Thursday, 21 February 2013

விளையாட்டு என்றால் விளையாட்டா என்ன?

கே.என்.சஜீவ்குமார் - 217/37918

      விளையாட்டு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்ல; மக்களுக்கு பல நோய்களும், கலப்பட உணவுகளும் கிடைக்கும் இக்காலத்தில் அது அவசியமானதும் கூட. ஆஸ்திரேலியாவும், நெதர்லாந்தும் உலகின் ஆரோக்கியமான நாடுகளாகக் கருதப்படுகின்றன. இந்நாடுகளில் 1%க்கும் குறைவான பேர்களுக்கு மட்டுமே இதயநோய் வருகிறது. காரணம் இந்நாடுகள் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகும். ஆனால், இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கு பின் வயல்களும், ஏரிகளும் காணாமல் போவதுபோல, விளையாட்டு மைதானங்களும் ரியல் எஸ்டேட் முதலைகளின் பசிக்கு இரையாகின்றன. விளைவு, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தீய பழக்கங்களுக்கு ஆளாகும் இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளோம். உதாரணத்திற்கு, டெல்லி மாணவி கற்பழிப்பில் ஒரு குற்றவாளிக்கு வயது 17 மட்டுமே.

      100% தேர்ச்சிக்காக போட்டிபோடும் தனியார் பள்ளிகள் குழந்தைகளை கசக்கிப் பிழிந்து அவர்களின் இனிய பொழுதுகளை களவாடி விடுகின்றன. அதிகமான நன்கொடை வாங்கும் எத்தனை தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. பஉஅங -பர்ஞ்ங்ற்ட்ங்ழ் ங்ஸ்ங்ழ்ஹ்ர்ய்ங் ஹஸ்ரீட்ண்ங்ஸ்ங்ள் ம்ர்ழ்ங் என்று சொல்வார்கள். அதாவது விளையாட்டு குழந்தைகளுக்கு கூடி வாழவும், விட்டுக் கொடுக்கவும் கற்றுத் தருகின்றது.
      உலகமயமும், தாராளமயமும், தனியார்மயமும் விளையாட்டை ஒரு சரக்காகப் பார்க்கிறது. எது விற்பனை ஆகுமோ, அதை மட்டும் ஊக்குவிக்கிறது. உதாரணத்திற்கு, கிரிகெட் பெறும் வரவேற்பு மற்ற விளையாட்டுகள் பெறுவதில்லை. அதேசமயம் இக்கொள்கைகளால் ஊழலும் மலிந்துள்ளது. உதாரணத்திற்கு ஐபிஎல் ஊழல்.
      நமது நாடு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட அதே காலகட்டத்தில் விடுதலை பெற்ற சீனா 2008 ஒலிம்பிக்கை உலகம் வியக்கும்வண்ணம் நடத்திக் காட்டியதோடு அமெரிக்காவை விட அதிக மெடல்களை அள்ளியது. சீனா 51 தங்கம், அமெரிக்கா 36 தங்கம்.
      ஆனால், இந்தியா நடத்திய காமன்வெல்த் விளையாட்டுகள் ஊழலுக்கு வழிவகுத்து இந்தியாவைத் தலைகுனிய வைத்தது. கல்மாடி போன்ற சமூக நோக்கில்லாத ஊழல்வாதிகள் பொறுப்பில் இருந்தால் விளையாட்டுத் துறை எப்படி நன்றாகச் செயல்பட முடியும்?
      எனவே, விளையாட்டு நிர்வாகம் வெளிப்படையாக செயல்பட வேண்டும். அனைத்து விளையாட்டு அமைப்புகள் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
      பி.டி.உஷா, மேரி கோம், சாய்னா, மல்லேஸ்வரி போன்ற பெண்கள் நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். எனவே, பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட அரசாங்கம் தேவையான ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.
      எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலின் ஊற்றுக்கண்ணான தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவற்றை விடுத்து விளையாட்டுத் துறையில் அரசின் முதலீடு அதிகரிக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான வருங்கால இந்தியாவை உருவாக்கும். இது விளையாட்டைப் பற்றிய விஷயம் என்றாலும் விளையாட்டான விஷயம் அல்ல.

No comments:

Post a Comment

கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா