.5000\-மும் வந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Thursday, 21 February 2013

அக்கம்பக்கம்

  • ஏ.சி.சி.எல்.: 9.1.2012 அன்று ஏ.சி.சி.எல். தொழிற்சங்கம், நிர்வாகத்திற்கிடையில் நடந்த பேச்சுவார்த்தை முன்னேற்றகரமான முறையில் இருந்தது. ஏ.சி.சி.எல். சங்கத் தலைவர் தோழர் டி.என்.நம்பிராஜன் மற்றும் பொதுச்செயலாளர், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அசோக்லேலண்ட் இந்துஜா குழுமத்தின் இ.டி. திரு.உதயசங்கர், மற்றும் ஏ.சி.சி.எல். தொழிலகத்தின் ஹார்டுராக் நிறுவன உரிமையாளர் திரு.தரம்வீர்சிங் மற்றும் ஏ.சி.சி.எல் முன்னாள் சி.இ.ஓ. திரு.எஸ்.என்.பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உற்பத்தி நின்று போயிருந்த கம்பெனியை நடத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக வங்கிக்கடன் உதவியை நாடி இருப்பதாகவும் திரு.தரம்வீர்சிங் தெரிவித்துள்ளார். தற்போது தொழிலாளர்களுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிச் சூழலிலும், தொடர்ச்சியாக முயன்று ஏ.சி.சி.எல்.-ல் உற்பத்தி துவங்க பெருமுயற்சி எடுத்து வெற்றி பெற்ற தோழர் டி.என்.நம்பிராஜன் தலைமையிலான சங்கத்தைப் பாராட்டுகிறோம்.

Tuesday, 25 December 2012

அக்கம்பக்கம்



கான்வாய் டிரைவர்கள் (சிஐடியு) சங்கத்தின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்

      அசோக் லேலண்ட் நிறுவனம் உருவான நாளில் இருந்து, அசோக் லேலண்டில் உற்பத்தியாகும் வண்டிகளை பங்களாதேஷ், நேபாளம் வரை கொண்டு சேர்க்கும் பணியை கான்வாய் தொழிலாளர்கள் செய்து வந்தார்கள். அவர்கள் சங்கம் வைத்து இந்தப் பணி நிரந்தரத் தன்மை வாய்ந்தது என்று தங்களை நிரந்தரப் படுத்தக் கோரினர்.

Saturday, 13 October 2012

அக்கம்பக்கம்



அசோக் லேலண்ட் கேண்டீன் தொழிலாளர் போராட்டம் வெற்றி

      எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கேன்டீன் தொழிலாளர்கள் திருவொற்றியூர், எண்ணூர், மணலி பொதுத் தொழிலாளர் சங்கத்தில் (சிஐடியு) இணைந்து செயல்படுகின்றனர். 15 ஆண்டுகளாகப் பணிபுரியும் இத்தொழிலாளர்கள் கடந்த 6 ஆண்டுகளாக சங்கத்தில் இணைந்துள்ளனர். இத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சங்கம் ஒப்பந்ததாரருடன் பேசி பி.எப்.,, இ.எஸ்.ஐ. உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.