K.N.சஜிவ்குமார்,
217/37918
``கிரிக்கெட் எங்களது மதம், சச்சின்
எங்களது கடவுள்.'' என்கிற புகழ்பெற்ற வாசகம், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பரவலாகச் சொல்லப் படுவதுண்டு. அந்தளவுக்கு கிரிக்கெட் நம்மை ஆட்கொண்டுள்ளது.
``டச்சு'' மொழியில் ``கிரிக்'' என்றால் ``கோல்''.
பழங்காலத்தில், இப்போதைய ஸ்டம்புக்குப் பதிலாக
ஏறக்குறைய அதே அமைப்புடைய ``விக்கெட்'' பயன்படுத்தினர். எறியப்படும் பந்து விக்கெட்டில் படாமல் தடுக்க கோலைப் பயன்படுத்தியதால்,
இது கிரிக் + விக்கெட் = கிரிக்கெட் ஆனது என்று கூறுவர். 1550ல் சர்ரே என்ற இடத்தில் கிரிக்கெட் விளையாடியதற்குச் சான்றுகள் உள்ளன. ஆங்கிலேயர்
ஆண்ட அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விதைக்கப்பட்டு, அவர்தம்
பண்பாட்டின் பாகமாகவே மாறிப்போனது. கோமான்களும், அரச குடும்பத்தினரும்
விளையாடும் பொழுதுபோக்கானது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட்ஷா ஆங்கிலேயரிடம்
இருந்த வெறுப்பினால் இதை ``முட்டாள்களின் விளையாட்டு''
என்று கிண்டலடித்த கதையும் உண்டு.
இந்தியாவில் கிரிக்கெட் நுழையக் காரணம் `கிழக்கிந்திய கம்பெனி'. இந்தியாவில் முதலில் கிரிக்கெட்
விளையாடப்பட்டது 1721ல் பரோடாவில்தான். அதற்குப் பின் 1799ல் திப்பு சுல்தானை வென்ற ஆங்கிலேயர்கள், தென் இந்தியாவில்
செரிங்கப்பட்டினம் என்ற ஊரில் இரண்டாவது கிளப்-ஐ உருவாக்கினர்.
1864ல் மெட்ராஸ் மற்றும் கல்கத்தா அணிகளுக்கிடையே முதல்தர கிரிக்கெட்
போட்டி முதல் முறையாக நடந்தது. அந்த காலக்கட்டங்களில் பார்சி அணிதான் வலுவான அணியாகத்
திகழ்ந்தது. 1928ல் பி.சி.சி.ஐ. உருவாக்கப்பட்டது. 1932ல் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ரஞ்சித் சிங்ஜி, துலீப் சிங்ஜி போன்ற ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து அணிக்காக
விளையாடினர்.
தமிழ்நாட்டில் கிரிக்கெட் பிரபலமாவதற்கு புச்சிபாபு
நாயுடு என்பவர் காரணமானார். பாரி கம்பெனிக்கு துபாஷியாக இருந்த இவர் ``எஸ்பிளனேட்'' பகுதியில் மெட்ராஸ் யுனைட்டட் கிரிக்கெட்
கிளப் என்பதை ஆரம்பித்தார்.
1908ம் ஆண்டுக்கு முன்னர் சேப்பாக்கம் மைதானத்தின் ஙஇஇ
பெவிலியனில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் வெள்ளையர்கள் கிளப்புக்குள்
அமர்ந்து உணவு உண்ணுவர், ஆனால அடிமை இந்தியர்கள் மரத்தடியில்
உணவு உண்ணுவர். இதை மாற்றி இந்தியர்களும் சுயமரியாதையுடன் ஙஇஇ பெவிலியனைப் பயன்படுத்தக்
காரணமானவர் புச்சிபாபு நாயுடு.
அவரது நினைவாக இன்றும் சென்னையில் வருடந்தோறும் ஒரு
கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கவாஸ்கர், கபில்தேவ் போன்ற
ஜாம்பவான்கள் இதில் விளையாடியுள்ளனர்.
இன்று கிரிக்கெட் பெரும் பணக்காரர்களிடமும்,
சூதாட்டக் காரர்களிடமும் சிக்கி வணிகமயமாக்கப்பட்டாலும், அதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.
No comments:
Post a Comment
கண்ணியக்குறைவான மறுமொழிகள் வெளியிடப்படமாட்டா